Published:Updated:

ஜப்பான் செல்லும் ஜேஆர்சி மாணவி!

ஜப்பான் செல்லும் ஜேஆர்சி மாணவி!
ஜப்பான் செல்லும் ஜேஆர்சி மாணவி!
ஜப்பான் செல்லும் ஜேஆர்சி மாணவி!

‘இன்டர்நேஷனல் யூத் எக்ஸ்சேஞ்ச்’ என்னும் ஜப்பானிய அமைப்பின் தெற்காசிய நாடுகளுக்கான ஜேஆர்சி ஜூனியர்களுக்கான பயிற்சியில், இந்தியாவின் சார்பில் முதன் முதலாக பங்கேற்கும் மாணவி என்கிற பெருமையைப் பெறுகிறார் ஜேன் மதுரம்.

அக்டோபர் 22 முதல் நவம்பர் 5 வரை ஜப்பானில் 21 தெற்காசிய நாடுகளின் ஜேஆர்சி ஜூனியர்கள் கலந்துகொள்ளும் இந்தப் பயிற்சியில், இந்திய நாட்டின் சார்பாக, ராமநாதபுரத்தைச் சேர்ந்த ப்ளஸ் ஒன் மாணவி ஜேன் மதுரம், புதுடெல்லி இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தேசிய கிளையினாலும், தமிழ்நாடு மாநிலக் கிளையினாலும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிகழ்வுக்காக நம் நாட்டின் சார்பாக தேர்வு செய்யப்பட்ட ஒரே ஒரு பெண் ஜூனியர் இவர் மட்டுமே. இதில் கலந்து கொள்ளும் மற்றொரு மாணவர், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சார்தக் மிஸ்ரா என்பவர்.

‘‘நான் 6வது படிக்கும் போதிலிருந்தே ஜேஆர்சி பயிற்சியில பங்கேற்று, மாவட்ட, மாநில அளவுல பல பரிசுகளை வாங்கிட்டு வர்றேன். சுகாதாரம், சேவை, நட்புடன் பழகுதல் முதலான நல்ல விஷயங்களை இந்த அமைப்பு மூலமா கத்துக்கிறதோட, பல ஊர்களுக்கும் போய் கிராம மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, மரம் நடுவதோட அவசியம்னு பல விஷயங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துறோம். இதில் என்னோட ஆர்வத்தையும், ஆக்கப்பூர்வமான பங்களிப்பையும் கவனிச்சு, இப்போ என்னை ஜப்பானுக்கு அனுப்பத் தேர்ந்தெடுத்திருக்கு ஜேஆர்சி.

15 நாட்கள் நடக்கவிருக்கிற இந்த பயிற்சியில், பல நாடுகளில் இருந்தும் வரவிருக்கிற மாணவர்களோட பழகுற வாய்ப்பு கிடைக்கும். அவங்ககிட்ட நம்ம நாட்டு சேவையைப் பற்றி பகிர்ந்துக்கிறதோட, அவங்க பயன்படுத்தும் சில பேரிடர் கால நுணுக்கங்களைப் பத்தியும் கத்துக்கிட்டு வந்து, இங்க எல்லார்கிட்டயும் பகிர்ந்துக்குவேன். பிரதமர் ஆரம்பிச்சிருக்கிற ‘க்ளீன் இந்தியா மிஷன்’ போல பல நல்ல திட்டங்களை கொண்டு வந்து தொடர் சங்கிலி போல மக்களை ஒன்று சேர்த்து இந்தியாவை மாத்தணும்!’’ என்கிறார் எனர்ஜியோடு!

ஜெயிக்கலாம் ஜேன்!

- பொன்.விமலா