Published:Updated:

அறிவிழி

அண்டன் பிரகாஷ்

அறிவிழி

அண்டன் பிரகாஷ்

Published:Updated:
அறிவிழி
##~##

றந்துபோன ஸ்டீவ் ஜாப்ஸ் விண்ணுலகம் செல்கிறார். அவரைச் சொர்க்க வாயிலில் எதிர்கொள்ளும் செயின்ட் பீட்டர் (வெள்ளைக்கார சித்ரகுப்தன் என்று சொல்லலாமா?) விண்ணுலகத்தில் இடம்பிடித்துவைத்திருப்பவர்களின் பெயர்கள் எழுதப்பட்டிருக்கும் மிகப் பெரிய பேரேட்டைத் தூக்க முடியாமல் புரட்டி ஜாப்ஸின் பெயர் இருக்கிறதா என்று பார்க்க முயல, 'இந்தப் பேரேட்டை வைத்துப் பராமரிக்க வசதியாக ஆப்பிள் ஆப் இருக்கிறதே!' என்று சொல்லும்படி இருந்த கார்ட்டூன் ஜாப்ஸின் மரணத்துக்குப் பின்னர் சில நாட்களில் இணையவெளியில் உலா வந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எந்தத் தேவை என்றாலும், அதற்கு அலைமென்பொருள் வந்தபடி இருக்கிறது என்பதைக் கிண்டலாகச் சொல்வதுதான் அந்த கார்ட்டூனின் செய்தி. அலை மென்பொருட்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகமானபடி இருக்கிறது. டெக் நிறுவனங்கள் இப்போதெல்லாம் 'மொபைலில் மட்டும்’ (Mobile Only) அல்லது 'மொபைலில் முதலில்’ (Mobile First)  என்ற கோணத்தில்தான் தங்களது வணிக உத்தியை வடிவமைக்கின்றன. கணினிக்காக மென்பொருள் தயாரிப்பது என்பது வீணானது என்ற எண்ணம் பரவலாகிவிட்டது. ஆப்பிள், ஆண்ட்ராய்ட் இரண்டின் ஆப் கடைகளிலும், தலா எட்டு லட்சம் மென்பொருட்கள் இன்றைய தேதியில் இருக்கின்றன. இவற்றில் தேவையான மென்பொருட்களைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துவது தொடர்ந்து சிக்கலானதாக மாறிவருகிறது. ஒரு பயனீட்டாளர் மற்ற பயனீட்டா ளர்களிடம் வாய்வழித் தகவலாகச் சொல்வதன் மூலமாகவே இப்போதைக்குச் சிறந்த அலை மென்பொருட்கள் கண்டறியப்படுகின்றன.

அறிவிழி

எட்டு லட்சம் மென்பொருட்கள் இருந்தாலும், பல மென்பொருட்கள் ஈயடிச்சான் காப்பிகளாக இருப்பது மொபைல் பயனீட்டாளர்களுக்கு எரிச்சலை வரவைக்கும். உதாரணமாக, ஆப்பிளின் iOS Appstore-ல் சமையல் குறிப்புகள்கொண்ட மென்பொருட்கள் எத்தனை இருக்கின்றன என்பதைப் பார்க்க ‘Recipes’ என்ற பதத்தைக் கொடுத்துத் தேடிப் பார்த்தால், 4000-க்கும் அதிகமான மென்பொருட்கள் இருக்கின்றன. இதில் எந்த மென்பொருளைத் தரவிறக்கம் செய்யலாம் என்பதைக் கண்டறிய நேரம் ஒதுக்கியாக வேண்டும்.

கூகுளின் சேர்மன் எரிக் ஸ்மிட்டும், அமெரிக்காவின் வெளியுறவு விவகாரங்களில் வித்தகரான ஜேரட் கோகன் இருவரும் இணைந்து எழுதியிருக்கும் ‘The new digital age’ புத்தகம் இப்போது பரபரப்பாக விற்கிறது.

அறிவிழி

புத்தகத்தில் விவாதிக்கப்பட்டிருக்கும் தகவல்களின் சாராம்சம்:

அறிவிழி

அடுத்த 10 ஆண்டுகளில் 5 பில்லியன் மக்கள் இணையத்துக்குள் வந்துவிடுவார்கள்.

அறிவிழி

 கேமராவின் கண்களில் இருந்து தப்ப முடியாது என்பதால், வன்கொடுமைகளின் எண்ணிக்கை குறையும்.

அறிவிழி

 இன்டர்நெட் மூலமாக நடத்தப்படும் Cyber attack முயற்சிகளுக்கு, நேரடியான ராணுவத் தாக்குதல் பதிலடியாகக் கொடுக்கப்படும்.

அறிவிழி

 மாத்திரை ஒன்றை விழுங்கிவிட்டுச் சில நிமிடங் கள் காத்திருந்தால், அது உணவுப் பாதையில் மெதுவாக இறங்கும்போது தேவையான தகவல்களைச் சேகரித்து, உங்கள் உடலில் என்னென்ன பிரச்னைகள் என்பதை நேரடியாக உங்கள் கையில் இருக்கும் மொபைல் சாதனத்தில் இருக்கும் மென்பொருளில் காட்டிவிடும்.

அறிவிழி

 டிஜிட்டல் புரட்சிகள் சர்வாதிகார அரசாங்கங்களைத் தூக்கியெறியும்.

அறிவிழி

 எளிதாகக் கிடைக்கும் தகவல்கள் மூலம், நவீன சமூகம் இதுவரை அறியாத வண்ணம் அடித்தள மக்களுக்கு அதிக வலிமை கிடைக்கும்.

அறிவிழி

 உங்கள் குழந்தைகளுக்கு செக்ஸ்பற்றிய அறிவை Birds - Bees கதைகளின் மூலம் சொல்லிக்கொடுப்பதற்கு முன்னால், ஆன்லைனில் பத்திரமாக எப்படி இருக்க வேண்டும் என்பதைச் சொல்லிக்கொடுத்துவிடுவீர்கள்!

அறிவிழி

இந்தப் புத்தகத்தைப் பற்றி ஒரு சாரார் புகழ்ந்தபடி இருக்க, கூகுளின் துணையுடன், அமெரிக்க அரசு தனது Big Brother நிலையை ஆன்லைன் உலகிலும் வலுவாக நிறுத்திக்கொள்ளச் செய்யும் முயற்சி என்ற குரலும் கேட்கிறது.

வெளியே கால்வைத்தால் அமெரிக்க அரசால் கைது செய்யப்படுவோம் என்ற பயத்தில் லண்டனில் இருக்கும் எக்குடோர் நாட்டுத் தூதரகத்தில் அகதியாக அடைந்திருக்கும் விக்கி லீக்ஸ் புகழ் ஜூலியன் அசாஞ்ஜே நியூயார்க் டைம்ஸ் இதழில் இந்தக் கோணத்தில் எழுதி யிருக்கும் கட்டுரை பலராலும் மேற்கோள் காட்டப்படுகிறது. அந்தக் கட்டுரையின் உரலி -http://nyti.ms/1aPZqYb

அவர் கட்டுரை எழுதிய ராசிதானோ என்னவோ, இந்த வாரத்தில் அமெரிக்க அரசு PRISM என்ற பெயரில் டெக் நிறுவனங்களில் இருக்கும் கணினிகளில் இருந்து பயனீட்டாளர்களின் தகவல்களைச் சேகரித்தபடி இருக்கிறது என்ற செய்தி வெளிவந்து அமளிப்படுகிறது.

PRISM பற்றி அடுத்த வாரம் பார்க்கலாம்!

- விழிப்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism