இது சரக்கு அடிப்பதைப் பற்றிய அனுபவப் பதிவு. 'ஆரம்பிச்சிட்டாய்ங்கடா’ என்று நீங்கள் அலுத்துக்கொள்வது தெரிகிறது. ஆனால், இது வேற பாஸ். அதாவது சரக்கு அடிச்ச நண்பர்கள் மத்தியில் சரக்கு அடிக்காம மாட்டிக்கிட்ட என்னோட போதை... ச்சீ கதை. வாங்க பாட்டிலை ஓப்பன் பண்ணலாம்!

சின்ன வயசுலே இருந்தே எனக்கு குடிக்கிற பழக்கம் இல்லை. அப்போ ஒண்ணும் தெரியலை. ஆனா, வேலைக்கு வந்த பின்னாடி இது விஷயமா நான் பட்ட பாடு இருக்கே, ஐயயோஓஓஓ...!

ஒரு நாள் படத்துக்குப் போகலாம்னு கிளம்புறப்ப என் அலுவலக நண்பன் ''நானும் வர்றேன்''னு சொல்ல, சரின்னுட்டு மவுன்ட் ரோடு வந்தேன். பஸ்ஸை விட்டு இறங்கிறப்ப நண்பர்கள் படையோட என் நண்பன் வெயிட்டான வரவேற்பு கொடுத்தான். ''மச்சி, சும்மா படத்துக்குப் போனா எஃபெக்ட் இல்லே. ரெண்டு ஸ்மால் விட்டுட்டுப் போகலாம்''னு சொன்னவுடன் 'ஆஹா ஆரம்பத்திலேயேவா?’னு உள்ளுக்குள் கலங்கியவன், மறுக்க முடியாமல் அவர்களுடன் போனேன். இப்படித்தான் நண்பர்களே... ரெண்டு ஸ்மால், நாலு லார்ஜ் ஆகிப்போனது.

வெளியில் வந்ததும் தெருவையே அளந்துகொண்டு அவர்கள் போய்க்கொண்டிருக்க, அந்தப் பக்கம் வந்த ஒரு பெண்ணின் தோள் மேல் கை போட்டுவிட்டான் நண்பன். அந்தப் பெண்ணும் அவளுடன் வந்தப் பையனும் சண்டைக்கு வர, நான் மன்னிப்பு கேட்க வேண்டிய தாயிற்று. தியேட்டரில் டிக்கெட் வாங்கி சீட்டில் அவர்களை உட்காரவைப்பதற்குள் எனக்குக் கண்ணுல தண்ணி வராத குறைதான். உட்கார்ந்த கொஞ்ச நேரத்தில் அத்தனை பேரும் ஃப்ளாட் ஆகித் தூங்க, படம் முடிஞ்சு எழுப்பினேன். 'என்னது, படம் முடிஞ்சிடுச்சா? விளம்பரம் ஓடுதுன்னுதானே தூங்கினோம். நீ எழுப்ப வேண்டியதுதானேடா''னு முறைக்க ஆரம்பிச்சிட்டாங்க. இதோடு நான் ஒதுங்கியிருக்க வேண்டும். முடிந்ததா? ஊஹூம்!

அடுத்ததாக ஒரு நண்பருக்குக் கல்யாணம் என்று பார்ட்டி ஏற்பாடானது.

நான் மறுக்க மறுக்க, விடாமல் என்னை நண்பன் அழைத்துச் சென்றான். எல்லோரும் சரக்கு சாப்பிட, நான் கூல்ட்ரிங்க்ஸ் சாப்பிட்டேன். அப்போது அறிமுகமான நண்பர்கள் என்னை உலக அதிசயம் போல் பார்த்தார்கள்.

'நீங்க ஏன் சாப்பிடறதில்ல?'

'பிடிக்கலை.'

'சரி ஒருவாட்டி டேஸ்ட் பார்க்கலாம்ல?''

'வேணாம் ப்ளீஸ்.'

இப்படிப் போய்க்கிட்டிருந்த உரையாடல் போதை ஏற ஏற, பாதை மாறியது.

'என்ன மச்சி, உன் ஃப்ரெண்ட் தனியா நமக்குத் தெரியாம சாப்பிட்டுட்டு, இங்க நல்லவன் மாதிரி நடிக்கிறாரோ?'

'இல்லடா, அவன் சுத்தமானவன்.'

'தம்மடிப்பாரோ?'

'நோ.'

'சைட்டு?'

'தண்ணி அடிக்கிற நேரத்துல கூட, சைட் அடிக்கிறது கட் ஆகிடக் கூடாதுனுதான் அவன் தண்ணி அடிக்கிறது இல்லேனு நினைக்கிறேன்.'

'அட இங்க பார்ரா... என்ன தலைவா அப்படியா?'

இப்படியே அன்னைக்கு முழுக்க, அவய்ங்க போதைக்கு நான்தான் ஊறுகாய்.

ஆனாலும் நான் திருந்தலை. அடுத்த பார்ட்டிக்கும் என்னை வலுக் கட்டாயமாக் கூட்டிட்டுப் போனான் நண்பன். 'பாசக்காரப் பயலுங்களா இருக்காங்களே... நம்மைக் கூப்பிடாம ஒரு பார்ட்டிகூட இவங்க நடத்தறதில்ல பாரு’னு நான் நெகிழ்ந்தது எவ்வளவு பெரிய தப்புனு அப்புறமாத்தான் தெரிஞ்சுது. 'மச்சான் உன்னை எதுக்கு அழைச்சிட்டு வர்றோம் தெரியுமா? நாங்க மட்டையானா எங்களை வீட்ல கொண்டுபோய் சேர்க்க ஆள் வேணும்ல, அதுக்குத்தான்' என்றான் என் உயிர்த் தோழன். ''டேய் பார்ட்டிக்கு ஹோட்டல் புக் பண்ணிட்டு செக்யூரிட்டிக்கு என்னை புக் பண்றீங்களா' என்றதற்கு, 'நான்சொல்லலே... மச்சான் கற்பூரம் மாதிரி. கப்புனு பிடிச்சுக்குவான்' - இது என் இன்னொரு உயிர்.

அந்த பார்ட்டியில், அன்றுதான் அறிமுகமாகி இருந்த ஒரு நண்பர் கை குலுக்கி ரொம்ப டீசன்டாகப் பேசினார். ''இந்தக் காலத்தில இப்படி ஒருத்தரா? ஆச்சரியமா இருக்கு. ஐ லைக் யுவர் கேரக்டர்'' என்றெல்லாம் சொன்னவர் போதை அதிகமானவுடன் 'கடைக்குப் போய் சிகரெட் வாங்கிட்டு வா' என்றார். எனது நண்பன் பயந்துபோய் தடை செய்வதுபோல் கை உயர்த்த,

அவர், 'நம்ம பயடா இவன்... மாட்டேன்னா சொல்லிடுவான்' என்று வடிவேலு பாணியில் சொன்னார். 'டேய் என் ஃப்ரெண்ட் நட்புக்காக உயிரே கொடுப்பான், சிகரெட் வாங்கிக் கொடுக்க மாட்டானா... மச்சான் நீ போய் வாங்கிட்டு வாடா' என்று என் ஃப்ரெண்டும் சொல்ல நிலவரம் கலவரமானது.

இப்படித்தாங்க, ஒவ்வொரு பார்ட்டிக்கும் யாராவது ஒரு ஃப்ரெண்டு என்னைக் கூப்பிட, நான் மறுக்க, அப்புறம் அவன் இழுத்துட்டுப் போக, அங்கே நான் ஊறுகாய் ஆக... பாவம்ல நான்?

- ஆர்.வி.சரவணன்