Published:Updated:

முத்தான கையெழுத்து !

தூரிகை சின்னராஜ் படங்கள் : வீ.சக்தி அருணகிரி

முத்தான கையெழுத்து !
##~##

'முயற்சி திருவினையாக்கும்’ என்கிறார் உலகப் பொதுமறை தந்த தெய்வப் புலவர் திருவள்ளுவர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இது எல்லாக் கால மக்களுக்கும் எல்லா விஷயங்களுக்கும் பொருந்தும். கையெழுத்து விஷயத்திலும் நிச்சயம் இது சாத்தியமே.

கடந்த இதழில் சில சுட்டிகளின் கையெழுத்துகள் சிறப்படைய யோசனைகள் கூறியிருந்ததைப் போலவே, இந்த இதழிலும் இதோ சில சுட்டிகளின் கையெழுத்தும் ஆலோசனைகளும் அடுத்த பக்கத்தில் உள்ளன.

கோயம்புத்தூரைச் சேர்ந்த மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் 15 பேர் கையெழுத்து மாதிரிகளை அனுப்பியிருந்தார்கள். இதுபோலவே ஏராளமான சுட்டிகள் நல்ல கையெழுத்தில் கடிதம் அனுப்பியிருந்தார்கள். உங்களின் ஆர்வத்தையும் முயற்சியையும் பாராட்டுகிறோம். பெரும்பாலான கையெழுத்துகள் சிறப்பாக இருந்தன. பெரும்பாலான சுட்டிகளில் பலர் தொடர்ச்சியாகச் செய்துவரும் தவறுகளின் அடிப்படையில் சில கடிதங்களைத் தேர்ந்தெடுத்து ஆலோசனைகளை வழங்கி உள்ளோம். இதை அடிப்படையாகவைத்து உங்களின் கையெழுத்தில் உள்ள  சந்தேகங்களைச் சரிசெய்துகொள்ளலாம். கடைசியாக...

முத்தான கையெழுத்துப் பெற... மணியான மூன்று யோசனைகள்.

*நிதானமாக எழுதுங்கள்.

முத்தான கையெழுத்து !

*தரமான மை உறிஞ்சாத தாளைப் பயன்படுத்துங்கள்.

*சரியான வெளிச்சம், காற்றோட்டமான இடத்தைத் தேர்வுசெய்து, நன்றாக அமர்ந்து நல்ல மனநிலையில் எழுதுங்கள்.

அக்கறையும் ஆர்வமும் உங்களுக்குள் ஊற்றெடுக்கட்டும். அழகிய கையெழுத்து உங்களுக்கு வசப்படும் தூரம் வெகு அருகிலேயே வீற்றிருக்கிறது.

இதுவரை இந்தப் பயிற்சியில் ஈடுபட்டு, தொடர்கின்ற உங்கள் அனைவரையும்  பாராட்டி மகிழ்கிறேன். நீங்கள் முத்தான கையெழுத்துடன் எதிர்காலத்தில் வெற்றியாளராக வலம் வர நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

  வணக்கம்.

முத்தான கையெழுத்து !

 ரா.பூஜா, ஜெ.ஜெயா மெட்ரிக் பள்ளி, நாகப்பட்டினம்.

அன்பு பூஜா... உங்கள் கையெழுத்து பயிற்சி அளவிலேயே உள்ளது. தாளின் நான்கு புறங்களும் சரியான இடைவெளி இருக்க வேண்டும். எழுத்துகளின் வடிவங்களை சிதைக்காதீர்கள். எழுத்துகளின் நீளம், அகலம், உயரங்களை மாற்றாதீர்கள். சிறு வயது என்பதால், எழுத்துப் பிழைகளைத் தவிர்க்க, பெரியவர்களிடம் ஒருமுறை காண்பிப்பது நல்லது. மற்றபடி இன்னும் ஆர்வத்துடன் பயிற்சி செய்தால், முத்தான கையெழுத்தைப் பெறலாம்.

முத்தான கையெழுத்து !

 மு.சிவரஞ்ஜனி, கும்பகோணம்.

அன்பு சிவரஞ்ஜனி... வார்த்தைகளுக்கு இடையேயான இடைவெளிகளைச் சரியான அளவில் பயன்படுத்தி, அழகாக எழுதியிருக்கிறீர்கள். அதே சமயம் வடிவங்களைச் சிதைக்காமல் பார்த்துக்கொள்ளவும். உங்கள் கையெழுத்தில் உள்ள 'உ’ என்கிற எழுத்தைக் கவனியுங்கள். '2’ என்கிற கணித எண்போல் தோற்றமளிக்கிறது. இதுபோன்ற சிறு விஷயங்களை நன்கு கவனித்து, சரிசெய்துகொண்டால் போதும். உங்கள் கையெழுத்து இன்னும் மிளிரும்.

முத்தான கையெழுத்து !

 ஜ.ஸ்ரீநிதி, சென்னை-42.

அன்பு ஸ்ரீநிதி... தங்கள் கையெழுத்து நேராக இருப்பதுபோல் தோன்றினாலும், சற்றே முன் நோக்கிச் சரிந்து காணப்படுகிறது. இதை நன்றாகக் கவனித்தால் மட்டுமே அறிய முடியும். மற்றபடி, நீங்கள் செய்ய வேண்டியது அனைத்து வரிகளையும் ஒரே நேர்க்கோட்டில் தொடங்கி எழுதுவது. அதாவது, 'நாம் கம்ப்யூட்டரில் டைப் செய்யும்போது 'அலைன்மென்ட்’ எனச் சொல்லி இடது, வலது மற்றும் மையம் என எழுத்தை அமைப்போம். அதைப் போலவே இடதுபுறம் தங்களின் எழுத்துகளின் எல்லா வரிகளையும் நேர்க்கோட்டில் அமையுமாறு பார்த்துக்கொள்ளுங்கள். புள்ளிகளைச் சிறு வட்டமான திலகமிடுங்கள். தங்களின் கையெழுத்து இன்னும் சிறப்பாக அமைய நிதானத்தைக் கடைப்பிடியுங்கள்.

முத்தான கையெழுத்து !

தூரிகை சின்னராஜ், தற்போது கோவை மாவட்டத்தின் மேட்டுப்பாளையத்தில் உள்ள சச்சிதானந்தா ஜோதி நிகேதனில் தலைமை நூலகராகச் சேவை புரிந்துவருகிறார்.  தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பல்வேறு விருதுகள் பெற்றவர். குழந்தை எழுத்தாளர். 17 ஆண்டுகளுக்கும் மேலாக உறைவிடப் பள்ளியில் குழந்தைகளுடன் வசித்து, கலை ஆசிரியராகவும் இயற்கை, சமூக ஆர்வலராகவும்  சேவைபுரிந்து, அந்த அனுபவங்களை பத்திரிகைகளில் எழுதியிருக்கிறார். தன்னிடம் பயிலும் குழந்தைகளையும் ஊக்கப்படுத்தி, பல்வேறு துறைகளில் விருதுகள் குவிக்கச் செய்திருக்கிறார்.

தூரிகை சின்னராஜ், தற்போது கோவை மாவட்டத்தின் மேட்டுப்பாளையத்தில் உள்ள சச்சிதானந்தா ஜோதி நிகேதனில் தலைமை நூலகராகச் சேவை புரிந்துவருகிறார்.  தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பல்வேறு விருதுகள் பெற்றவர். குழந்தை எழுத்தாளர். 17 ஆண்டுகளுக்கும் மேலாக உறைவிடப் பள்ளியில் குழந்தைகளுடன் வசித்து, கலை ஆசிரியராகவும் இயற்கை, சமூக ஆர்வலராகவும்  சேவைபுரிந்து, அந்த அனுபவங்களை பத்திரிகைகளில் எழுதியிருக்கிறார். தன்னிடம் பயிலும் குழந்தைகளையும் ஊக்கப்படுத்தி, பல்வேறு துறைகளில் விருதுகள் குவிக்கச் செய்திருக்கிறார்.