Published:Updated:

பார்த்தாலும் பிடிக்கும், பார்க்க பார்க்கவும் பிடிக்கும்!

பார்த்தாலும் பிடிக்கும், பார்க்க பார்க்கவும் பிடிக்கும்!
பார்த்தாலும் பிடிக்கும், பார்க்க பார்க்கவும் பிடிக்கும்!

ரு பேப்பர் எடுத்து, ஊரில் இருக்கும் எல்லா கலர் பென்சில், கிரேயான்ஸ், வாட்டர் கலர் என எல்லாம் எடுத்து ஒரு வீடு, மரம், குளம் என நிறங்கள் புழங்க வரைந்து பழகியவர்கள்தான் நாம்.

இதைத் தாண்டி ஓவியங்களை எப்போதாவது சந்திக்கும் நிலைதான் இருந்தது. தொழிநுட்ப வளர்ச்சி இங்கு மட்டும் வராமல் இல்லை. அதன் உதவியுடன் தங்கள் திறமையை வெளிக்காட்ட ஃபேஸ்புக், ட்விட்டர் என பல தளங்கள் கிடைத்துவிட்டது. அதன் வழியே கிடைத்த சில ஓவியங்களும் அவற்றின் வகைகளும் கீழே...
 

பார்த்தாலும் பிடிக்கும், பார்க்க பார்க்கவும் பிடிக்கும்!

போட்டோ ரியாலிஸ்டிக் ட்ராயிங்: பார்த்தவுடனேயே இது ஓவியமா? இல்லை புகைப்படமா? எனக் குழப்பம் ஏற்படுத்தும் வகையைச் சேர்ந்ததுதான் ரியாலிஸ்டிக் வகை ஓவியங்கள். கண்ணின் கருவிழிகளைக் கூட துள்ளியமாக வரைவதும், தோலில் இருக்கும் சுவாசத் துளைகள் வரை நுட்பமாக பதிவு செய்வதும் வரைபவர்களின் திறமைக்கான அடையாளம்.

ஓவியங்கள்: டீகோ ஃபேஸியோ வரைந்தது
 

பார்த்தாலும் பிடிக்கும், பார்க்க பார்க்கவும் பிடிக்கும்!

இன்வெர்டட் பென்சில் ட்ராயிங்: இது வழக்கமான ஓவியத்திலிருந்து மாறுபட்டது. காரணம், சாதாரணமாக இந்த வகை ஓவியத்தின் நிறங்களைப் பார்க்க முடியாது. முழுதாக வரைந்து அதை நெகட்டிவ் செய்த பின்தான் ஓவியம் புலப்படும். கேமிராவின் ஃபிலிமை நெகட்டிவில் இருந்து போட்டோவாக மாற்றுவதின் தலைகீழ் செயல்பாடுதான் இந்த வகை ஓவியத்தின் கான்செப்ட். இன்னும் எளிதாக சொன்னால், வெள்ளை நிறம் இருக்க வேண்டிய இடத்தில் கருப்பும், கருப்பு நிறம் இருக்க வேண்டிய இடத்தில் வெள்ளையும் இடம் பெறும், இப்போது அதன் நெகட்டிவ் வழக்கமான நிறத்தில் வந்துவிடும் தானே!

ஓவியங்கள்: அடோமிக் சர்கிஸ் மற்றும் பிரையன் லை வரைந்தது.
 

பார்த்தாலும் பிடிக்கும், பார்க்க பார்க்கவும் பிடிக்கும்!

மைக்ரோ பென்சில் ட்ராயிங்: ஓவியத்தின் அளவை சுருக்கி சிறியதாக வரைவது தான் இந்த வகை ஓவியம். ஒரு பென்சிலின் பாதி அளவு உயரத்திலிருந்து பேனா மூடி அளவு வரை தான் இந்த ஓவியம் இருக்கும்.

ஓவியங்கள்: பஸிமோ ஆர்டிஸ்டோஸ்டைல் வரைந்தது
 

பார்த்தாலும் பிடிக்கும், பார்க்க பார்க்கவும் பிடிக்கும்!

3டி பென்சில் ட்ராயிங்: 3டி சினிமாவின் கான்செப்டேதான். அதை அப்படியே ஓவியத்தில் உபயோகிப்பதே 3டி பென்சில் ட்ராயிங். காகிதத்தின் மேலே எழுந்து நிற்கும் வீடு, நீந்தும் மீன், மிதந்து செல்லும் படகு என கண்கட்டி வித்தை காட்டும் இந்த வகை ஓவியங்கள்.

பார்த்தாலும் பிடிக்கும், பார்க்க பார்க்கவும் பிடிக்கும்!


பென்சில் ரியலஸ்டிக் ட்ராயிங்: கீழே ஒரு பத்துரூபாய் நோட்டு கிடக்கிறது. அதை எடுப்பதற்காக தொடப் பார்க்கும் போதுதான் தெரியும் அது ஒரு ஓவியம் என்று. அது தான் இந்த பென்சில் ரியாலிஸ்டிக் ட்ராயிங். இந்த ஓவியத்தின் மேக்கிங் வீடியோ ஏராளமாக இணையத்தில் இருக்கிறது, https://www.facebook.com/pages/Pencil-Realistic-Drawing/521842324565068 இந்த லிங்கில் சென்று நீங்களே வியப்படையுங்கள்.



- பா.ஜான்ஸன்