Published:Updated:

தமிழ் பேசிய கிளிகள்!

ஈரோடு

##~##
ரோட்டுவாசிகள் நிச்சயமாக இப்படி ஒரு கண்காட்சியை எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள்! அரிய வகை குதிரை, ஆடு, மாடு, நாய் மற்றும் செல்லப் பிராணிகளுக்காக நடத்தப்பட்ட பிரத்யேகக் கண்காட்சி இது.

ஈரோட்டைச் சேர்ந்த 'வி வின் ஈவென்ட் கிரியேட்டர்ஸ்’ மற்றும் கோவையைச் சேர்ந்த 'பெட்ஸ் பிரீடர்ஸ் கிளப்’ அமைப்புகள் இணைந்து இந்தக் கண்காட்சியை நடத்தின.

தமிழ் பேசிய கிளிகள்!

மைதானத்தின் உள்ளே நுழைந்தால் சர்க்கஸ் எஃபெக்ட்! விதவிதமான பறவைகளின் 'கீச்... கீச்...’, ஆடு, மாடுகளின் 'ம்மே...’ 'மா...’ நாய்களின் குரைப்புகள்... எனக் கலவையான சத்தம். இன்னொரு பக்கம் நிஜமாகவே கிளிகள் தமிழ் பேசிக்கொண்டு இருந்தன. பேச்சுநடையைப் பொறுத்து விலை எகிறுகிறது!

இங்கு வந்ததும்தான் தெரிந்தது, ஆடுகளில் இத்தனை வகைகளா என்று. யானைக் காதுகளுடன்... பக்கவாட்டில் துருத்திக்கொண்டு இருக்கும் கொம்புகளுடன்... மிரளவைக்கும் ஆள் உயரத்தில்... என விதவிதமாக அசை போட்டுக் கொண்டு இருந்தன ஆடுகள். தென் ஆப்பிரிக்கா, ஸ்பெயின், ராஜஸ்தான், குஜராத் ஆகிய இடங்களில் இருந்து வந்த ஸ்பெஷல் அயிட்டங்களாம்.

தமிழ் பேசிய கிளிகள்!

அழிந்து வரும் அரிய இனமான காங்கேயம் காளையைச் சுற்றி பாதுகாப்புப் படை அமைத்து இருந்தார்கள். படை மாட்டுக்கு அல்ல; பார்வையாளர்களுக்கு. எப்போதும் திமிறிக்கொண்டே இருந்தது அது. இதற்கு நேர் எதிராக அமைதியாக இருந்தது காங்கேயம் பசு. இது கறக்கும் பாலின் சுவைக்கு இணை எதுவும் இல்லை என்கிறார்கள்.

அமெரிக்காவில் இருந்து வரவழைத்து இருந்தார்கள் அம்மாடியோவ் குதிரையை. ஹாலிவுட் படங்களில் தலைகாட்டியதாம். இன்னொரு பக்கம், அழகு நாய்களை ஆளுயர நாய்கள் பார்த்து ஜொள்ளுவிட்டுக் கொண்டு இருந்தன.

கண்காட்சியின் சேர்மன் டேன் ரவி. அதென்ன டேன் ரவி என்று கேட்டால், ''நாய்னா ரொம்பப் பிடிக்கும். 'டேன்’ என்பது பிரசித்தி பெற்ற நாய் இனத்தின் பெயர். அதான் டேன் ரவி...'' என்கிறார் இந்த வித்தியாசமான மனிதர்!  

 - வீ.கே.ரமேஷ் படங்கள்: க.தனசேகரன்

அடுத்த கட்டுரைக்கு