Published:Updated:

குழந்தைகள் தின சிறப்பு கூகுள் டூட்ல்: அசத்திய அஸ்ஸாம் சுட்டி!

விகடன் விமர்சனக்குழு
குழந்தைகள் தின சிறப்பு கூகுள் டூட்ல்: அசத்திய அஸ்ஸாம் சுட்டி!
குழந்தைகள் தின சிறப்பு கூகுள் டூட்ல்: அசத்திய அஸ்ஸாம் சுட்டி!

வம்பர் 14 தேதியை நாம் குழந்தைகள் தினமாக கொண்டாடி வருகிறோம். அந்த கொண்டாட்டத்தில் கூகுளும் தன்னை இணைத்து கொண்டு ஒவ்வொரு வருடமும் குழந்தைகள் தினத்தை கொண்டாடி வருகிறது. குழந்தைகள் தினத்தை முன்னிட்டு கடந்த 4 வருடங்களாக குழந்தைகள் தின சிறப்பு டூடிலை வெளியிட்டு வருகிறது.

குழந்தைகள் தின சிறப்பு கூகுள் டூட்ல்: அசத்திய அஸ்ஸாம் சுட்டி!

இந்த முறை நேருவின் 125வது பிறந்த நாளில் 'இந்தியாவில் நான் பார்க்க விரும்பும் இடங்கள்' என்ற தலைப்பில் மாணவர்களிடையே கூகிள் டூட்ல் என்ற போட்டியை நடத்தியது. பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் இந்த போட்டியில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். தங்களின் திறமைகளை வண்ணங்களாக தீட்டி கூகுளுக்கு அனுப்பி இருந்தனர்.

பல கட்ட தேர்வுகளுக்கு பிறகு இறுதி போட்டிக்கு 12 குழந்தைகள் தேர்வானார்கள். அவர்களில் அஸ்ஸாமை சேர்ந்த 'வைதேகி ரெட்டி' இந்த வருடத்துக்கான டூட்ல் போட்டியில் வெற்றி பெற்றார்.   'அஸ்ஸாமின் இயற்கை மற்றும் பண்பாடு' என்ற தலைப்பில் வைதேகி வரைந்திருந்த டூட்ல் இன்று பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.

குழந்தைகள் தின சிறப்பு கூகுள் டூட்ல்: அசத்திய அஸ்ஸாம் சுட்டி!

அந்த படத்தில் அஸ்ஸாமின் இயற்கை வளங்களையும், அங்குள்ள வன விலங்குகளையும், அஸ்ஸாம் மாநில மக்களின் வாழ்வியலையும் அழகாக காட்டி இருக்கும் வைதேகிக்கு நமது பாராட்டுக்களையும் குழந்தைகள் தின வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்வோம்.

-இ.லோகேஸ்வரி