Published:Updated:

அறிவிழி

அண்டன் பிரகாஷ்

அறிவிழி

அண்டன் பிரகாஷ்

Published:Updated:
அறிவிழி

சென்ற வாரக் கட்டுரையில், ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராயிட் சந்தைகளைப் பற்றிப் பேசும்போது 'ஆப்பிள் மென்பொருள் கடையின் வணிகம், ஆண்ட்ராயிட் கடையைவிட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம்’ என்று குறிப்பிட்டிருந்தேன். 'ஆண்ட்ராயிடில் அம்மா இட்லிக் கடை மாதிரி 'மலிவு விலை’

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மற்றும் 'விலை இல்லா’ ஆப்கள் கிடைக்கின்றன. இல்லையா அண்டன்?’ என விகடன் டாட் காமில் வாசகர் ஒருவர் இதற்கான காரணத்தைக் கணித்திருந் தது மிகவும் சரி. சராசரி ஆப்பிள் பயனீட்டாளர் மென்பொருளை விலை கொடுத்து வாங் கத் தயங்குவதில்லை. மாறாக, ஆண்ட்ராயிட் பயனீட்டாளர்களிடம் விற்பது சற்றே கடினம். உதாரணமாக, 200 மில்லியன்களுக்கும் மேலான பயனீட்டாளர்களைக் கொண்ட WhatsApp மென்பொருள் இதுவரை இலவசமாகவே ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராயிட் கடைகளில் கிடைத்துவந்தது. ஆப்பிள் ஐ போனில் இயங்கும் இந்த மென்பொருளைப் பயன்படுத்த சந்தா வசூலிக்கப்போகி றார்கள். வருடத்துக்கு ஒரு டாலர் என்று மிகவும் மலிதாக இருந்தாலும், இதை ஐபோன் பயனீட்டாளர்களிடமிருந்து மட்டுமே வசூலிக்கத் திட்டமிட்டிருப்பது, மேற்படி சராசரி பயனீட்டாளர் நடத்தையைப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.

மென்பொருள் வாங்குவதில் பயனீட்டாளர்கள் சுணக்கம் காட்டுவதால், இப்போதெல்லாம் அலைபேசி மென்பொருள் தயாரிப்பவர்கள் கையாளும் உத்தி, மென்பொருளுக்குள் நடத்தும் உள்வணிகம். In-App Purchasing என்று அழைக்கப்படும் இந்த வணிக முறை மென்பொருளை இலவசமாகக் கொடுத்துவிட்டு அதற்குள் இருக் கும் பல்வேறு வசதிகளைப் பயன்படுத்த பணம் வசூலிக்கும். சில தருணங்களில், 'சுண்டைக்காய் கால் பணம்; சுமை கூலி முக்கால் பணமாக’ இயங்க முற்படும் சில அலைபேசி மென்பொருட்கள் உண்டு. இன்றைய நாள்களில் மிகப் பெரிய

அறிவிழி

டிரெண்டாக இருப்பது ஸ்டிக்கர்கள். அலை பேசியில் மட்டுமே இயங்கும், சமீப மாதங்களில் பிரபலமாகி வரும் சமூகஊடகத்தளமான Path, தகவல் பரிமாறிக்கொள்ள பயன்படும் Line, WhatsApp போன்ற மென்பொருட்களும் பணம் திரட்டக் கையாளும் உத்தி ஸ்டிக்கர்கள்தான். அனுப்பும் செய்திகளுடன் உணர்வுகளைக் கலக்க வசதியாக சிரித்தும், முறைத்தும், அழுதும் என பல்வேறு உணர்வுகளைக் காட்டும் ஸ்மைலி ஸ்டிக்கர்களை மேற்படி மென்பொருட்களில் வாங்கிக்கொள்ளலாம். சில ஸ்டிக்கர்கள் இலவச மாகக் கொடுக்கப்படும். இதை அதிகமாகப் பயன் படுத்த ஆரம்பித்தால், விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கும். ஸ்டிக்கர்களின் பிரபலத்தைப் பார்த்த ஃபேஸ்புக்கும் தகவல் பரிமாறிக்கொள் ளும் தங்களது அலை மென்பொருளில் ஸ்டிக்கர் களை சமீபத்தில் அறிமுகம் செய்திருக்கிறது.

அறிவிழி

பை தி வே, ஆப்பிள், ஆண்ட்ராயிட் இரண்டுமே மிகப் பெரிய நிறுவனங்களின் தீவிர கண்காணிப்பில் 'மூடப்பட்ட’ தன்மையுடன் நடத்தப்பட்டுக்கொண்டிருப்பதால், இவற்றில் மென்பொருட்களைக் கொண்டுபோவது சிரமமாக இருப்பதுடன், பயனீட்டாளர்களுக்கு எந்த மென்பொருள் எங்கே இருக்கிறது என்பதைத் தேடுவது வைக்கோல் போரில் விழுந்த ஊசியைத் தேடும் அனுபவமாகவே இருக்கிறது. இதை நிவர்த்தி செய்ய, இணையத்தின் 'திறந்த’ தரங்களைவைத்துத் தயாரிக்கப்படும் HTML5  சார்ந்த மென்பொருள் சந்தையை வெளியிட்டுஇருக்கிறது பிரபல ப்ரவுசர் தயாரிப்பாளரான Firefox. இது வெற்றிபெற்றால் ஆப்பிள், ஆண்ட் ராயிட் சந்தைகளின் வணிகத்தை மிகப் பெரிய அளவில் பாதிக்கும். இதைக் காலத்தின் கட்டா யம் என்றே சொல்லலாம்!

கணினிகளின் உபயோகம் குறைந்தபடியே வருகிறது என்பது பல்வேறு கணினி நிறுவனங்களின் வணிக அறிக்கைகளைப் பார்க்கும்போது தெரியவருகிறது. இதைவைத்து, டேப்லட் தயா ரிக்க முனைந்தவர்கள் அனைவரும் வெற்றி பெற்றுவிடுகிறார்கள் எனச் சொல்லிவிட முடி யாது. பல நிறுவனங்கள் பரிதாபமாகத் தோல்வி அடைந்திருக்கின்றன. முதல் நிறுவனம் பிளாக் பெர்ரி அலைபேசி நிறுவனமான RIM ப்ளேபுக் என்ற பெயரில் வெளியிட்ட டேப்லட் சாதனத்தை தொடர்ந்து பராமரிக்கப் போவதில்லை என அறிவித்திருக்கிறது. சில லட்சங்களே இந்த சாதனம் விற்கப்பட்டிருப்பதால், இதனால் பெரிய விளைவு எதுவும் இருக்காது என்பது எனது கணிப்பு. அது மட்டுமல்லாமல்; வருமா னம் தொடர்ந்து குறைந்துகொண்டே இருக்கும் இந்த நிறுவனத்தை, இதன் இயங்கு மென்பொருளுக்காக யாஹூ அல்லது அதுபோன்ற நிறு வனம் விரைவில் வாங்கிவிடும் என நினைக்கிறேன்.

அறிவிழி

அடுத்தது, நூக் என்ற பெயரில் Barnes & Noble தயாரித்த டேப்லட்டும் சிக்கலுக்குள் இருக்கிறது. எதிர்பார்த்தபடி விற்பனை இல்லை என்ற உண்மை இந்த நிறுவனத் தலைவரின் பதவிக்கே உலைவைத்து இருக்கிறது. இவை எல்லாவற்றையும் விட இந்தப் பிரிவில் மிகப் பெரிய அளவில் அடி வாங்கியிருப்பது மைக்ரோ சாஃப்ட். தனது Surface RT டேப்லட் சாதனம் விற்காமல் தேங்கிவிட்டதால், அதற்கான நஷ்டம் 900 மில்லியன் டாலர்கள் என சென்ற வாரம்  அறிவித்திருக்கிறது மைக்ரோசாஃப்ட். பல மாதங்களுக்கு முன்னால், இந்தச் சாதனம் வெளியிடப்பட்டபோது இந்தத் தொடரில் நான் எழுதியது நினைவிருக்கலாம்... 'இரண்டு நாட் கள் பயன்படுத்திய பின்னர் பொடி நடையாக நடந்து Surface-ஐ திரும்பக் கொடுத்துவிட்டேன். மைக்ரோசாப்ட் அடுத்த முயற்சியில் உங்களுக்கு வெற்றி உண்டாகட்டும்’! நான் மட்டுமல்ல; லட்சக்கணக்கானவர் கள் இதையேதான் செய்திருக்கிறார் கள் போலிருக்கிறது. மைக்ரோ சாஃப்ட்டின் அடுத்த முயற்சியான Surface PRO சிறப்பாக இருப்பதாகக் கேள்விப்படுகிறேன்!

- விழிப்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism