Published:Updated:

டீன் கொஸ்டீன்

நரைக்கு இல்லையா நிரந்திரத் தீர்வு?

##~##

ஆ.சுரேஷ், துறையூர்.

 ''மொபைல் போன் இன்ஷூரன்ஸ் என்கிறார்களே... அது எடுப்பதால் நமக்கு உண்மையிலேயே லாபமா... விளக்கவும்?''

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பிரவீன்குமார், யுனிவெர்செல்.

''மொபைல் போன் வாங்கும் கடையிலேயே காப்பீட்டுக்கான படிவத்தைப் பூர்த்திசெய்து கொடுக்க வேண்டும். மொபைலின் மதிப்பில் 2.99 சதவிகித தொகை முன் பணமாக வசூலிக்கப்படும். மொபைல் திருடு போனால், காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதற்கான சி.எஸ்.ஆரின் நகல், மொபைல் வாங்கியதற்கான ஒரிஜினல் பில், தொலைந்து போன சிம் கார்டின் டூப்ளிகேட் சிம் கார்டு பெற்றதற்கான அத்தாட்சி போன்றவற்றைத் தக்க படிவத்துடன் இணைத்து காப்பீடு செய்யப்பட்ட வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். உங்கள் மொபைல் விலை

டீன் கொஸ்டீன்

10 ஆயிரத்துக்குக் கீழ் என்றால், போலீஸ் எஃப்.ஐ.ஆர். தேவை இல்லை. அதைக் காட்டிலும் அதிகம் என்றால், மேற்குறிப்பிட்ட ஆவணங்களுடன் எஃப்.ஐ.ஆர் அவசியம். நீங்கள் சமர்ப்பித்த ஆவணங்களின் நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டதும் ஒரு மாதத்துக்குள் உங்களுக்கான காப்பீட்டுத் தொகை கிடைக்கும். காப்பீட்டுத்தொகை உங்கள் மொபைல் மாடலின் அப்போதைய சந்தை நிலவரத்தைப் பொறுத்தது!''

எம்.சிவா, சென்னை-91.

''நான் சமீபத்தில் ஏழு ஜோடி அலங்கார மீன்கள் வாங்கினேன். ஆனால், அவை மொத்தமும் ஒவ்வொன்றாக இரண்டே வாரங்களில் இறந்துவிட்டன. அவற்றை எப்படிப் பக்குவமாக வளர்ப்பது?''

டீன் கொஸ்டீன்
டீன் கொஸ்டீன்

ராவணீஸ்வரன், இணை பேராசிரியர்,
மீன்வள ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையம்,
தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம்.

''தண்ணீர் தொட்டியில் ஆக்சிஜன் அளவு குறைவாக இருப்பது, குளோரின் அளவு அதிகமாக இருப்பது, ஏற்கெனவே மீன்கள் நோய்வாய்ப்பட்டு இருப்பது என மீன்கள்இறப்புக்குப் பல காரணங்கள் இருக்கலாம். மீன் தொட்டியைப் புதிதாக வாங்கி அதைப் பதப்படுத்தாமல் மீன்களை நீந்தவிட்டாலும் இறக்க வாய்ப்பு உண்டு. சிலர் மீன்கள் நன்றாக வளர வேண்டும் என்று, அதிக அளவு உணவைத் தொட்டியில் இறைப்பார்கள். ஒரு நாளைக்கு ஒரு முறை உணவளித்தாலே மீன்களுக்குப் போதும். ஒவ்வொரு மீனுக்கும் தண்ணீர், ஆக்சிஜன், சூழல் என அனைத்தும் வேறுபடும். அதனால் மீன் வாங்கும்போதே அந்தக் கடைகளில் அதன் வளர்ப்பு முறைகள்பற்றி தெரிந்து கொண்டு, அதற்கு ஏற்ப வாங்கி வளர்ப்பது நல்லது!''

டீன் கொஸ்டீன்

ஜெ.பாலமுருகன், அரக்கோணம்.

''எனக்கு கடந்த 2008 ஜூன் 27 அன்று திருவள்ளுவர் மாவட்டம் பள்ளிப்பட்டியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. அவளுக்கு இன்று வரை நான் பிறப்புச் சான்றிதழ் வாங்கவில்லை. இனிமேல் அதை நான் பெற முடியுமா? வழிகாட்டுங்கள்!''

மா.சுப்பிரமணியன், சென்னை நகர மேயர்.

டீன் கொஸ்டீன்

''குழந்தை பிறந்தது தனியார் மருத்துவமனையாக இருந் தாலும், அரசாங்க மருத்துவமனையாக இருந் தாலும் நகராட்சி அலுவலகத்தில் உள்ள சுகாதாரத் துறையில் உடனடியாக குழந்தையின் பிறப்பு பதிவு செய்யப்படும். அதனால், உங்கள் குழந்தையின் பிறப்பும், நேரமும் அதில் கண்டிப்பாகப் பதிவாகி இருக்கும். நீங்கள் உங்கள் மகள் பிறந்த ஊரின் நகராட்சி அலுவலகத்தில் இயங்கிவரும் சுகாதாரத் துறைப் பிரிவு அலுவலகத்தில் உங்கள்பெயர், மற்றும் மனைவியின் பெயரைச் சொன்னாலே அரை மணி நேரத்தில் உங்கள் மகளின் பிறப்புச் சான்றிதழை ஒப்படைத்துவிடுவார் கள். அல்லது முனிசிபல் கமிஷனரிடம் சென்றால், அவர் உங்களை வழி நடத்துவார். கவலை வேண்டாம்!''    

பேரவை கொண்டான், கரும்பம்குளம்.

''என் சம்பளத்தில் மாதந்தோறும் வருமான வரி பிடித்து வருகிறார்கள். ஆண்டுக் கடைசியில் அதிகமாக வரி பிடிக்கப்பட்டு இருந்தால், நான் அதைத் திரும்பப் பெற என்ன செய்ய வேண்டும்?''

சதிஷ்குமார், ஆடிட்டர்.

டீன் கொஸ்டீன்

''நிதி ஆண்டின் ஆரம்பத்திலேயே (ஏப்ரல் மாதம்), அந்த ஆண்டு நீங்கள் வரிச் சலுகை கிடைக்கும் திட்டங்களில் எவ்வளவு தொகையை முதலீடு செய்யப் போகிறீர்கள் என்ற விவரத்தை உங்கள் அலுவலக அக்கவுண்ட் பிரிவில் சொல்ல வேண்டும். பி.எஃப்., பி.பி.எஃப், தேசிய சேமிப்புப் பத்திரம், வங்கி ஃபிக்ஸட் டெபாசிட், வீட்டுக் கடனில் திரும்பச் செலுத்தும் தொகை, வரிச் சேமிப்பு மியூச்சுவல் ஃபண்ட் உள்ளிட்டவற்றில் நிபந்தனைக்கு உட்பட்டு வருமான வரிச் சலுகை இருக்கிறது. உங்களின் முதலீட்டுத் தொகைக்கு ஏற்ப, வரியைக் குறைத்துப் பிடிப்பார்கள். அல்லது வரி பிடிக்க மாட்டார்கள். இல்லை என்றால், ஜனவரி மாதத்தில் அது வரை முதலீடு செய்துள்ள விவரம் மற்றும் மார்ச் கடைசி வரை முதலீடு செய்ய இருக்கும் விவரத்தைத் தெரிவித்தால், மீதி உள்ள மாதங்களுக்கு வரிச் சலுகை கிடைக்கும். அப்படியும் வரி பிடிக்கப்பட்டு இருந்தால், வருமான வரிக் கணக்கு விவரம் தாக்கல் படிவத்தில் கூடுதலாக வரி கட்டியிருக்கும் விவரத்தைக் குறிப்பிட்டு, அந்தப் பணத்தைத் திரும்பப் பெற முடியும். கூடுதல் விவரங்களுக்கு வருமான வரித் துறையின் இணையதள முகவரியான www.incometaxindia.gov.in -  ஐப் பார்வையிடவும். வழக்கமான முறையில் வருமான வரித் துறை அலுவலகத்துக்கு நேரில் சென்று வரிக் கணக்கு விவரத்தைத் தாக்கல் செய்தால், பணம் திரும்பக் கிடைக்க குறைந்தது ஓராண்டு காலம் ஆகும். வருமான வரி கணக்கு தாக்கல் படிவத்தில், உங்கள் வங்கியின் பெயர் மற்றும் எம்.ஐ.சி.ஆர். கோட், கணக்கு எண் போன்றவற்றைக் குறிப்பிட்டால் உங்கள் வங்கி கணக்கிலே கூடுதலாகக் கட்டிய வரி வரவு வைக்கப்பட்டுவிடும். வழக்கமாக ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் தொடங்கி ஜூலை கடைசி வரை, முடிந்த நிதி ஆண்டுக்கான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யலாம். அதைத் தாண்டிவிட்டால் கூடுதலாக கட்டிய வரியைத் திரும்பப் பெற முடியாது!''

வி.வசந்தா, காரைக்குடி.

''எனக்கு 40 வயது. சமீபமாக எனக்குத் தலை முடி நரைக்கத் தொடங்கியிருக்கிறது. ஒரு மாதம் ஹேர் டை அடித்தேன். டையில் இருக்கும் கெமிக்கல் காரணமாக அலர்ஜி ஆகிவிட்டது. முழுக்க மூலிகைகளினால் ஆன டைகிடைக்குமா? அல்லது வீட்டிலேயே இயற்கை முறையில் தயாரிக்க வாய்ப்பு இருக்கிறதா?''

டீன் கொஸ்டீன்

வீணா, அழகுக் கலை நிபுணர்.

''கெமிக்கல் கலக்காத ஹேர்டையே  கிடையாது. டையில் சாயத்தைப் படர விட்டு, கறுப்பாக்கும் அமோனியா ஏற்றுக்கொள்ளாமல்தான் அலர்ஜி ஏற்பட்டு இருக்கிறது. அமோனியா அளவு குறைவாக இருக்கும் அல்லது அமோனியாவே கலக்காத ஹேர் டை களை நீங்கள் உபயோகிக்கலாம். ஆனால், அமோனியாவின் அளவுகுறைந் தால், டையின் பலனும் அதற்கு ஏற்பக் குறைந்துவிடும். உங்களுக்கான ஒரே தீர்வு 'ஹென்னா’ மட்டுமே. ஆனால், ஹென்னா நரையைப் போக்காது. உங்கள் கூந்தலின் நிறத்தைச்செம்பட்டை யாக மாற்றிவிடும். வீட்டிலேயே சிலர் நெல்லிக்காய், கறிவேப்பிலை, வெந்தயத் தைக் காயவைத்து தேங்காய் எண்ணெ யில் கலந்து உபயோகிப்பர். ஆனால், அது ஆரம்பகட்ட நரையினை மட்டுமே கட்டுப்படுத்தும். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், நரை முடிக்கு நிரந்தரத் தீர்வு இன்னும் கண்டுபிடிக்கப் படவில்லை வசந்தா!''

டீன் கொஸ்டீன்