Election bannerElection banner
Published:Updated:

''ஹலோ... நான் குப்பைத்தொட்டி பேசுகிறேன்...''

''ஹலோ... நான் குப்பைத்தொட்டி பேசுகிறேன்...''

காரமடை கள்ளழகர்!

''ஹலோ... நான் குப்பைத்தொட்டி பேசுகிறேன்...''

கோவையின் தவிர்க்க முடியாத விழாக்களில் ஒன்று காரமடை தேர் உலா! மதுரைக்கு கள்ளழகர் எப்படியோ அப்படி கோவைக்கு அரங்கநாதர். கடந்த வாரம், 'ரங்கா ரங்கா வா... வா... கோவிந்தா கோவிந்தா வா... வா...’ என்று பக்தர்கள் கோஷத்துடன் ரங்கநாதர் தேர்த் திருவிழா அரங்கேறியது.

கொங்கு மண்டலத்தின் வைணவத் திருத்தலங்களில் முக்கியமானது காரமடை அரங்கநாதர் கோயில். இதன் தேர் உலாவின்போது லட்சக் கணக்கான பக்தர்கள் உள்ளூரில் இருந்தும் கர்நாடகா மற்றும் கேரளாவில் இருந்தும் காரமடையில் குவிகிறார்கள். அப்போது தேன், பழம், கற்கண்டு, சர்க்கரை, தேங்காய் துண்டு கலந்த ஒருவித இனிப்பை சுவாமியை நோக்கி எறிகிறார்கள். மறுநாள் பரிவேட்டை மற்றும் ஜமாப் நடைபெறும். ஜமாப்பின் போது பக்தர்கள் பரவச நிலை அடைந்து தங்களை மறந்து ஆடிப் பாடுகிறார்கள்.

காரமடை தேர்த் திருவிழாவுக்குப் பல நாட்கள் முன்பே பக்தர்கள் தீப் பந்தம் ஏந்தி, ஒவ்வொரு கிராமமாகச் செல்கின்றனர். சேவக தாசர்கள் என்று அழைக்கப்படும் இவர்கள், காலில் சலங்கை கட்டி, தாரை தப்பட்டையுடன் ஆடி வர... இவர்களிடம் மக்கள் ஆசி வாங்குவது மரபாக உள்ளது!

தகவல், படங்கள்: வி.ராஜேஷ்

மரத்துக்கு மதிப்பெண்!

''ஹலோ... நான் குப்பைத்தொட்டி பேசுகிறேன்...''

ள்ளிக்கூடக் குழந்தைகளுக்கு மதிப்பெண் போடுவதுபோல, சேலத்தில் மரங்களுக்கு மதிப்பெண் போட்டு வருகிறது 'நிழல்’ அமைப்பு! கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் குழந்தைகள் கருகிப்போன சம்பவத்தைத் தொடர்ந்து உருவானதுதான் இந்த அமைப்பு. இதன் தலைவர் ஈசன் எழில்விழியன்.

'அந்த விபத்துல இறந்து போன 94 குழந்தைகளின் நினைவாக 94 மரக் கன்றுகளை நட்டு, ஒவ்வொரு மரத்துக்கும் அந்தக் குழந்தைகளோட பேரை வெச்சோம். இன்னிக்கு அந்த மரங்கள் நல்லா வளர்ந்து நிக்குது. ஒவ்வொரு மரத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப மாதந்தோறும் மதிப்பெண் போடுறோம். ஒவ்வொரு வருஷமும் குழந்தைகள் நினைவு நாள் அன்னிக்கு அந்த மரங்களுக்கு பூஜை நடத்தி அஞ்சலி செலுத்துறோம். அந்தக் குழந்தைகளோட பெற்றோர் பலர், அடிக்கடி இங்கே வந்து, தழைச்சு நிக்குற மரங்களைத் தங்களோட குழந்தைகளாகவே நினைச்சு, கட்டிப்பிடிச்சுக் கண்ணீர் விடுறாங்க... பேசறாங்க. அப்படிச் செய்யும்போது, அவங்க மனபாரம் இறங்கிடுது...'' என்கிறார் நெகிழ்வுடன்!

- கே.ராஜாதிருவேங்கடம், படம்: க.தனசேகரன்

"ஹலோ... நான் குப்பைத்தொட்டி பேசுறேன்..."

''ஹலோ... நான் குப்பைத்தொட்டி பேசுகிறேன்...''

ர்மபுரியைச் சேர்ந்த ஜெயபாண்டியன். வித்தியாச விஞ்ஞானி. இவர் இதுவரை சுமார் 128 புதுவித உபகரணங்களைக் கண்டுபிடித்துள்ளார். ஜெயபாண்டியனின் புதுமை முயற்சிகளுள் லேட்டஸ்ட், 'பேசும் குப்பைத் தொட்டி’! இந்தத் தொட்டியைக் கடக்கும்போது, 'ஹலோ, நான் குப்பைத்தொட்டி பேசுறேங்க. என்னை முறையாப் பயன்படுத்தினா, ஊர்ல யாருக்கும் நோய் பரவாது. உங்ககிட்ட ஏதாவது குப்பைகள் இருந்தா, தயவுசெஞ்சு என்கிட்ட கொண்டுவந்து கொட்டுங்க!’ என்று பேசுகிறது. தொட்டியுடன் இணைக்கப்பட்ட சென்சார், ஆட்கள் தொட்டியைக் கடக்கும்போது வாய்ப் பகுதியைத் திறக்கவைத்து வசனம் பேச வைக்கிறது. கவனத்தில் கொள்ள வேண்டிய கண்டுபிடிப்புதான்!

- எஸ்.ராஜாசெல்லம்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு