Published:Updated:

செக்யூரிட்டி ஆப்-க்கும் இருக்கிறது ஆப்பு!

விகடன் விமர்சனக்குழு
செக்யூரிட்டி ஆப்-க்கும் இருக்கிறது ஆப்பு!
செக்யூரிட்டி ஆப்-க்கும் இருக்கிறது ஆப்பு!
செக்யூரிட்டி ஆப்-க்கும் இருக்கிறது ஆப்பு!

லுவலகம், நண்பர்கள், தம்பி, தங்கை என வீட்டில் உள்ளவர்கள், எதிர்வீட்டு குட்டீஸ் என... நம் மொபைலை யார் எப்போது எடுத்து எதைப் பார்ப்பார்கள் என்று தவித்துக்கொண்டே இருப்பவர்கள் பலர். அதற்கான தீர்வு தான் ‘ஆப் லாக்’ என்ற செக்யூரிட்டி ஆப். மொத்தமாக போனை லாக் செய்வதற்கும், ‘ஆப் லாக்’ செய்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு.

வித்தியாசங்கள் என்ன?

ஆப் லாக்கை நமது போனில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தும்போது, நம் போனில் மற்றவர்கள் பார்க்க வேண்டாம் அல்லது பயன்படுத்த வேண்டும் என்று நினைப்பவற்றை எல்லாம் லாக் செய்துவிடலாம். சாதாரண செக்யூரிட்டி ஆப்தானே என நீங்கள் நினைக்கலாம். ஆனால், நமது போனில் இருக்கும் எல்லாவற்றுக்கும் பாதுகாப்பு கொடுப்பது என்பது நல்ல விஷயம்தானே?

இந்த ஆப்-ஐ டவுன்லோட் செய்த பின், அதில் சென்று பார்த்தால் இன்ஸ்டால்/அன் இன்ஸ்டாலில் தொடங்கி மியூஸிக் பிளேயர், இன்பாக்ஸ், கேம்ஸ், மொபைல் டேட்டா, வைஃபை, காலண்டர், கேமரா, கால் லாக், கான்டாக்ட்ஸ், கேலரி, செட்டிங்ஸ், போனில் இருக்கும் மற்ற ஆப்ஸ் என நமது போனில் இருக்கும் எல்லாவற்றையும் லாக் செய்வதற்கான ஆப்ஷன் கேட்கும். இதில் நமக்குத் தேவையானதை லாக் செய்து கொள்ளலாம். எல்லாவற்றுக்கும் ஒரே பாஸ்வேர்ட்தான். இதனால் நமது போனில் கேம்ஸ், ஃபோட்டோ, மெஸேஜ், பிரவுஸிங் என்று எதையும் மற்றவர்களால் பயன்படுத்த முடியாது. பாஸ்வேர்டு கேட்கும்.

போன் லாக் என்பது இதில் வராது என்பது குறிப்பிடத்தக்கது. அதை நாம் எப்போதும் போல செட்டிங்கில் சென்று லாக் செய்து கொள்ளலாம். ஆனால், இந்த ஆப்-ஐ இன்ஸ்டால் செய்த பின் போன் லாக்குக்கு வேலை இல்லாமல் போய்விடும். ஆண்ட்ராய்டு போனில் இதைப் பயன்படுத்தலாம். இதனை டவுன்லோட் செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.domobile.applock&hl=en

சரி, டவுன்லோடு செய்துவிட்டோம். இனி நம் போனில் சேமித்துள்ள தகவல்கள் பாதுகாப்பாக இருக்குமா என்றால், இல்லை! செக்யூரிட்டி ஆப்-க்கும் இருக்கிறது ஆப்பு! பொதுவாக, இந்த ஆப்-ஐ பயன்படுத்துபவர்கள் தங்களின் போனில் இருக்கும் எல்லாவற்றையும் லாக் செய்து வைப்பார்கள். ஆனால், செட்டிங்ஸை லாக் செய்யத் தவறி விடுவார்கள். ‘செட்டிங்ஸ்ல நம்மைப் பற்றிய விஷயங்கள் என்ன இருக்க போகுது? அப்பப்போ செட்டிங்ஸ்ல ஏதாவது வேலை இருந்து போனா, பாஸ்வேர்டு கேட்டு எரிச்சலாக்கும். அதனால செட்டிங்ஸுக்கு எதுக்கு லாக்?’ என்று பலரும் அதைச் செய்வதில்லை. ஆனால், இதுதான் நம் மைனஸ் பாயின்ட். இதை கிரிமினல்கள் தங்களின் பிளஸ் பாயின்ட் ஆக்கிவிடுவார்கள்.

எப்படி?


நாம் செட்டிங்ஸ்-ஐ லாக் செய்யவில்லை என்றால், நமது போன் பிறரின் கைக்குக் கிடைக்கும்பட்சத்தில், செட்டிங்ஸுக்கு சென்று, அதில் ‘ஆப்’ என்பதில் சென்றால், நமது போனில் இருக்கும் அனைத்து ஆப்களும் வரும். அதில் ‘ஆப் லாக்’ செய்யப்பட்ட ஆப்-களும் வரும். அதை க்ளிக் செய்தால், ‘FORCE STOP‘, ‘UNINSTALL’ என்று இரண்டு ஆப்ஷன்கள் இருக்கும். இதில் ‘FORCE STOP’ என்பதை கிளிக் செய்துவிட்டால், ‘ஆப் லாக்’ மூலம் கொடுத்து இருக்கும் அனைத்து லாக்குகளும் அன்லாக் ஆகிவிடும். மேலும் ‘ஆப் லாக்’ செயல்படாது. இவ்வாறு அன்லாக் செய்த பின், நமது அனைத்து தகவல்களையும் பிறரால் பார்க்கவும், பயன்படுத்தவும் முடியும்.

‘ஆப் லாக்’ பயன்படுத்தியும் தகவல்கள் எப்படி வெளியே சென்றன என்று இத்தனை நாட்களாகக் குழம்பியவர்களுக்கு, இப்போது விடை தெரிந்ததா?
ஆக, 'ஆப் லாக்'குடன் செட்டிங்ஸையும் லாக் செய்துவிட்டால் வீடோ, அலுவலகமோ... இனி, போனை பயம் இல்லாமல் வைத்துவிட்டு மற்ற வேலைகளைப் பார்க்கலாம்தானே?!

-கே. அபிநயா