##~##

லோகுவை அங்கே சற்றும் எதிர்பார்த்திராததால், பாரியுடைய நரம்புகள் முறுக்கேறிக்கொண்டன. ஆனால், தன்னுடைய உணர்வுகள் வெளிப்பட்டுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தான்.

பாரியின் தோளில் கைபோட்டிருந்த ஜோசப், 'மாஸ்டர் வர்ல..?' என்று கேட்டான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'மாஸ்டர் லண்டன் போயிருக்காரு. இந்திப் படம். நாளைக்கு வர்றாரு... டிரெய்னிங் குடுக்கறதுக்கு என்னை அனுப்பினாரு' என்றான் லோகு பணிவுடன். அறிமுகங்கள் முடிந்தன. ஜோசப் விலகினான். பயிற்சி துவங்கியது.

'அடிக்கறதுல பவர் இருக்கணும். ஆனா, எதிராளி மேல கை வேகமா விழக் கூடாது. அடி வாங்கும்போது, மூஞ்சில வலியைக் காட்டணும். உடம்பு பின்னால போகணும். ஃபைட்ல, ஆக்ஷனைவிட ரியாக்ஷன்தான் முக்கியம்.'

லோகு சொல்லிக்கொடுத்த மூவ்களை, பாரி உன்னிப்பாகக் கவனித்தான்.

மாலையில், 'பாரி எப்படி..?' என்று கேட்டான் ஜோசப்.

'சூப்பராப் பண்றாரு... புதுசுனு நம்பவே முடியல!'

'ஒரு சின்ன டெமோ பண்ணிக் காட்ட முடியுமா?'

யட்சன்

பாரியும் லோகுவும் ஒருவரை ஒருவர் தாக்குவதுபோல் கைகளை வீசியும் கால்களால் கொக்கி போட்டும் நடித்துக்காட்டினர். கடைசி வீச்சில், பாரி வேண்டுமென்றே கையில் அதிக வலுவைச் சேர்த்துக்கொண்டான். மூன்று அங்குலம் உடலை முன்தள்ளி, கையைக் காற்றில் வீசினான். குவிந்த முஷ்டி லோகுவின் முகத்தில் மோதியது. கடைசித் தருணத்தில், லோகு முகத்தைப் பின்னுக்கு இழுத்துக்கொண்டும்கூட, அவனுடைய மூக்கு உடைந்தது. குபுகுபுவென்று ரத்தம் பெருகியது. யாரோ ஐஸ் கொண்டுவர ஓடினார் கள்.

'ஐயோ, ஸாரி!' என்று பாரி பொய்யாகப் பதறினான். கைக்குட்டையைத் தவிப்புடன் எடுத்து நீட்டினான். லோகு கைக்குட்டையால் மூக்கைப் பொத்திக்கொண்டான். அவன் மண்டைக்குள் வலி தெறித்தது. வலியில் கண்களில் தானாகவே வழிந்த நீருடன் புன்னகைத்தான்.

'இவரோட ஒவ்வொரு பஞ்ச்லயும் சூப்பர் பவர் இருக்குது சார். நான் ரொம்பப் பிரியமா இருந்த எங்க அண்ணன் இறந்துட்டாரு. அவரு நெனப்புல இருந்ததால மிஸ் பண்ணிட்டேன். இல்லாட்டி சுதாரிச்சிருப்பேன். ஆனாக்கூட, பாரி சாரோட நடிக்கிறவங்க கொஞ்சம் உஷாரா இருக்கணும்.'

'நண்பா, இவங்க ஸ்டன்ட் ஆளுங்க. அடிச்சா தாங்குவாங்க. வில்லனா நடிக்கிறவங்க மூக்கை நீ பேத்துட்டா, ஷெட்யூலே கெட்டுப்போயிடும்!'

'ஸாரி ஜோ! அடியில பவர் இருக்கணும்னு சொன்னாரு. கொஞ்சம் மிஸ் பண்ணிட்டேன். இன்னொரு தடவை இந்தத் தப்பு நடக்காது.'

'லவ் சீன்ல அவ்ளோ மெரள்றே... அடிதடில கில்லாடியா இருக்க..?' என்று ஜோசப் சிரித்தான்.

ம்மாவுக்கு வாங்கிய மருந்துகளுடன் வீட்டுக்குத் திரும்பிய தீபா, வாசலில் செந்திலின் அம்மாவைப் பார்த்ததும் பரபரப்பானாள்.

'உள்ள வாங்க!'

'உன்கிட்ட சொந்தம் கொண்டாடிக்கிட்டு வரல' என்று சொல்லும்போது, செந்திலின் அம்மா உடைந்து அழுதாள்.

'என் பையன் எங்க இருக்கான்னு சொல்லு போதும்.'

'சத்தியமா எனக்குத் தெரியாதும்மா!'

''அவன் இங்க வேலைக்குப் போயிட்டு, ஒழுங்கா இருந்திருப்பான். ஏதோ ஒரு நாள் உங்க காதலை ஒப்புக்கிட்டு, கல்யாணம் பண்ணிவெச்சிருப்போம். அதை விட்டுட்டு, சினிமா அது இதுனு அவன் மனசுல விஷத்தை ஏத்தி வழியனுப்பிவெச்சியே, அவனை எங்க கொண்டுபோய் நிறுத்தியிருக்கு பார். தலைமுறை தலைமுறையா கௌரவமா வாழ்ந்த குடும்பத்தை போலீஸ் தேடி வருது. செந்திலோட கைரேகை வேணும்னு அவன் படித்த புஸ்தகத்தையெல்லாம் எடுத்துட்டுப்போறாங்க. செந்தில் எனக்குத் திரும்பக் கிடைக்கலைன்னா, என் சாபம் உன்னைச் சும்மாவிடாது!'

அழுதபடி அவள் புறப்பட்டுச் சென்ற பின், தீபா தலையைப் பிடித்துக்கொண்டாள்.

'செந்தில், உன் கனவுகளை உடனிருந்து நிறைவேற்ற நினைத்தது என் குற்றமா? என் வேதனை புரியாமல் எங்கேடா போய் ஒளிந்துகொண்டாய்?

எதுவும் செய்யாமல், ஐந்து நாட்களாக இப்படிப் புலம்பிக்கொண்டிருப்பது பொறுப்பாகுமா?’

தீபா ஒரு தீர்மானத்துக்கு வந்தாள்.

துரை அரசன் முன் சப் இன்ஸ்பெக்டர் நின்றார்.

'நாம சந்தேகப்படற செந்தில் பத்தி போலீஸ் ரெக்கார்ட்ஸ்ல ஒரு தகவல்கூட இல்ல சார். விசாரிச்ச வரைக்கும் சாதுவான பையன்னுதான் தெரியுது. செத்துப்போனவங்க எல்லாமே தப்பான ஆளுங்கதான். ரெண்டு பக்கமும் எப்படி யும் இன்னும் பலி விழும். விட்டுப் பிடிக்கலாம்னு தோணுது.'

'ரவுடிங்க தலை குறையுதுனு நாம கையைக் கட்டிக்கிட்டு வேடிக்கை பாக்க முடியாது' என்றார் துரை அரசன் கவலையோடு.

'வெட்டினவன் யாருன்னு விசாரிச்சீங்களாடா..?' என்றார் கைலாசம்.

'நாகுவோட தம்பி லோகு. இங்க இருந்தா பிரச்னைனு ஷூட்டிங் குக்குக் கிளம்பிப் போயிருக்கான்... அங்கேயே அவன் கதையை...'

'அவசரப்படாதீங்கடா...' என்றவர், தன் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தார். 'செந்திலைக் கூட்டிட்டு வாங்க...' என்றார்.

- தடதடக்கும்...