Published:Updated:

அறிவிழி

அறிவிழி

அறிவிழி

அறிவிழி

Published:Updated:
அறிவிழி
##~##

‘முட்டை’ கோபி, 'பொட்டு’ சுரேஷ், 'அட்டாக்’ பாண்டி என்றெல்லாம் கலவரமாக நம்மூர் தாதாக்கள் வைத்துக்கொண்டிருக்கும் பெயர்கள் நமக்குப் பரிச்சயம். இணைய உலகிலும் பிரபலமான தாதாக்கள் சிலர் உண்டு. அவர்களில் முக்கியமானவரின் பெயர் 'கிம் டாட் காம்’. அன்னாரைப் பற்றித் தெரியாதவர்களுக்கு ஒரு க்விக் அறிமுகம்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜெர்மனியில் கிம் ஸ்கிமிட் என்ற பெயரில் பிறந்து வளர்ந்த கிம் 90-களின் கணினி உலகில் பில் கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸுக்கு நிகரான ஜீனியஸாக அறியப்பட்டவர். ஆனால், தனது திறமைகளைச் சிறு வயதிலேயே கம்ப்யூட்டர் நெட்வொர்க்குகளை உடைப்பதற்குப் பயன்படுத்திக்கொண்டதால், பதின்ம வயதிலேயே சிறைத் தண்டனை வாங்கிய பார்ட்டி. வளர வளர... இவரது டெரர்களும் அதிகரித்தபடியே இருக்க, ஜெர்மனியில் இருக்க முடியாமல் தாய்லாந்து, ஹாங்காங் என நாடு விட்டு நாடு தாவியபடியே இருந்தார். 2005-ல் இவர் தொடங்கிய Megaupload இந்தியா உட்பட பல நாடுகளில் பிரபலமான வலைதளம். 'கோப்புகளைப் பகிர்ந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த சேவையால் எங்களுக்கு 500 மில்லியன் டாலர்களுக்கும் மேல் நஷ்டம்’ என ஹாலிவுட் ஸ்டுடியோக்கள் செய்த புகாரின் அடிப்படையில் நியூஸிலாந்தில் செட்டில் ஆகி இருந்தவரைக் கைது செய்து, மேற்கண்ட தளத்தையும் இயங்க முடியாமல் நிறுத்தியிருக்கிறது அமெரிக்க அரசு.

கிம் சாமானியப்பட்ட ஆள் இல்லை. இவர் இதுவரை செய்த தில்லாலங்கடி வேலைகளைக்கொண்டு இரண்டு ஹாலிவுட் படங்களும், எட்டு கோலிவுட் படங்களும் எடுத்துவிடலாம்.‘Kim Dotcom’ என்று கூகுளிட்டுப் பார்த்தால், கிம்மின் விக்கிபீடியா முதல், அவர் வைத்திருந்த கார்களின் பட்டியலில் இருந்து, நடத்திய பார்ட்டிகள் வரை மணிக்கணக்கில் பொழுதுபோக்கு நிச்சயம். சரி, கிம்மின் பெயர் டெக் உலகில் இந்த வாரம் குறிப்பாக அடிபடக் காரணம் என்ன?

வங்கி போன்ற நிறுவனங்களின் இணையதளங்கள் தமது பயனீட்டாளர்கள் வலைதள சேவையைப் பத்திரமாகப் பயன்படுத்த, பல வருடங்களாகவே Two part authentication என்பதைப் பயன்படுத்திக்கொண்டிருக்கின்றன. கூகுள், ஃபேஸ்புக் போன்ற தளங்களும் இதே ஈரடுக்கு அங்கீகார முறையைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டன. சென்ற வாரத்தில் இந்த முறையை டிவிட்டரும் அறிமுகப்படுத்திவிட்டது.

அறிவிழி

ஈரடுக்கு அங்கீகார முறை என்றால் என்ன? பெரும்பாலான வலைப்பதிவுத் தளங்களில் தகவல்களைப் படித்துக்கொள்ள பதிவுசெய்ய வேண்டியது இருக்காது. சில வலைதளங்களில் உங்களது ஈமெயில் உள்ளிட்ட பல விவரங்களைக் கொடுத்துப் பதிவுசெய்துகொள்ள வேண்டியிருக்கும். உதாரணத்துக்கு, விகடன் டாட்காம் தளத்தில் செய்திகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை யார் வேண்டுமானாலும் படித்துக்கொள்ளலாம். ஆனால், அச்சுப் பத்திரிகைகளில் வெளியாகும் தகவல்களைப் படிக்க, பதிவுசெய்ய வேண்டும். விகடன் டாட் காம் உள்ளிட்ட பெரும்பாலான தளங்களில் ஒற்றை அங்கீகார முறையில்தான் பயனீட்டாளர்கள் தளத்துக்குள்

அறிவிழி

செல்ல அனுமதிக்கப்படுகிறார் கள். அந்த முறையின்படி, நீங்கள் பதிவுசெய்த பெயரை யும், கடவுச் சொல்லையும் கொடுத்தால் மட்டுமே போதும். பொது இடங்களில் இருக்கும் கணினிகளில் ஒருவேளை இந்தத் தளங்களுக்குச் சென்று login செய்துகொள்ள இயலும். இந்த முறையைக் காட்டிலும் ஈரடுக்கு அங்கீகார முறை அதிக பாதுகாப்பைக் கொண்டுவருகிறது. இந்த முறையை அமல்படுத்தியிருக்கும் தளங்களுக்கு நீங்கள் இதுவரை பயன்படுத்தியே இருக்காத கணினியில் இருந்தோ, அல்லது மொபைல் சாதனத்தில் இருந்தோ செல்ல முயற்சி செய்தால், பதிவுப் பெயர், கடவுச் சொல் மட்டுமே போதுமானதாக இருக்காது. அதற்கும் மேலாக, ஏற்கெனவே பதிந்துவைத்திருக்கும், உங்களுக்கு மட்டுமே தெரிந்த பிரத்யேகத் தகவலைக் கொடுக்க வேண்டும். சில தளங்கள் அதற்கும் ஒரு படி மேலே சென்று, உங்களிடம் இருக்கும் அலைபேசிக்கு குறுஞ்செய்தி மூலம் எண் ஒன்றை அனுப்பி, அந்த எண்ணை நீங்கள் கொடுத்தால் மட்டுமே, உங்களை உள்செல்ல அனுமதிக்கும்.

கிம் டாட்காமுக்கு வருகிறேன். டிவிட்டர் சென்ற வாரத்தில் ஈரடுக்கு அங்கீகார முறையைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறது என்ற செய்தி வெளியானதும், 'நான்தான் ஈரடுக்கு அங்கீகார முறையைக் கண்டறிந்தவன். அதற்கான காப்புரிமை என்னிடம் இருக்கிறது’ என்று ட்வீட் ஒன்றை அனுப்பி, அதனுடன் காப்புரிமைக்கான அத்தாட்சியையும் இணைக்கிறார் கிம். தொடர்ந்து 'கூகுள், ஃபேஸ்புக், டிவிட்டர், சிட்டி பேங்க் எனப் பல்வேறு அமெரிக்க நிறுவனங்கள் காப்புரிமையை மீறியிருக்கின்றன. எனது கண்டுபிடிப்பு... எனது காப்புரிமை’ என்று மற்றொரு ட்வீட் வந்ததும் மேற்கண்ட நிறுவனங்கள் மீது காப்புரிமை சார்ந்து வழக்கு போட்டு அவர்களிடம் இருந்து நஷ்டஈட்டுத் தொகையைப் பெற்றுக்கொள்ளலாம் என கிம் திட்டமிடுவ தாகத்தான் நினைத்தேன். ஆனால், 'அப்படியெல்லாம் இல்லை. கூகுள், ஃபேஸ்புக், டிவிட்டர் நிறுவனங்களே, எனது கண்டுபிடிப்பை இலவசமாகவே பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஆனால், அமெரிக்க அரசை எதிர்த்து நடத்தும் வழக்கை நடத்தப் பண உதவி செய்யுங்கள். காரணம், எனது அத்தனை சொத்துக்களையும் உறைநிலையில் வைத்துவிட்டதால், என்னால் வழக்குச் செலவுகளைச் சந்திக்க முடிய வில்லை’ என்று வேண்டுகோள் விடுத்திருக் கிறார். அவர் வழக்குத் தொடரப்போவது இல்லை என்பது இந்த நிறுவனங்களுக்குச் சற்றே நிம்மதி அளித்திருந்தாலும், எந்தப் பண உதவியும் இந்த நிறுவனங்கள் கொடுக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை.

- விழிப்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism