யட்சன்
##~##

“எவனோ பாரினு சினிமால நடிக்கிற பயலைக் கூட்டிட்டு வந்து பூமணி என்னை ஏமாத்திட்டான். பூமணி டபிள் க்ராஸ் பண்றான்னு சந்தேகம் வந்து, காரை ஃபாலோ பண்ணோம். ஒளிஞ்சிருந்து பார்த்தா, திடீர்னு ஒருத்தனை ஒருத்தன் சுட்டுக்கிறானுங்க. ஆனா, இந்தப் பய அசரலியே... பூமணியைப் போட்டுத்தள்ளிட்டான். நாகுவையும் கார் ஏத்திக் கொன்னுட்டான். பாரியா இருக்கும்னுதான் கிட்ட போய்ப் பார்த்தேன். வேற பையன். விசாரிப்போம்னு தூக்கிட்டு வந்துட்டேன்' என்றான் கிருபா மன்னிப்பு கோரும் குரலில்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'நல்லது பண்ண...' என்றார் கைலாசம். தேக்குக் கதவுபோல் நல்ல உயரம், அகலம்.

'எங்க அவன்?'

'நம்ம எடத்துலதான் வெச்சிருக்கேன். நம்ம டாக்டர்தான் பாத்திட்டிருக்காரு!'

னிப்பை ஒரு விள்ளல் எடுத்து பாரி வாயில் இட்டான்.

'இனிமே உன்னைப் பாக்க நெறையப் பேரு வருவாங்க... மேன்ஷன் ரூம் சரிப்படாது. ஒரு வீடு எடுத்துத் தங்கிக்கப்பா' என்றாள் சாவித்திரி.

'சென்னை எனக்குப் புதுசுக்கா.'

'தேவி, அகத்தியர் தெருவுல ஏதோ வீடு காலியாயிருக்குன்னு பேப்பர் போடற பையன் சொல்லல..? அந்த வீட்டை இவனுக்குக் காட்டேன்.'

'சரிம்மா...' என்று தேவி சந்தோஷமாகப் புறப்பட்டாள்.

டபடவென்று சுட்டுக்கொண்டிருக்கும் இயந்திரத் துப்பாக்கிகள், 'க்ரீய்ய்ச்...’ என்று டயர் தேயத் திரும்பும் கார்கள், 'ஸ்டார்ட் கேமரா...’ என்று ஒரு குரல், 'அவனை விடாத... பிடி...’ என்று துரத்தும் காலடிகள்... என்று கதம்பமாக இரைச்சல்கள் செந்திலின் மண்டைக்குள் ஒலித்துக்கொண்டு இருந்தன. மயக்கத்திலிருந்து வெளியே வர முயன்று, அவனுடைய மூளை குழம்பித் தவித்தது. யாரோ கன்னத்தில் பட்பட்டென்று தட்ட, கனத்த இமைகளைச் சில மில்லிமீட்டர்கள் திறந்தான்.

தன் மீது குனிந்திருந்த நபரைப் பார்த்தான். கட்டம் போட்ட வெள்ளைச் சட்டை. உருண்டையான முகம். முகத்தில் தழைத்திருந்த பச்சை முகமூடி.

'உன் பேரென்னப்பா..?'

யட்சன்

'செந்தில்...' என்று பதிலை முணுமுணுப்பதற்குள் கண்கள் தாமாக மூடிக்கொண்டன.

'உடம்பு பூராக் காயம்... நிறைய ரத்தம் போயிடுச்சு. இடுப்புல எட்டுத் தையல். ரெண்டு முழங்காலுக்குக் கீழயும் ஆறேழு தையல் போட்டிருக்கேன். நல்லவேளை எலும்பு எதுவும் முறியலை'' என்றார் டாக்டர் கிளவுஸ்களைக் கழற்றிக்கொண்டே. கைலாசம் ஓரடி முன்னால் வந்து படுக்கையில்கிடந்த செந்திலைப் பார்த்தார்.

'கண்ணு அசையுது பாரு... கிருபா...'

செந்தில் இமைகளை உயர்த்தி, விழியை மட்டும் உருட்டிப் பார்த்தான். டாக்டருக்குப் பின்னால் நின்றிருந்தவன் ஒல்லியாக இருந்தான்.

'யாருடா நீ..? பூமணியோட ஆளா?' என்று மிரட்டலாகக் கேட்டான்.

'கிருபா... அவனை அதட்டாத!' என்று சொல் லியபடி இன்னொரு தலை அவன் பார்வைக்குள் வந்தது. கறுப்பான முகம். நிறைய முரட்டுத் தனத்துடன் இருந்த அவருடைய குரலில் பரிவு இருந்தது.  

'தம்பி, என் பேரு கைலாசம்! கேள்விப்பட்டுஇருப்ப... ரொம்ப மோசமானவன். ஆதிமூலத் தோட தளபதி நாகு. உன் கையால அவன் செத் திருக்கான். அதனால நீ எனக்கு வேண்டப்பட்ட வன். எங்க எடத்துல நீ பத்திரமா இருக்க... பயப் படாம உண்மைய மட்டும் சொல்லு... பூமணி யோட திட்டம் என்ன?'

செந்தில் கண்களில் நீர் திரண்டு வழிந்தது. நாக்கு நுனியால் உதடுகளை ஈரப்படுத்திக்கொண்டான்.

'பூமணி யாரு? நாகு யாரு? நீங்க யாரு..? எனக்கு ஒண்ணும் புரியல...' என்று சொல்வ தற்குள் தொண்டையே உலர்ந்துபோயிற்று. 'யட்சன் பூஜைக்குப் போக வேண்டியவன் நான்...'

'நாடகம் போடறான்... தட்டிக்கேட்டாதான் உண்மையைக் கக்குவான்.'

'இல்ல கிருபா... தட்டினா செத்துருவான்!' என்றார் டாக்டர்.

என்னவோ செய்துகொள்ளுங்கள் என்பதுபோல் களைப்பில் செந்திலின் கண்கள் மறுபடி மூடிக்கொண்டன.

தேவியுடன் நடக்கையில் பாரி யின் பார்வை தெருமுனையை மேய்ந்தது. கை இல்லாத நாற்காலி ஒன்றில் நாகுவின் புகைப்படம் சாய்த்துவைக்கப்பட்டிருந்தது. பெரிய மாலைகள் போட்டு, மெழுகுவத்தி ஏற்றிவைக்கப்பட்டிருந்தது. ஆக, நாகு செத்துவிட்டானா?

நாகுவின் தம்பி லோகு பக்கத்தில் இருந்தவனிடம் ஆவேசமாகப் பேசிக்கொண்டிருந்தான். 'கைலாசம் குரூப்போட வேலை. எங்க அண்ணனைப் போட்டுத் தள்ள, புதுப் பையனை அனுப்பியிருக்காங்க. அவனை இதே கையால 30 நாளைக்குள்ள இந்த மண்ணுல சாய்க்கல, என் பேரு லோகு இல்ல!'

சுற்றியிருந்த நண்பர்கள் இந்த வேலைக்காகவே வளர்க்கப்பட்டது போன்ற வலுவான உடல்களுடன், அவன் சொல்வதைக் கேட்கத் தயாராக இருந்தார்கள். அன்றைக்கு மட்டும் தேவியைச் சந்திக்கவில்லையென்றால், நாகுவைத் தீர்த்துக்கட்டிவிட்டு, இன்றைக்கு இவர்களால் தேடப்படுபவன் தானாகத்தான் இருப்போம் என்று பாரிக்குத் தோன்றியது.

இன்றைக்கோ அவன் நடிகன்!

'தேங்க்ஸ் தேவி' என்றான்.

திருவல்லிக்கேணி.

போலீஸ் வாகனம் நிழலில் நின்றிருந்தது. மேன்ஷன் மேனேஜருக்கு எதிரில் நின்றிருந்தார் இன்ஸ்பெக்டர் துரைஅரசன்.

'இனிமே காத்திருக்க முடியாது. செந்தில் ரூமைத் திறந்து விடுங்க...' என்றார் உத்தரவிடும் குரலில்.

- தடதடக்கும்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism