. கே.செந்தில், சென்னை-65. .
''நான் திருமணம் ஆகாத வாலிபன். ஆதரவற்ற ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்க வேண்டும் என்பது என் லட்சியம். திருமணத்துக்குப் பின் கண்டிப்பாக ஒரு குழந்தையை நிச்சயம் தத்தெடுத்து வளர்ப்பேன். அதற்கான வழிமுறைகள் என்ன?''

ரஜினி தேவி, சமூகத் தொண்டு ஆர்வலர்.

''முதலில் அரசால் அங்கீகாரம் பெற்ற தன்னார்வ நிறுவனம் ஒன்றில் உங்களது எண்ணத்தைப் பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு, உங்களுக்கு குழந்தை தத்தெடுப்பின் சாதக பாதகங்கள் உரைக்கும் 'pre adoptive counselling’ கொடுப்பார்கள். அதன் பின்பும், நீங்கள் தத்தெடுக்கும் எண்ணத்தில் தீவிரமாக இருந்தால், உங்களைத் தகுதிப் பரிசோதனைக்கு ஆட்படுத்துவார்கள். திருமணம் ஆனவராக இருந்தால், அவர்களுக்கு மணம் முடிந்து குறைந்தது ஐந்து வருடங்கள் பூர்த்தி ஆகியிருக்க வேண்டும். உங்கள் திருமணச் சான்றிதழ், வருவாய்ச் சான்றிதழ், உங்கள் குடும்பத்தாரின் ஒப்புதல் கடிதம் போன்ற எட்டு வகையான ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். பிறகு, கணவன் - மனைவி இடையேயான அந்நியோன்யம், குடும்பச் சூழல் போன்றவற்றை உங்கள் வீட்டுக்கே வந்து ஆராய்வர். அதில் திருப்தி அடைந்த பிறகு, உங்கள் தகுதிக்கு ஏற்ற குழந்தையை மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை உங்களுடன் வளரவிடுவர். பிறகு, உங்கள் இறுதிச் சம்மதத்தின் அடிப்படையில் நீதி மன்றத்தில் அந்தக் குழந்தையை உங்கள் குழந்தையாக வளரப் பதிவு செய்ய வேண்டும். நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு, அந்தக் குழந்தையை உங்கள் தத்துப்பிள்ளையாக சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். இந்த வரைமுறைகளுக்கு ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை ஆகும். திருமண பந்தத்தில் விருப்பம் இல்லாதவர்களும் சில கூடுதல் நடைமுறைகளுக்கு ஆட்பட்டு குழந்தையைத் தத்தெடுக்கலாம்!''

எஸ்.ராஜா, கோயம்புத்தூர்-4

''நான் அடிக்கடி சூயிங்கம் மென்றுகொண்டு இருப்பேன். இந்தப் பழக்கத்தால் ஏதேனும் பின் விளைவுகள் ஏற்படுமா?''

எஸ்.எம்.பாலாஜி, பல் மருத்துவர்.

''அளவோடு மென்றால் சூயிங்கம் சாப்பிடும் பழக்கம் நல்லது ராஜா. ஆனால், அளவுக்கு மிஞ்சி னால் அதுவும் நல்லதல்ல. பயப்படும்படியான பின் விளைவுகள் எதுவும் ஏற்படாது. ஆனால், முகத்தின் தாடை எலும்பு மற்றும் தசைகளுக்கு அடிக்கடி வேலை கொடுப்பதால், அது இறுகி முகம் விகாரமாகக் காட்சியளிக்க வாய்ப்பு இருக்கிறது. அளவாக சூயிங்கம் மெல்வது ஈறுகளுக்கு நல்ல பயிற்சிதான்!''

பெயர் வேண்டாமே... ப்ளீஸ்...

''24 வயதுப் பெண் நான். ஆறு மாதங்களுக்கு முன்பு கனடாவில் இருந்து வந்த என் சொந்தக்காரரின் மகன் பழகும் விதம், குணம் எல்லாம் பிடித்துப்போகவே, அவரிடம் என் காதலைச் சொன்னேன். ஆனால், தான் கனடாவில் ஏற்கெனவே ஒரு பெண்ணைக் காதலிப்பதாகச் சொல்லி, என் காதலை ஏற்க மறுத்துவிட்டார். ஏமாற்றமாக இருந்தாலும், மனதை ஒருவாறு தேற்றிக்கொண்டேன். ஆனால், விதி என் பெரியம்மா பையன் ரூபத்தில் விளையாடியது. இந்த விஷயம் அவனுக்கு எப்படியோ தெரிய வர, உறவினர்கள் மத்தியில் அவன் பரப்பிவிட்டான். சொந்தங்களின் கேலிப் பேச்சுக்கு நடுவில் பெற்றோர்களின் ஏச்சுப் பேச்சிலும் சிக்கித் தவிக்கிறேன். என் மன உளைச்சல் தீர வழிகாட்டுங்களேன்?''

பிருந்தா ஜெயராமன், குடும்ப நல ஆலோசகர்.

'' 'யார் என்ன சொன்னா லும் பரவாயில்லை. என் மேல் நம்பிக்கை இருக்கிறது. நான் தவறு செய்யவில்லை’ என்று உங்களுக்குள் அடிக்கடி சொல்லிக்கொள்ளுங்கள். நம் சுற்றத்தார் என்ன நினைப்பார்களோ என்று கவலைப்பட்டால், வாழ்நாள் முழுக்க அழுகைதான் உங்கள் சொத்தாக இருக்கும். உங்கள் பெற்றோரைச் சமாதானப்படுத்த முயற்சியுங்கள். அவர்களிடம் உங்களுக்குப் பேச சங்கடமாக இருந்தால், அவர்கள் காது கொடுக்கும் ஒரு நபரிடம் நீங்கள் விஷயத்தை விளக்கி எடுத்துரைக்கச் சொல்லுங் கள். அப்படி யாரும் இல்லாதபட்சத்தில், ஒரு கடிதம் மூலம் உங்கள் மனக் குமுறல்களைப் பெற்றோரிடம் தெரிவியுங்கள். ஆனால், கடிதத்தில் கோபத்தையோ, ஆதங்கத்தையோ வெளிப்படுத்தாதீர்கள்!''

எம்.ஜோதி, காஞ்சிபுரம்.

''காலேஜ் செல்லும் டீன் - ஏஜ் பெண் நான். எனக்கு சென்சிட்டிவ் சருமம். அதனால், வெயிலில் வெளியே செல்லும் முன் சன் ஸ்க்ரீன் லோஷன் தேய்த்துக் கொள்வேன். ஆனால், லோஷன் தடவியவுடன் வியர்வை ஆறாகப் பெருக்கெடுக்கிறது. வியர்வை சுரக்காமல் சன் ஸ்க்ரீன் லோஷன் உபயோகிப்பது எப்படி?''

வசுந்தரா, அழகுக் கலை நிபுணர்.

'சன் ஸ்க்ரீன் லோஷன்களில் ஆயிலி (எண்ணெய்ப் பசை) மற்றும் மேட் ஃபினிஷ் என இரண்டு வகை உண்டு. வறண்ட சருமம் உள்ளவர்கள் ஆயிலி லோஷனைப் பயன்படுத்தலாம். எண்ணெய்ப் பசை சருமம் உள்ளவர்கள் ஆயிலி லோஷனைப் பயன்படுத்தினால், லோஷன் தடவிய உடனேயே வியர்க்கத் துவங்கிவிடும். அவ்வகை சருமம் உள்ளவர்கள், மேட் ஃபினிஷ் சன் ஸ்க்ரீன் லோஷனை உபயோகிக்கலாம்.

அனைத்து வகை சன் ஸ்க்ரீன் லோஷன்களிலும் SPF (Sun Protection Factor) என்ற ஓர் அளவு குறிப்பிடப்பட்டு இருக்கும். ஒவ்வோர் அளவீட்டுடனும் ஐந்தைப் பெருக்கினால் வரும் நேரம் வரைதான் அந்த சன் ஸ்க்ரீன் லோஷன் வேலை செய்யும். SPF அளவுகள் பத்தில் இருந்து கடைகளில் கிடைக்கிறது. குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் சன் ஸ்க்ரீன் லோஷன்கள் அதன் செயல்பாட்டை நிறுத்தி விடும். அதனால், குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு லோஷன் தடவிய இடங்களைத் தண்ணீரால் கழுவிவிடுங்கள்!''

எம்.பிரேமா, செங்கல்பட்டு.

''வீட்டில் ஒரே பெண்ணாகப் பிறந்த எனக்கு, சொந்தக்காரர்களின் திருமணம், பிறந்த நாள் போன்ற விசேஷங்களில் கலந்துகொள்ளவே எரிச்சலாக இருக்கிறது. கூட்டம், கும்பல் நிறைந்த இடங்களில் நிற்கவே வெறுப்பாக இருக்கிறது. இதனால், பெற்றோருக்கு என் மீது வருத்தம். என்னை எவ்வளவோ மாற்றிக்கொள்ள முயன்றாலும், இறுதியில் தோல்வியே மிஞ்சுகிறது. நான் என்ன செய்யட்டும்?''

ருத்ரன், மன நல மருத்துவர்.

''நமக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, சில விஷயங்களை மற்றவர்களுக்காக நிறைய நேரங்கள் நாம் சகித்துக்கொண்டுதான் ஆக வேண்டும் என்பதை மனதில் இருத்திக்கொள்ளுங்கள். தனிமையாக இருக்கும் சமயங்களில் டி.வி பாருங்கள். அதில் உங்களைப்போல் வரும் கதாபாத்திரங்களை உங்களுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து செய்தாலே, உங்களையும் அறியாமல் ஒரு சில கெட்ட விஷயங்கள் உங்களைவிட்டு மறைந்திருக்கும்!''