Published:Updated:

அறிவிழி

அண்டன் பிரகாஷ்

அறிவிழி

அண்டன் பிரகாஷ்

Published:Updated:
அறிவிழி

முதலில் பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவிக்கலாம்.

ஆப்பிளின் அலை மென்பொருள் ஆப்பக்கடையான AppStore-க்கு, சென்ற வாரத்துடன் ஐந்து வயதாகிறது. மென்பொருளை விற்கும் கடை என்ற concept  ஏற்கெனவே இருந்தது என்றாலும், இந்தமுயற்சி மூலமாக ஆப்பிள் சாதித்துக் காட்டியிருப்பது மிகப் பிரமாண்டமான சாதனை. இந்த ஐந்து வருடங்களில் இந்தக் கடையில் இருக்கும் கிட்டத்தட்ட 1 மில்லியன் மென்பொருள்கள் 50 பில்லியனுக்கும் மேல் தரவிறக்கம் செய்யப் பட்டு இருக்கின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##

மென்பொருள் தயாரித்தவர்களுக்கு ஆப்பிள் இதுவரை 10 பில்லியன் டாலர்களை நேரடியாகக் கொடுத்திருக்கிறது. மென்பொருள் ஐடியா ஏதாவது இருந்தால், அதை 50 மில்லியன் உலகளாவியப் பயனீட்டாளர்களிடம் கொண்டுச் செல்லும் வசதியை, இப்படிக் கொண்டு வர முடிந்தது ஆப்பிளால் மட்டுமே. Google Play என்ற பெயரில் கூகுள் மென் பொருள் கடையிலும், இதே அளவுக்கு மென்பொருட்கள் இருக்கின்றன. ஆண்ட் ராயிட் தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கும் மொபைல் சாதனங்கள் இந்த மென்பொருள் கடையைப் பயன்படுத்துகின்றன.

உலக அளவில் ஆண்ட்ராயிட் சாதனங் களின் எண்ணிக்கை ஆப்பிளைவிட அதிகம். இப்படி எல்லாம், பல விஷயங்கள் இருந்தா லும், ஆப்பிளின் மென்பொருள் கடையின் வணிகம், ஆண்ட்ராயிட் கடையைவிட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம். புதிதாக தொழில் முனைவுப் புரியும் நிறுவனர்களைப் பார்க்கும்போதெல்லாம், இந்த நாட்களில் நான் கேட்பது 'அவர்களுடைய மொபைல் திட்டம் என்ன...’ என்பதுதான். ஐபோன், ஆண்ட்ராயிட், ஐபேட், விண்டோஸ்  மென்பொருளை இந்த வரிசைக்கிரமத்தில் தயாரித்து வெளியிடுவதே பலரின் திட்டமாக இருக்கிறது. அமேசான் நிறுவனம் தன்னுடைய மென்பொருள் கடைக்கு AppStore என்றுபெயர் வைத்திருப்பது, தங்களின் காப்பீட்டு உரிமைக்கு எதிரானது என்று இரண்டு வருடங்களுக்கு முன்பாகத் தொடர்ந்திருந்த வழக்கை வாபஸ் வாங்கிக்கொண்டிருக்கிறது ஆப்பிள். 'AppStore’ என்றாலே, இப்போது யாருடையது என்பது பயனீட்டாளர்களுக்குத் தெளிவாகத் தெரிந்து விடும் நிலை வந்துவிட்டதால், இந்த வழக்கைத் தொடர்வதில் இனி எந்த அர்த்தமும் இல்லை’ என்று ஆப்பிள் சொல்லியிருப்பது பொருத்த மானது என்றே கருதுகிறேன். இப்படி சொல்வ தனால், அமேசான் சாமான்யப்பட்ட நிறுவனம் என எண்ணிவிட வேண்டாம்.

அமைதியாக ஒரு பிரமாண்ட ராஜ்யத்தை விரிவுபடுத்தியபடியே வருகிறது அமேசான். அதைப் பற்றி இன்னொரு வாரம் விரிவாக பார்க்கலாம்.

தமிழக அரசியல் கட்சியான ம.தி.மு.க. தன்னுடைய கட்சி வளர்ச்சிக்காக நேரடியாக நிதிக் கேட்டு ஆன்லைன் தளங்களில் கொடுக்கப் படும் விளம்பரங்களை, சமீபத்தில் பார்க்கிறேன். இது மிகவும் ஆரோக்கியமானது என்பது எனது எண்ணம். ஏன் இப்படி நினைக்கிறேன் என்பதை விளக்குகிறேன்.

அறிவிழி

அமெரிக்க அரசில் House, Senate என்ற இரண்டு சபைகள் உண்டு. House அமைப்பில் இருப்பவர்கள் காங்கிரஸ்மென் அல்லது காங்கிரஸ் உமன் என அழைக்கப்படுகின்றனர். இது கிட்டத்தட்ட நம்மூர் மக்களவை எம்.பி. பதவி போன்றது. நாட்டை தொகுதிவாரியாக பிரித்து, ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு காங்கிரஸ்மென் / உமன் இருப்பார்கள். ஆக, கலிஃபோர்னியா போன்ற பெரிய மாநிலத்திலிருந்து அதிகமான உறுப்பினர் களையும், நியூ காம்ஷயர் போன்ற துக்கடா சைஸ் மாநிலத்திலிருந்து, சிறிய அளவிலான உறுப்பினர்களை House அமைப்பு கொண்டிருக்கும். House அமைப்பின் உறுப்பினரின் பதவி இரண்டு வருடங்கள் மட்டுமே. அது முடிந்ததும் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டு வர வேண்டும்.

மற்ற அமைப்பான செனட் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. இந்த அமைப்பில் உறுப்பின ராகவும் தேர்தலில் நின்றாக வேண்டும். பரப்பள வையோ, மக்கள்தொகையையோ, பொருளாதார இயக்கங்களையோ கருத்தில்கொள்ளாமல், மாநிலத்துக்கு இரண்டு செனட் உறுப்பினர்கள் என்பதுதான் கணக்கு. மேற்கண்ட உதாரணத்தையே மீண்டும் பார்த்தால், 35 மில்லியன் மக்களைக்கொண்ட கலிஃபோர்னியாவுக்கும், ஒரு மில்லியன்கொண்ட நியூ காம்ஷயருக்கும் தலா இரண்டு செனட்டர்கள் மட்டுமே. செனட்டரின் பதவிக் காலம் ஆறு வருடங்கள். அதன் பின்னர் மீண்டும் மக்களிடம் சென்று தேர்தலில் நின்று, வெற்றிபெற்று வர வேண்டும்.

எந்த மசோதாவும் முதலில் House, பின்னர்  Senate இரண்டிலும் ஒப்புக் கொள்ளப்பட்டு, வெள்ளை மாளிகைக்கு அதிபரின் கையெழுத்துக்கு வர வேண்டும். அதிபரைப் பொறுத்தவரை அவரும் நேரடியாகவே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அவருடைய பதவிக் காலம் நான்கு வருடங்கள். அதன் பின்னர், தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றாக வேண்டும். இரண்டு முறை மட்டுமே ஒருவர் அதிபராகப் பதவி வகிக்க முடியும்.

நிலைமை இப்படி இருப்பதால், மேற்கண்ட அமைப்புகளில்  உறுப்பினராக இருப்பவர்கள், தாங்கள் அவர்கள் இருக்கும் அமைப்பில் செய்ய வேண்டிய பணிகளுடன், மீண்டும் தேர்தலில் போட்டியிட வேண்டியதற்கானத் தயாரிப்புகளை செய்துகொண்டேயிருக்க வேண்டும். இதில் முக்கியமானது நிதித் திரட்டுவது. House  உறுப்பினராக இருக்கும் ஒருவர், ஒரு தேர்தலில் மக்கள் பிரதிநிதி யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உடனேயே, அடுத்த தேர்தலில் போட்டியிடுவதற்காக வாரம் ஒன்றுக்குச் சராசரியாக பத்தாயிரம் டாலர்களைத் திரட்டியாக வேண்டும். இது வெளிப்படையாக நடத்தப்படுவதுடன் 'தொழில்முறை அரசியல்வாதி’ (Professional Politician) என்றுதான் இவர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். தேர்தலுக்காக நிதித் திரட்டல் என்பது பகிரங் கமாகவும், சட்டம் அனுமதிக்கும் விதத்திலும் நடத்தப்படுவதால் முறைகேடுகள் மிகவும் குறைவாக இருப்பதைப் பார்க்க முடி கிறது. இந்தியாவில் தொழில்முறை அரசியல் என்ற பதம் கேவலமாகக் கருதப்படுவதை சமூக ஊடகங்களில் நடை பெறும் உரையாடல்களிலிருந்தும், கூக்குரல்களிலிருந்தும் தெரிந்துகொள்ள முடிகிறது. இது ஆரோக்கியமானது அல்ல என்பது என்னுடைய எண்ணம். வைகோ போன்ற அரசியல்வாதிகள், தங்களின் கட்சிக்கான நிதித் திரட்டலை ஆன்லைன் விளம்பரங்கள் மூலம் வெளிப் படையாகக் கேட்பதும், திரட்டப்படும் நிதிப் பற்றியத் தகவல்களை... சந்தேகத்துக்கு இடமில்லாமல் பகிர்ந்து கொள்வதும்... பொதுவாழ்வில் தூய்மையைக் கொண்டுவரும் முயற்சிகளின் ஒரு சிறு படியாக இருக்கும்.

- விழிப்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism