##~##

 செந்தில் அந்தச் சரிவின் விளிம்புக்கு வந்திருந்தான். நெஞ்சு நிறைய ஊட்டியின் ஆரோக்கியக் காற்றை இழுத்தான். அங்கிருந்து பார்த்தால், சரேல் என இறங்கும் பள்ளத் தாக்கு அடர்த்தியான புதர்கள். குத்திட்டு நின்ற மரங்கள். நீருண்ட குளிர் மேகங் கள். நினைவு தீபாவைத் தேடியது. போன் செய்தான்.

''தீபா, உன் ஸ்டெனோ வேலையை உடனே ராஜினாமா பண்ற..!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''ஏன் செந்தில்..?''

''அழகான, அறிவான, அன்பான ஒரு உதவியாளர் எனக்குப் பக்கத்துலயே தேவைப்படுறாளே!''

''எனக்கு துப்பாக்கி சுடறதுலலாம் முன் அனுபவம் கெடையாதுப்பா. பரவாயில்லையா?'' என்று தீபா மறுமுனையில் சிரித்தாள்.

திடீர் என்றுதான் உணர்ந்தான். வேறு யாருடைய கால்களோ சருகுகளை மெள்ள மிதிக்கும் ஒலி கேட்கவில்லை?

''அப்புறம் பேசறேன் தீபா...'' என்று தொடர் பைத் துண்டித்து, சரேலெனத் திரும்பினான்.

''இப்படித் தனியா வந்து மாட்டிக்கிட்டி யேடா..!'' என்றான் லோகு. அவன் யார் என்று செந்திலுக்குப் புரிய சில கணங்கள் ஆயின. போரூரில் தான் மோதித் தூக்கிய நாகுவின் அதே மூக்கு, அதே கண்கள்.

''ஓ... நீங்கதான் லோகுவா?''

''மரியாதை குடுத்துப் பேசிட்டா, திரும்பிப் போயிடுவேனா? உன் கழுத்தைச் சீவி, மண்ணுல புதைக்கிற வரைக்கும் எங்க அண்ணனோட ஆவி அமைதியாவாதுடா!'' என்று கத்தியைக் காற்றில் வீசினான் லோகு. செந்தில் சட்டென்று பின்னால் நகர்ந்து மரத்தின் மீது மோதி நின்றான்.

''லோகு வேணாம்... மூலைக்குத் தள்ளிட்டா, பூனைகூட புலி ஆயிடும். என் உயிரைக் காப்பாத் திக்கத்தான் அன்னைக்கு அப்படி செஞ்சேன். மத்தபடி, உங்கண்ணனோட எனக்கு என்ன பகை?''

''ஏய் நான் கதை கேக்க வரலை... உன் கதையை முடிக்கத்தான் வந்திருக்கேன்!''

யட்சன்

லோகு செந்தில் மீது பாய்ந்தான். செந்தில், கடைசிக் கணத்தில் நகர்ந்துவிட, லோகு வீசிய வேகத்தில் கத்தி மரத்தில் செருகி, முனை உடைந்தது. லோகு தளரவில்லை. செந்திலின் கண்களைக் குறிவைத்து விரல்களைச் செலுத்தினான். அவனுடைய நகங்களிலிருந்து தப்பிக்க செந்தில் போராட..

சருகுகளை உடைத்து இருவரும் கட்டிப் புரண்டனர். புரண்ட வேகத்தில், ஒரு மரத்தின் வேரில் செந்திலின் உடல் மோதி நிற்க, அவன் மீது அழுந்தியிருந்த லோகு, திடீரென்று சரிவின் விளிம்பைத் தாண்டிப் போனான். செந்தில் கடைசி விநாடியில், பூமியில் இருந்து வெளிப்பட்டிருந்த அந்த வேரைச் சுற்றித் தன் கையைக் கோத்துக்கொண்டான். அவனுடைய சட்டையைப் பிடித்தபடி, லோகு அபாயகரமாக விளிம் பில் தொங்கினான். செந்திலையும் அவனுடைய பாரம் இழுத்தது.

கீழே முடிவு புரியாத பள்ளம். செந்திலின் சட்டை டர்... என்று கிழிய ஆரம்பித்தது. செந்தில் புரண்டு, கையை நீட்டி, லோகுவின் மணிக்கட்டைப் பற்றினான்.

''லோகு, இப்ப நான் என்ன செய்யட்டும்?''

லோகுவின் கண்களில் கிலி.

''உங்க அண்ணனைக் கொன்னேன்னு நீ என்னைக் கொல்லுவ. பதிலுக்கு எங்காளு ஒருத்தன் ஒன்னைக் கொல்வான். இதுக்கு எப்பதான் முடிவு?''

லோகு செயலற்று அண்ணாந்து பார்த் தான். செந்தில் பூமியில் அழுந்தியபடி, அந்த வேரைப் பற்றிக்கொண்டு, லோகுவைக் கொஞ்சம் கொஞ்சமாக மேலே இழுத்தான். ஒரு கட்டத்துக்குப் பிறகு, லோகு இன்னொரு கையை உயர்த்தி, தட்டுப்பட்ட வேறு சில வேர்களைப் பற்றி, தன்னை மேலே இழுத்துக் கொண்டான்.

அந்த முயற்சியில் இருவரும் களைத்தனர். வானத்தைப் பார்த்தபடி, வீழ்ந்துகிடந்தனர். மரண விளிம்பைத் தொட்டுவிட்டு மீண்ட அதிர்ச்சி லோகுவின் மூச்சில் தெரிந்தது. செந்தில் அவனைத் திரும்பிப் பார்த்தான்.

''சுத்திப் பாரு... உலகத்துல ரசிக்கற துக்கு எவ்ளோ கோடி விஷயம் இருக்கு... அதை விட்டுட்டு, எந்தக் காலடி சத்தம் கேட்டாலும், பயந்து பயந்து சாகற வாழ்க்கையைத்தான் கடைசி வரைக்கும் வாழப் போறியா? எல்லாத்துகிட்டயும் அன்பா இருந்து பாரு... அந்த சுகமே தனி...''

லோகுவின் கண்களில் கிலி விலகியது. கண்ணீர் கரகரவென்று வழிந்தது.

''இதே பள்ளத்துல என்னைப் பிடிச்சு தள்ளினாதான் உனக்கு நிம்மதி கிடைக்கும்னா, செய்!'' என்று செந்தில் சொன்னதும் லோகு வாய்விட்டு அழஆரம்பித்தான்.

திமூலத்தின் பார்வையில் கனல் பறந்தது.

''பசங்க என்கிட்ட சொல்லாம இருந்துருவாங்களா? என்னடா முட்டாள் தனம் பண்ணிட்டு வந்திருக்க?'' என்று எகிறி, பொளேரென்று லோகுவை அறைந்தார்.

லோகுவின் சகாக்கள் அவன் கண் களைச் சந்திக்காமல் தவிர்த்தனர்.  

''அவரு புத்தரு... இவரு சீடரு. அவரு அன்பா இருக்கச் சொன்னாராம். அதனால இனிமே கத்தியைத் தொட மாட்டாராம்...''

லோகு தலைகுனிந்து நின்றான்.

''டேய்... நாலு நாள் டயம் தரேன். உன் கையால கைலாசத்தோட தலை உருளணும். இல் லேனா, என் கையால உன் தலை உருளும்.''

றுநாள்.

அதிகாலைச் சூரியனை ரசித்தபடி, கைலாசம் தன் வீட்டு மொட்டை மாடியில் தொட்டிச்செடிகளுக்குத் தண்ணீர் விட்டுவிட்டுத் திரும்பினார். திடுக்கிட்டார்.

அங்கே லோகு நின்றிருந்தான்!

- தடதடக்கும்...