யட்சன்
##~##

ம்பவம் நடந்த இடத்தை போலீஸ் வாகனங்கள் மொய்த்திருந்தன. இன்ஸ்பெக்டர் துரை யரசன் சரமாரியாக உத்தரவிட் டுக்கொண்டிருந்தார். இறந்து கிடந்த மூவரும், கவிழ்ந்துகிடந்த காரும் வெவ்வேறு கோணங்களில் டிஜிட்டல் பிம்பங்களாக போலீஸ் கேமராவில் சிறைபட... தடயவியல் நிபுணர்கள் சுறுசுறுப்பாக இயங் கிக்கொண்டிருந்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''இங்க ஒரு காரு கவுந்துகெடக்கு... அங்க ஒரு காரு எந்தச் சேதமும் இல்லாம நிக்குது... ரெண்டு வண்டிக்கும் ஓனர் யாரு? எங்கேர்ந்து வந்தாங்க? விவரம் விசாரிங்க.''

கவிழ்ந்துகிடந்த காருக்குள் இருந்து கான்ஸ்டபிள் ஒருவர் மெள்ள வெளியே வந்தார்.

''சார், உள்ள கிடந்துச்சு...'' என்று ஒரு கைக்குட்டையைப் பிரித்துக் காட்ட, ரத்தம் தோய்ந்த ஒரு ரிவால்வர். மெருகு தேய்ந்த ஒரு பர்ஸ். துணியோடு வாங்கினார் துரையரசன். தன் விரல் ரேகைகள் படாமல் பர்ஸைக் கவர்ந்து, திறந்து பார்த்தார். 256 ரூபாய். ஒரு பெண்ணின் புகைப் படம். புகைப்படத்தை உருவித் திருப்பினார்.

'செந்திலுக்கு ஆயிரம் முத்தங்களுடன்... தீபா’ என்று அழகான கையெழுத்து.

''செந்தில் யாரு? செத்துக்கிடக்கறவன்ல ஒருத்தனா..? இல்ல,  சாகடிச்சுட்டு ஓடினவனா..? இந்த தீபா யாருன்னு கண்டுபிடிங்க.''

மேற்கு மாம்பலம். ஆட்டோவிலிருந்து அவர்கள் இறங்கியபோதே, வாசல் கதவைத் திறந்தாள் சாவித்திரி. அவள் முகத்தில் உண்மையான சந்தோஷம்.

''டேய் பாரி... டி.வி-ல பார்த்தேன். ஷங்கர் தயாரிப்புல படம். சொல்லாமலே வெச்சிருந்து பெரிய ஆளாயிட்ட?''

''நடக்கற வரைக்கும் எனக்கே தெரியாதுக்கா...'' என்றபடி உள்ளே நுழைந்தான் பாரி. ''எனக்குன்னு யாரும் இல்ல... ஆசீர்வாதம் பண்ணுக்கா...'' என்று தரையில் நெற்றிபட விழுந்தான்.

சாவித்திரி பதறி அவனை எழுப்பி னாள். ''நல்லா வருவடா...'' என்றாள் கண்கள் பனிக்க.

''இன்னிக்கெல்லாம் இதே பொழப்பு இவருக்கு. ரஜினி திரும்பினா, நிமிர்ந்தா, கால்ல விழுந்துடு வாரு இவரு...'' என்று நக்கலடித்தாள் தேவி.

யட்சன்

''உக்காரு, காபி கொண்டுவரேன்...''

சாவித்திரியும் தேவியும் உள்ளே போய்விட, பாரி ஜன்னலை அண்டி, தெருமுனையில் இருந்த உடற்பயிற்சி மையத்தை நோட்டமிட்டான். நிறையத் தலைகள் தெரிந்தன. அங்கு ஒரு பரபரப்பு தொற்றியிருந்தது. நாகுவைக் காணவில்லை. நாகுவின் தம்பி லோகு, தன் தோழர்களுடன் மும்முரமாக எதையோ விவாதித்துக்கொண்டுஇருப்பது தெரிந்தது.

'செந்தில் இப்போது எங்கே இருக்கிறான்? ஆதிமூலத்திடம் சிக்கிக்கொண்டானா? அல்லது தப்பித்துவிட்டானா? ஒருவேளை செந்தில்திரும்பி விட்டால், டைரக்டர் மனம் மாறிவிடுமா?’

ஜோசப், டைரக்டர் ஷங்கரின் முன் பணிவுடன் நின்றான்.

''சார், செந்திலை கான்டாக்ட் பண்ணவே முடியல. ஏதாவது காரணம் சொல்லிட்டு, நாளைக்கு வந்தா என்ன செய்யறது?''

''பாரி நல்லாத்தான் பண்றான். மீடியாவுக்கெல் லாம் பப்ளிசிட்டி குடுத்தாச்சு. குழப்பம் வேண் டாம் ஜோசப். அந்தப் பையன் அப்படி வந்தா, அடுத்த படத்துல வாய்ப்பு தர்றோம்னு சொல்லி அனுப்பிரு'' என்றார் ஷங்கர் உறுதியான குரலில்.

''என்னடா ஆச்சு..?'' என்றார் ஆதிமூலம், கரகரத்த குரலில். ஐந்தடி உயரம். மடித்துக் கட்டிய வேட்டி. கையில்லாத பனியன். கழுத்தில் அடர்த்தியான தங்கச் சங்கிலி. மூக்குக்குக் கீழ் ஆரம்பித்து, கன்னத்தில் பெரும் பகுதியை ஆக்கிரமித்த வீரப்பன் மீசை.

''நாகுவைப் போட்டுத் தள்ளிட்டாங்கண்ணா!'' என்றான் எதிரில் மரியாதையுடன் நின்ற லோகு. அவனது கண்கள் ஆத்திரத்தாலும், அவசரமாக உள்ளே இறக்கிய சரக்காலும் சிவந்திருந்தன.

''ஒரே கேரா இருக்குதுண்ணா... கைலாசம் நம்ப தலைக்குக் குறிவெச்சிருக்கான். அவனையே முடிச்சிட்டு வரேன்னுதான் அண்ணன் காலைல பூமணியோட புறப்பட்டுப் போனாரு. அந்தத் துரோகிதான் கைலாசம் குரூப்கிட்ட எங்க அண் ணனை வித்திருப்பான். அவனையும் அவங்க விட்டுவைக்கல. எங்க அண்ணனைக் கொன்னவங்களைச் சும்மா விடக் கூடாதுண்ணா!''

ஆதிமூலம் பக்கத்தில் கையை நீட்டினார். ஒரு செல்போன் வந்தது. டயல் செய்தார்.

''என்ன எத்திராஜ், என்ன செய்யுது உங்க டிபார்ட்மென்ட்? என் தளபதியைப் போட்டுத் தள்ளியிருக்காங்க. யாரு, என்னன்னு கண்டுபிடிச்சீங்களா, இல்லையா..?''

மறுமுனையில் குரல் ரகசியமாக ஒலித்தது.

''விசாரிச்சுட்டு இருக்கோம். குவாலிஸ் காரை ஓட்டிவந்தவன் பேரு மாரிமுத்து. பூமணியோட ஆளு. டிராவல்ஸுக்கு ஓட்டறவன். இன்னொரு கார் நாகு பேர்லதான் ரெஜிஸ்டர் ஆயிருக்கு...''

அவன் அங்க கோயிலுக்கு வந்தான்னு சொல்லிக் கலாம். எதிர் பார்ட்டி யாரு? கைலாசம் குரூப் ஆளா?''

''நாகுவோட சட்டை, அவனைக் கொன்ற துப்பாக்கி, குவாலிஸ் காரு, ஒரு பர்ஸ் எல்லாத் திலேயும் ஒரு கைரேகை தெளிவா கிடைச்சிருக்கு. செக் பண்ணிட்டிருக்கோம். வந்தவன் பேரு செந்திலு. திருவல்லிக்கேணி மேன்ஷன்ல தங்கிஇருக்கான்னு விவரம் கிடைச்சிருக்கு. இன்ஸ்பெக்டர் விசாரிக்கப் போயிருக்காரு. முழு விவரமும் கிடைச்சஉடனே நானே போன் பண்றேண்ணே!'

''அந்த செந்தில் எனக்கு உயிரோட வேணும், ஞாபகம் வெச்சுக்க!'' என்று உறுமினார் ஆதிமூலம்.

- தடதடக்கும்