சிகரெட் குடிப்பதை நிறுத்துவதற்கு என்னென்னவோ செய்து பார்த்தவரா நீங்கள்? இதோ துருக்கியைச் சேர்ந்த இப்ராஹிம் டிரை பண்ணியதை, நீங்களும் செய்து பார்க்கலாமே!

கடந்த 26 வருடங்களாகத் தினந்தோறும் இரண்டு பாக்கெட் சிகரெட்டை ஊதித்தள்ளியவர் இப்ராஹிம். எத்தனையோ முறை குழந்தைகளின் பிறந்தநாள், திருமணநாள் என சிகரெட்டை விட்டுவிட உறுதிமொழி எடுத்தும் அவரால் நிறுத்த முடியவில்லை. சில மாதங்களுக்கு முன் அவரது தந்தை புகைப்பழக்கத்தால் நுரையீரல் புற்றுநோய் தாக்கி இறந்துபோனார்.

இப்ராஹிமுக்கு முதன்முறையாக உயிர்குறித்த பயம் வந்தது. சிகரெட்டை இந்தத் தடவை முற்றிலும் நிறுத்திவிட வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டவர், புது உத்தியைக் கண்டுபிடித்தார். 'ஹெல்மெட் போல ஒரு கவசத்தை எப்போதும் மாட்டிக்கொண்டால் என்ன?’ என யோசனை பிறந்தது.

சிகரெட் நுழைய முடியாத வண்ணம் இறுக்கமான வடிவமைப்பைக்கொண்ட இந்தக் கவசத்துக்கு இரண்டு சாவிகள். ஒன்றைத் தன் மனைவி காதரிடமும் மற்றொன்றை தன் மகள் ஆயிஷாவிடமும் கொடுத்துவைத்தார். காலையில் அலுவலகம் கிளம்பும்போது மாட்டினார் என்றால், மாலை வீட்டுக்கு வந்துதான் கழற்ற முடியும். இதனால் காலையிலேயே ஃபுல் கட்டு கட்டிவிட்டுதான் அலுவலகம் கிளம்புவார். மதியம் ஸ்ட்ரா போட்டு ஒரு ஜூஸ் குடிப்பார்.

ஆரம்பத்தில் மனைவியே இதை எதிர்த்தாலும் கணவரின் இத்தனை ஆண்டு கால சிகரெட் பழக்கத்தை நிறுத்த வேண்டும் என்ற ஆர்வத்துக்கு மதிப்பளித்து விட்டுவிட்டார். அலுவலகத்திலும் முதலில் கிண்டல் பண்ணியவர்கள் இவரின் மனஉறுதி கண்டு 'இது உண்மையிலேயே ஒரு நல்ல யோசனைதான்!’ என பாராட்டுப் பத்திரம் வாசிக்கிறார்கள்.

'நுரையீரல் மென்மையான பஞ்சு போன்றது’னு அவருக்குத் தெரிஞ் சுருக்கு!

- ஆர்.சரண்