Published:Updated:

'' தூக்கத்துல நடப்பேன்!''

சமீரா ஒப்பன் டாக்

 ##~##
மு
கம் சாய்த்து, தலை கோதியபடியே எந்தக் கேள்விக்கும் செம ஸ்டைலிஷாகப் பதில் சொல்கிறார் சமீரா ரெட்டி. கோவை கல்லூரி நிகழ்ச்சி ஒன்றுக்காக 'நடுநிசி நாய்கள்’ வீராவுடன் வந்திருந்தார். 'ஐ லவ் யூ சமீமீமீ...’ என்று வகுப்பறை ஜன்னலில் தலை நுழைத்துக் கூவும் பசங்களுக்கு 'மீ டூ...’ என்று கையசைத்து உற்சாகமாகச் சிரிக்கிறார்.

''கோயமுத்தூர் கிலோ என்ன விலை தெரியுமாங்க?''

''எனக்கு கோவையைத் தெரியாதுன்னு நினைச்சீங்களா? இது என்னோட செகண்ட் விசிட். முன்னே, பெங்களூரு சிட்டி மாதிரி சில்லுனு இருந்தது. இப்போ கொஞ்சம் மாறிடுச்சுன்னு நினைக் கிறேன்!''

'' தூக்கத்துல நடப்பேன்!''

''எதுங்க... உங்க செக்ஸ் அப்பீல்?''

''என் தலைமுடிதான். யாராச்சும் டச் பண்ணுனா, செம டென்ஷன் ஆகிடுவேன்!''

''தடாலடியா த்ரில்லர்ல இறங்கிட்டீங்க?''

''ஃபார்மலான ஹீரோயினா நான் நடிச்சது இல்லையே. அதனால 'நடுநிசி நாய்கள்’ல நான் இருக்கிறதுல பெரிய ஆச்சர்யம் இல்லை. அதையும் தாண்டி கௌதம்                 மேனனோட சாய்ஸ்ல இருக்கிறது அதிர்ஷ்டம்தானே!''

''எய்ட்ஸ் தொடர்பான விளம்பரத்துல நடிக்கிற அளவுக்கு சமீரா அவ்வளவு போல்டா?''

''அதைப் பார்த்துட்டு, நாலு பேர் அந்த மக்களுக்கு நல்லது செஞ்சா... ஹேப்பி!''

''வெளியில தெரியாத உங்களைப் பற்றிய ரகசியம்?''

''தூக்கத்துல நடப்பேன். நடக்குறது மட்டுமில்லாம, யாரையாவது எழுப்பி, உட்கார்ந்து பேசிட்டு வந்து படுத்துக்குவேன். மறு நாள் காலையில அவங்க இதுபத்தி சொன்னா... 'ஹோ’ன்னு சிரிப்பேன்!''

''தமிழ்ல பெரிய ரவுண்ட் வரலையேன்னு வருத்தம் இருக்கா?''

''வருத்தம் இல்லை. ஆனா, வருவேன்னு ஹோப் இருக்கு!''

''அடுத்து?''

''பிரபுதேவாகூட ஒரு காமெடிப் படம். லிங்குசாமி டைரக்ஷன்ல வில்லேஜ் பொண்ணு கேரக்டர் பண்றேன். அச்சச்சோ டைம் ஆச்சு...''

-அரேபியன் குதிரை போல நகர்ந்து மறைகிறார் சமீரா.

- எஸ்.ஷக்தி,   ரா.கலைச்செல்வன்

அடுத்த கட்டுரைக்கு