Published:Updated:

தமிழர் பாரம்பரிய உணவை பட்டியலிடும் புத்தகம்!

தமிழர் பாரம்பரிய உணவை பட்டியலிடும் புத்தகம்!

தமிழர் பாரம்பரிய உணவை பட்டியலிடும் புத்தகம்!

தமிழர் பாரம்பரிய உணவை பட்டியலிடும் புத்தகம்!

Published:Updated:

தமிழ்ப் பாரம்பரியம் என்பது உலகறிந்த ஒன்று. அதிலும் தமிழர்கள் உணவுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். நிலம், சமூகம், சமயம் சார்ந்த உணவு முறைகள் எனத் தமிழர்களின் தொன்மையான உணவின் சிறப்புகளை விளக்கும் புத்தகம் இது.

புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றிவரும் இந்தப் புத்தகத்தின் தொகுப்பாசிரியர் பக்தவத்சல பாரதி, தமிழர் உணவு சார்ந்த 35 கட்டுரைகளைத் தொகுத்துப் படையல் இட்டிருக்கிறார். ஒவ்வொரு கட்டுரையும் ஆழமாகவும் நுட்பமாகவும் தமிழரின் பரம்பரை உணவு, அதைச் சார்ந்த வாழ்க்கை முறைகளைப்பற்றி விளக்குகிறது.

தமிழர் பாரம்பரிய உணவை பட்டியலிடும் புத்தகம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காவிரி வண்டல் உணவில், எல்லாச் சமூகத்திற்கும் பொதுவாக இருந்தது நெல்லரிசிச் சோறு. பலதரப்பட்ட கீரைகள், மூலிகைளையும் சேர்த்தே உணவாகக்கொண்டனர். உடலுக்கு உகந்த அளவு கொழுப்புச் சத்தை தாவரங்களில் இருந்து நேரடியாகப் பெறாமல் போனதால்தான், 'வைத்தியனிடம் கொடுக்கிறதை வாணியனிடம் கொடு’ என்ற வாய்மொழி அந்த காலத்தில் புழக்கத்தில் வந்திருக்க வேண்டும். முல்லை நதி சமையலில், உடல் சூடு தணியவும், உடல் தெம்பிற்கும் இளநீர், பார்லி அரிசி, பனங்கற்கண்டை சேர்த்துச் செய்யப்படும் பானம் தயாரிக்கும் பழக்கம் இருந்தது. நெய்தல் நிலத்தில் மீன் வகைகள், இறைச்சி, ஆமை. சங்க இலக்கிய நாடார் உணவில் தேன், கிழங்கு, இறைச்சி ஆகியவை குறிஞ்சி நில மக்களின் உணவாக இருந்திருக்கிறது. இதனுடன் செட்டி நாட்டு உணவு, மன்னர்களின் உணவுப் பழக்கங்கள், ஆயுர்வேத உணவு எனப் பரம்பரையாக வரும் உணவு முறைகளைப் பற்றி விரிவாகவும், தெள்ளத் தெளிவாகவும் பல கட்டுரைகள் பரிமாறி இருக்கிறார்.  

'சமயமும் உணவும்’ என்ற தலைப்பில் சில கட்டுரைகள் படிக்க சுவாரஸ்யமாக உள்ளது. பக்தி இயக்கத்தின் எழுச்சியோடு தமிழர் உணவு வகையில் பெரிய மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. லட்டு, எள்ளுருண்டை, அப்பம் போன்றவற்றைப் பெரியாழ்வார் தம் பாடலில் குறிப்பிடுகிறார். எளிமையான நடை, அருமையான தகவல்கள், ஆச்சர்யமூட்டும் உணவு முறைகள் என தமிழர் உணவு நூலை உணவுப் பிரியர்கள் ருசிப்பார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism