எஸ்.ஜெயராமன், தஞ்சாவூர்.

தாங்கள் எந்த வெளிநாட்டினைப் பார்த்து வர மிக விரும்பியும்,முடிய வில்லை? அதன் சிறப்பினையும், காரணத்தையும் சொல்வீர்களா?

ரோம்!

காரணம், அந்த நாட்டைப்பற்றியும் (அப்போது அது நாடுதான்!) அங்கு வாழ்ந்த மாவீரர்கள் பற்றியும் ஓரளவு விவரமாகப் படித்தவன் நான். அதற்காக அங்கே போகும் வாய்ப்பு கிடைக்கவில்லையே என்கிற வருத்தம் எல்லாம் எனக்குக் கிடையாது. நீங்கள் கேட்டீர்கள், சொன்னேன்!

விஜயலட்சுமி, பொழிச்சலூர்.

கருவறை முதல் கல்லறை வரை உதவியாம்; கல்லறைக்கு என்ன உதவி தேவைப்படும்?

நமக்கே அப்போது தெரியப்போவது இல்லை என்றாலும், நமக்காகக் கச்சிதமாக, பிரத்யேகமாக ஒரு கல்லறை தோண்டுவதும் உதவிதானே?!

'தூசி’ எப்போது மதிக்கப்படுகிறது?

சுமார் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஓர் இடத்தில் சுழன்றுகொண்டு இருந்த பிரமாண்டமான தூசி மண்டலம்தான், மெள்ள மெள்ள நெருங்கி ஒட்டிக்கொண்டு, இறுகி, உருண்டையாகி, கடைசியில் பூமி என்கிற கிரகமாக ஆனது. இது ஒருபுறம் இருக்க, அகண்ட கண்டத்தில் பூமி என்பது ஒரே ஒரு தூசி அளவுதான் என்று விஞ்£னிகள் கணக்குப் போட்டுச் சொல்லிவிட்டார்கள். ஆகவே, அடிப்படையில் எல்லாமே தூசிதான். பூமியே ஒரு தூசி எனும்போது 'அவன் என் கால் தூசி’ என்றெல்லாம் டயலாக் விடுவது அபத்தம்!

எம்.மிக்கேல் ராஜ், சாத்தூர்.

நம் உடலில் பலவிதமான தொழிற்சாலைகள் உள்ளன. மதன் சாருக்குப் பிடித்தது எந்தத் தொழிற்சாலை... ஏன்?

மண்டைக்குள் இருக்கும் தலைமைச் செயலகத்துக்கு (நன்றி - சுஜாதா சார்) மதனைப் பிடிக்கும். மதனுக்கு 'ஜீரணத் தொழிற்சாலை’ பிடிக்கும். அட, நல்லா ருசிச்சுச் சாப்பிட வேணாமுங்களா?! மத்ததெல்லாம் அப்புறம்தானுங்க!

என்.சீத்தாலட்சுமி, சென்னை-95.

ஆசைக்கும் பேராசைக்கும் என்ன வித்தியாசம்?

நம்ம லோக்கல் வங்கியில் அக்கவுன்ட் ஓப்பன் பண்ணுவதற்கும், சுவிஸ் வங்கியில் பண்ணுவதற்கும் உள்ள வித்தியாசம்தான்!

ராஜம் வி.சுந்தர், வேலூர்-9.

பாவம் என்று ஒன்று உள்ளதா? இதுதான் பாவம் என்று யார் நிர்ணயித்தார்கள்?

சமூகம்தான் நிர்ணயித்தது. அதில் ஒரு பகுதி நீங்கள். பாவங்கள் காலத்துக்கு ஏற்ப மாறலாம். ஆனால், நீங்கள்இருப் பது கடந்த காலத்திலோ, எதிர் காலத்திலோ இல்லை. இப்போது உள்ள சமூகத்தில். ஆகவே, தற் கால சமூகம்மொத்தமாக 'பாவம்’ என்று நிர்ணயிப்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். வேறு வழியில்லை! (ரகசியமாகப் பாவம் பண்ணுவது வேறு!).

எஸ்.வி.எஸ்.மணியன், கோவை.

மண்டையில் சொட்டை விழுந்தால், உப்பைப் பொடி செய்து தேய்த்தால் முடி வளருமாமே? இது மருத்துவத் தகவலாக ஒரு புத்தகத்தில் வந்தது. ஆனால், உப்பு உடலுக்கு பிரஷரை ஏற்படுத்துமே... சரியா சொல்லுங்க?

எந்தப் புத்தகத்தில் வந்தது? எல்லாமே தப்பு! வேண்டுமானால், 'டாஸ்மாக்’குக்குப் போகும் வழுக்கைத் தலையர்கள் தலையில் உப்பைத் தேய்த்துக்கொண்டு, அதன் மேல் மாங்காய் பத்தைகளை ஒட்டிக்கொண்டு போனால், ஒவ்வொரு வாய்க்கும் மாங்காயை ஊறுகாய் மாதிரி உருவி எடுத்துக் கடித்துக்கொள்ளலாம். ஊறுகாய் செலவு மிச்சமாகும்!

லீலா இராம், தக்கலை.

காட்சிக்கு அப்பாற்பட்டதாக இருப்பதனால் மனசையும் கடவுளையும் ஒன்று எனக் கருதலாமா?

கட - உள்!

உள்ளே இருப்பது மனசுதானே?! இரண்டுமே காட்சிக்கு அப்பாற்பட்டதாக இருப்பதால், இரண்டும் ஒன்று என்று எப்படி நிரூபிக்க முடியும்?! ஆனால், கடவுளைக்கூடச் சிலர் பார்த்ததாகச் சொல்வார்கள். மனசைப் பார்த்ததாக யாராவது சொல்லிக் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?!

ச.ஆ.கேசவன், கோவில்பட்டி.

தாய்க்குப் பின் தாரம்... தந்தைக்குப் பின்?

கணவர். அதாவது, பொண்டாட்டிக்கு!