ஒரு லட்ச ரூபாய் திருட்டுப் போனதாக போலீஸில் புகார்செய்தால், கடைசியாக உங்கள் கைக்கு வருவது 50,000-மாகத்தான் இருக்கும். பத்து பவுன் திருடு போனதாகப் புகார் கொடுத்தால், ஐந்து பவுன்தான் கிடைக்கும். இதுக்கு போலீஸ் சொல்லும் காரணம், 'திருடன்கிட்டே இவ்வளவுதாம்பா கைப்பற்ற முடிஞ்சது. கிடைச்சவரைக்கும் லாபம்னு வாங்கிக்க’ என்று.

ஆனால், இரண்டரை பவுன் நகை திருடுபோய்விட்டதாகப் புகார் செய்த ஒருவருக்கு, 350 பவுன் பவுனைத் திருப்பிக் கொடுத்தால் எப்படியிருக் கும்? அப்படி ஒரு சம்பவம் சமீபத்தில் மதுரையில் நடந்துள்ளது. இதில் இன்னொரு வேடிக்கை, புகார் கொடுத்தவர் மீதே பல வழக்குகள் பாய உள்ளன என்பதுதான்.

ஜூன் 14, மதுரை அண்ணா நகர் குருவிக்காரன் சாலையில் வசிக்கும் நகை வியாபாரி சூரியநாராயணின் வீட்டு ஜன்னலை உடைத்து, உள்ளே புகுந்து திருடர்கள் தங்கள் கைவரிசையைக் (கிளவுஸ் மாட்டிக் கொண்டுதான்) காட்டிவிட்டுச் சென்றனர். மறுநாள் அண்ணா நகர் போலீஸில், தனது வீட்டில் இரண்டரை பவுன் நகை திருட்டுப் போய் விட்டதாகப் புகார் செய்தார் சூரிய நாராயணன். திருட்டுப்போனது இரண்டரை பவுன் என்றாலும், வீட்டு ஜன்னலை உடைத்து அட்வெஞ்சர் செய்து திருடியிருப்பதால், கமிஷனர் சஞ்சய் மாத்தூர், இதைக் கண்டு பிடிக்க துணை கமிஷனர் தலைமை யில் தனிப் படையை அமைத்தார்.

பல்வேறு கோணங்களில் விசாரித்த போலீஸுக்கு, சூரிய நாராயணின் கார் டிரைவர் செல்வராஜ் மேல் சந்தேகம் வர, அவரைப் பிடித்து விசாரித்தனர். ரொம்ப அழிச்சாட்டியம் பண்ணாமல், தானும் தன் நண்பர்கள் கணேசன், பாண்டியராஜன் ஆகியோர் இணைந்துதான் தனது முதலாளி வீட்டில் திருடினோம் என்று உண்மையை ஒப்புக்கொண்டார் செல்வராஜ்.

''வெறும் இரண்டரை பவுனுக்கு ஏன் இவ்வளவு ரிஸ்க் எடுத்து திருடினீர்கள்?'' என்று போலீஸ் கேட்டதற்கு, ''நாங்க இரண்டரை பவுன் திருடினதா எந்த மடையன் சொன்னான்? நாங்க திருடினது 350 பவுன் நகையும், 25 லட்ச ரூபாய் ரொக்கமும்'' என்று சொல்லி, திருடியதை போலீஸிடம் ஒப்படைக்க, ஆடிப்போனார்கள்.

'வியாபாரிகளைப் பொறுத்த வரையில் பத்து ரூபாய் காணாமல் போனாலே 50 ரூபாய் என்று அதிகப் படுத்தி சொல்வார்கள். ஆனால், செய்கூலியிலும் சேதாரத்திலும் காசு பார்க்கும் இந்த நகை வியாபாரி ஏன் தன் வீட்டில் நடந்த மெகா திருட்டை, இவ்வளவு குறைத்துச் சொன்னார்?’ என்று போலீஸ் யோசிக்க ஆரம்பித்தது.

புகார் கொடுத்த சூரிய நாராயண னையும் அவருடைய பார்ட்னர் களையும் தூக்கி வந்து போலீஸ் விசாரிக்க, 350 பவுன் நகையும், 25 லட்சம் பணமும் தங்களுக்கு எப்படி வந்ததென்று அவர்களால் சொல்லவும் முடியவில்லை. கணக்கும் காட்ட முடியவில்லை.

போலீஸுக்குப் பொய்த் தகவல் கொடுத்ததாக வழக்கு பதிவுசெய்திருப்பதோடு, இவர்களின் பின்னணி பற்றியும் விசாரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இவர்களை விசாரிக்க வருமான வரித் துறையினரும் களத்தில் இறங்கியுள்ளனர்.

ரொம்ப வினோதமா இருக்குல்ல?

- செ.சல்மான் படம்: பா.காளிமுத்து