Published:Updated:

தீயை மூட்டும் தியா!

தீயை மூட்டும் தியா!

தீயை மூட்டும் தியா!

தீயை மூட்டும் தியா!

தியா. கோவை பாய்ஸ்களின் இதயத்தில் தீயைப் பற்றவைக்கும் யூ டி.வி-யின் தொகுப்பாளினி. 2009-ம் ஆண்டில் மிஸ் கோவையான அழகு தேவதை. இப்போது கோடம்பாக்கத்திலும் கால்பதித்து இருக்கிறது குருவி! 'காந்தி கணக்கு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். 'என்ன கேரக்டர்?’ என்று கேட்டால், 'வெண்திரையில் காண்க...’ என்று சஸ்பென்ஸ் கூட்டுகிறார். பள்ளிகூடம் படிக்கும்போதே சேனல் உலகத்துக்கு வந்துவிட்டாராம் தியா. இப்போது பாப்பா படிப்பது பி.பி.எம். முதலாம் ஆண்டு. சேனல் தவிர, கோவை ரோட்ராக்ட் கிளப் ஆஃப் கோயம்புத்தூர் மில்லினியம் அமைப்பின் தலைவியாக சமூக சேவையிலும் அசத்துகிறார். தற்போது, 'காலேஜ்.காம்’ என்ற நிகழ்ச்சிக்காக கோவை கல்லூரி மாணவ, மாணவியரை வைத்து தன்னம்பிக்கை நிகழ்ச்சிகளைத் தொகுத்தளித்து வருகிறார். ''சினிமாவைவிட, மாடலிங் துறையில் சாதிக்கணும்னு ஆசை. இப்பவே சுமார் பத்து கம்பெனிகளுக்கு மாடலிங் பண்ணிட்டு இருக்கேன். இருந்தாலும், ஆல் இண்டியா லெவல்ல வரணும்'' என்று தனது ஆசையைச் சொல்லும் தியாவுக்கு, நாட்டுக் கோழி பிரியாணி என்றால் ரொம்ப இஷ்டம்!

தித்திக்கும் தீப்தி!

தீயை மூட்டும் தியா!

யூ டி.வி-யின் தீப்தி இனிக்க இனிக்கப் பேசுகிறார்! இவர் 'வாய்ஸ் ஆஃப் ஸ்கூல்’ என்ற நிகழ்ச்சியைப் பள்ளிக் குழந்தைகளைவைத்து தொகுத்து அளிக்கிறார். பொண்ணுக்கு தமிழ் பேச்சு அட்சர சுத்தம்! இதனாலேயே கோவைக்கு எந்த வி.ஐ.பி. வந்தாலும் நேர்காணலுக்கு அனுப்பிவிடுகிறார்கள். ''சூர்யா, ஜோதிகான்னு நிறைய சினி ஸ்டார்ஸை இன்டர்வியூ பண்ணி இருக்கேன். அப்போதைக்கு மனசுல என்ன தோணுதோ அதை அவங்க மனசு கோணாமக் கேட்டுடுவேன். லைவ் புரொகிராம் நிறையப் பண்ணுறதால, டைமிங்கா பேசிச் சமாளிச்சு டுவேன்...'' என்கிற தீப்தி, இன்னொரு பக்கம் ஃபேஷன் ஷோ, ரேம்ப் வாக் என செம பிஸி. வெளியே தெரியாத இன்னொரு விஷயம், தீப்தி ஒரு ஃபேஷன் டிசைனர். தனது குடும்பத்துக்கு உடைகளைத் தைப்பது இவர்தானாம்!  

'வணக்க்க்க்கம்'

தீயை மூட்டும் தியா!

ர்மபுரியின் லோக்கல் சேனலான 'சேன்’ டி.வி-யின் செய்தி வாசிப்பாளர் கீதாகண்ணன். அச்சு அசலாக சன் டி.வி. செய்தி புகழ் 'நிர்மலா பெரியசாமி’ குரலில் கீதா போடும் 'வணக்க்க்க்கம்’ ஏரியாவில் பிரபலம். ஆடியோ விளம்பரத்துக்கு வாய்ஸ் கொடுப்பதிலும் அம்மணியை அடித்துக்கொள்ள ஆள் இல்லை. செய்தி வாசிப்பது, மேடை நிகழ்ச்சி களைத் தொகுத்துக் கொடுப்பது மட்டுமல்ல... சுற்றுவட்டார திருவிழாக்களில் நடக்கும் பட்டிமன்றப் பேச்சிலும் மேடம் கில்லி!

''பொது இடங்கள்ல நான் போறப்ப சில டீன் டிக்கெட்ஸ் 'வணக்க்க்க்கம்’னு கிண்டல் அடிச்சுட்டு ஓடிடுவாங்க. அதை நான் கிண்டலா எடுத்துக்கிறது இல்லை. பாஸிட்டிவ்வாகத்தான் எடுத்துக்கிறேன்'' என்பவர், ஒரு சினிமா படத்திலும் நடித்து வருகிறாராம்!

படங்கள்: வி.ராஜேஷ்

அடுத்த கட்டுரைக்கு