Published:Updated:

விகடன் மேடை - பி.சி.ஸ்ரீராம் பதில்கள்

விகடன் மேடை - பி.சி.ஸ்ரீராம் பதில்கள்

வாசகர் கேள்விகள்

விகடன் மேடை - பி.சி.ஸ்ரீராம் பதில்கள்

வாசகர் கேள்விகள்

Published:Updated:
விகடன் மேடை - பி.சி.ஸ்ரீராம் பதில்கள்
##~##

கி.ராமலிங்கம், விருத்தாச்சலம்.

'' 'அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் 'அப்பு’  கமலின் குள்ள ரகசியம் என்ன? இப்போதாவது சொல்லுங்களேன்!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''கமல் கால் மடிச்சு நடிச்ச சில இடங்கள் போக, பல இடங்கள் கேமரா ட்ரிக். கமல் ஃப்ரேம் ஓரத்தில் இருப்பார். நான் தேவைக்கு அதிகமாகவே சர்க்கஸ் அரங்கத்தின் கலர் கல ரான கேலரியை ஃப்ரேமில் காட்டுவேன். 'அங்கே ஏதோ இருக்கு’னு உங்க பார்வை திசை திரும்பும் சமயம், கமலோட காலை, அவரோட நடவடிக்கையை உன்னிப்பாக் கவனிக்க மாட்டீங்க. இந்த மாதிரி பல ஃப்ரேம்களில்ரசிகர் களை ஏமாத்தினோம். படம் முழுக்க இப்படி ரசிகர்களை நம்பவைக்க கமல் ரொம்ப மெனக் கெட்டார். அந்தப் படத்தின் மேக்கிங்கை மட்டும் தனி புத்தகமாவே எழுதலாம். 'அப்பு’ கமலின் போர்ஷன் மட்டும் கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஷூட் பண்ணோம். இப்போ அந்தப் படத்தை பொறுமையா ஃப்ரீஸ் பண்ணிப் பண் ணிப் பார்த்தா நீங்களே பல கேமரா ட்ரிக்ஸை சுலபமாக் கண்டுபிடிச்சிருவீங்க. இப்போ டெக் னாலஜி எதையும் சாத்தியப்படுத்தும் நிலைமை யில் இங்கே எல்லாம் சாத்தியம். ஆனா, அப்படி எந்த டெக்னாலஜியும் இல்லாத அந்த நாட்களிலேயே கமல் அட்டகாசப்படுத்தியதுதான் ஆச்சர்யம்!''

விகடன் மேடை - பி.சி.ஸ்ரீராம் பதில்கள்

ஆர்.கிருத்திகா, கீரனூர்.

''விக்ரம், அஜித், விஜய், சூர்யா... இவர்கள்  பெர்ஃபார்மன்ஸை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

  ''விஜயை பெர்சனலா எனக்குத் தெரியாது. அவரை நேர்ல பார்த்ததுகூட கிடையாது. அவர் நடிச்ச 'துப்பாக்கி’ பார்த்தேன். ரொம்பப் பிடிச்சிருந்தது. இந்த மாதிரிப் பண்ணினா அவரை எல்லாருக்கும் பிடிக்கும்.

விக்ரம், அஜித் ரெண்டு பேரையும் சின்ன வயசுல இருந்தே எனக்குத் தெரியும். அஜித் கூட நாலைஞ்சு  விளம்பரங்கள் பண்ணியிருக் கேன். ஒரு பவுடர் விளம்பரத்தில் ஒரு பொண்ணு சைக்கிள் ஓட்டிட்டு வரும். பின்னாடியே நாலைஞ்சு பசங்க ஓடி வருவாங்க. அதில் ஒருத் தரா அஜித் நடிச்சார். ஆனா, சினிமாவுல நடிக்க ஆரம்பிச்ச பிறகு,  அவரோட வளர்ச்சி அபார மானது. அவர் நடிச்ச 'முகவரி’ படத்துக்கு ஒளிப்பதிவு பண்ணேன். 'வரலாறு’ படத்தில் 'காற்றில் ஒரு வார்த்தை...’ பாட்டுக்கு மட்டும் ஒளிப்பதிவு பண்ணினேன். அந்தப் பாட்டை ரஹ்மான் கட் பண்ணாம அப்படியே கொடுத்துட் டார். கிட்டத்தட்ட ஏழு நிமிஷம் ஓடுச்சு மியூஸிக். அதனால என்னை ஒளிப்பதிவு பண்ணக் கூப்பிட் டாங்க. நான் முதன்முதலாப் பார்த்தப்போ அஜித் எப்படி இருந்தாரோ, அப்பவும் அப்படியே இருந் தார். ஹி இஸ் எ ஜெம்!

விக்ரமோட 'மீரா’ பண்ணேன். இப்போ 'ஐ’ படத்தில் அவர் நடிப்பு என்னை பிரமிக்க வைக்குது. நிச்சயம் இந்தப் படத்துக்காக அவர் பேர் தேசிய விருதுப் பட்டியலில் இடம் பிடிக்கும்.

என் ஜூனியர் கே.வி.ஆனந்த் ஒளிப்பதிவு பண்ண 'நேருக்கு நேர்’லதான் சூர்யா அறிமுகம்.  ஆரம்பத்துல இருந்தே சூர்யா மேல எனக்கு ஒரு பாசம் உண்டு. சூர்யா- ஜோதிகாவை வெச்சு நான் ஒரு காபி விளம்பரம் ஷூட் பண்ணேன். வேலையில் ரொம்ப சின்ஸியரானவர்.  

எல்லாரும் நல்லா உழைக்கிறாங்க. ஒவ்வொரு படத்திலும் அடுத்தடுத்த லெவலுக்குப் போறாங்க. அவங்கவங்க தகுதிக்கேத்த உயரத்துல அழகா இருக்காங்க. ஆல் தி பெஸ்ட்!''

எஸ்.ஜே.தீன், திட்டச்சேரி.

விகடன் மேடை - பி.சி.ஸ்ரீராம் பதில்கள்

'' 'ரோஜா’-வுக்கு முன்னரே ஏ.ஆர்.ரஹ்மானுடன் விளம்பரங்களில் பணிபுரிந்தவர் நீங்கள். அப்போது ரஹ்மான் எப்படி?''  

''அப்போ நான் நிறைய விளம்பரப் படங்களுக்கு ஒளிப்பதிவு பண்ணிட்டு இருந்தேன். சினிமா படங்களுக்கு மியூஸிக் கம்போஸிங் முடிச்ச பிறகு, ராத்திரி ஒன்பது மணிக்கு மேலேதான் விளம்பரப் படங்களுக்கு மியூஸிக் கம்போஸ் பண்ண  ஸ்டுடியோ கொடுப்பாங்க. ஸ்டுடியோவுக் காகக் காத்திருந்து காத்திருந்து ரொம்ப தாமதமாகத்தான் வேலையை ஆரம்பிப் போம். அப்போ ரஹ்மான் கீபோர்டு பிளேயர். அதிகாலையில இருந்து வேற வேற இசையமைப்பாளர்களுக்கு கீபோர்டு வாசிப்பார். நாங்க ஸ்டுடியோவுக்குள் நுழையும்போது பிரபல இசையமைப்பாளர் கள் சோர்வா வெளியே போவாங்க. ஆனா, அந்த நேரத்துலயும் ரஹ்மான் மட்டும் ரொம்ப ஃப்ரெஷ்ஷா ஸ்டுடியோ படிக்கட்டுகளில் உட்கார்ந்து புதுப் புது ஜிங்கிள்ஸுக்கு முயற்சி பண்ணிட்டு இருப்பார்.

அப்போ நான் தயாரிப்பாளர், புரொ டக்ஷன் மேனேஜர், ஒளிப்பதிவாளர்னு பல வேலைகளை இழுத்துப் போட்டுப் பார்த்துட்டு இருந்ததால், எப்பவும் ரொம்ப டென்ஷனா இருப்பேன். ஆனா, ரஹ்மான் மட்டும் எந்தச் சூழ்நிலையிலும் அமைதியா, நிதானமா அவரோட வேலை யைப் பார்த்துட்டு இருப்பார். அப்பவே பல சமயம், 'இவர் கொஞ்சம் ஸ்பெஷலா இருக்காரே’னு நினைச்சிருக்கேன். அப்புறம் ஒருகட்டத்துக்குப் பிறகு அவரை நான் ஃபாலோ பண்ணலை. 'தேவர் மகன்’ ஷூட்டிங் சமயம் நான் எங்கே போனாலும், 'சின்னச் சின்ன ஆசை’ பாட்டு கேட்டுட்டே இருந்தது. டீக்கடை, சலூன், தியேட்டர், ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்னு எங்கே யும் எப்போதும் சின்னச் சின்ன ஆசைதான். ஒருகட் டத்துல அந்தப் பாட்டு கேட் காம ஒருநாள் கூட முடியா துங்கிற நிலைமை. 'யார் போட்ட பாட்டு’னு விசாரிச்சா, ரஹ்மான் பேரைச் சொன் னாங்க. சந்தோஷமா இருந்தது.

விகடன் மேடை - பி.சி.ஸ்ரீராம் பதில்கள்

அப்புறம் 'அலைபாயுதே’ படத்தில்தான் ரஹ் மானை மறுபடி சந்திச்சேன். அந்தப் படத்தின் கதைப்படி மாதவன் எப்பவும் பைக்ல சுத்திட்டே இருக்கிற பையன். அதனால அவர் பைக் ஓட்டுற மாதிரி நிறைய மான்டேஜ் எடுத்து வெச்சிருந்தேன். அதை எல்லாம் பார்த்த ரஹ்மான், 'இதைவெச்சே ஹீரோ என்ட்ரி கொடுக்கலாம். அதில் ஒரு ஸாங் போடலாம் சார்’னு மணிகிட்ட ஐடியா சொன்னார்.  அப்படி வந்ததுதான் 'என்றென்றும் புன்னகை...’ பாட்டு. அப்போ ஹிட் அடிச்ச அந்தப் பாட்டு இப்பவும் செல்போன் ரிங்டோன், காலர்டோன்னு லைவ்ல இருக்கு. ஆர்வம், திறமை, அர்ப்பணிப்பு... இந்த மூணு அம்சங்கள்லயும் ரஹ்மான் சம்திங் ஸ்பெஷல்தான்!''

எஸ்.ராகவன், திருப்பூர்.

''சிவாஜி, கமல் நடிப்பை முதல் பார்வையாளரா கேமரா லென்ஸ் வழியா ரசிச்சிருப்பீங்க. அவங்களையும் தாண்டி உங்களுக்குப் பிடிச்ச நடிகர் யார்?''

''நாசர்!

நெகட்டிவ் சக்தி பலமா இருந்தாதான், ஹீரோவின் இமேஜ் வீரியமா வெளிப்படும். சின்ன வயசுல நம்பியாரை எங்கே பார்த்தாலும் ஒரு பயம் வருமே... அந்தப் பயம்தான் எம்.ஜி.ஆர். மேல ஒரு பாசிட்டிவ் பிம்பத்தைக் கொண்டுவந்தது. அப்படி நம்பியாருக்கு ஈக்வலான மிரட்டல் வில்லன், நாசர்.

'தேவர் மகன்’, 'குருதிப்புனல்’... இந்த இரண்டு படங்களிலும் வில்லன் கேரக்டருக்கு நாசரைத் தவிர வேற யாரைப் போட்டிருந்தாலும் அந்த அளவுக்கு பவர்ஃபுல்லா இருந்திருக்காது.  வில்லத்தனம்கிறது கத்தியால் குத்துறதோ, துப்பாக்கியால் சுடுறதோ இல்லை. உள்ளுக்குள்ள இருக்கிற வஞ்சத்தை சிரிச்சுட்டே கண்ல வெளிப்படுத்துவது. அதை நாசர் அழகா செய்வார். கமலைத் தவிர தமிழ் சினிமா அவரை சரியாப் பயன்படுத்திக்கலைனுதான் சொல்வேன்!''  

விகடன் மேடை - பி.சி.ஸ்ரீராம் பதில்கள்

எம்.ராஜன், கோயம்புத்தூர்-9.

''உங்க குருநாதர் யார்?''

  ''என் தாத்தா சாமிநாதன்.

தோட்டக் கலைத் துறையில் வேலை பார்த்தவர். செடி, கொடிகள்னா அவருக்கு உயிர். ஒவ்வொரு செடியையும் குழந்தை மாதிரி பராமரிப்பார். செடி வளர்ப்பு பத்தி நிறைய விஷயங்கள் சொல்லிக் கொடுத்தார். எந்த சின்ன வேலையையும் எவ்வளவு பொறுப்போட பண்ணணும்னு அவர் கிட்டதான் கத்துக்கிட்டேன். அவர் போட்டோ கிராஃபரும் கூட. ஒவ்வொரு செடியையும் ரசிச்சு ரசிச்சு போட்டோ எடுப்பார். செடிகளை போட்டோ எடுக்கிறதுல என்ன வித்தியாசம் காட்ட முடியும்? ஆனா, விதவித லைட்டிங்ல செடிகளை வித்தியா சம் காட்டுவார். ஆசைப்பட்ட லைட்டிங் வர்ற வரை  மெனக்கெட்டுக் காத்திருப்பார். அவர்கிட்ட இருந்துதான் கேமரா நுணுக்கங்கள் கத்துக்கிட்டேன்.

ஒருநாள் திடீர்னு அவரோட யாஷிகா கேம ராவை என் கையில் கொடுத்து, 'நீ போட்டோ எடுத்துப் பழகுடா’னு சொன்னார். தோட்டத்துல இருந்த ஒரு பிரிட்டிஷ்காரர்  சிலையை போட்டோ எடுத்தேன். தாத்தா ஓய்வா இருக்கும்போது அவருக்கே தெரியாம அவரை போட்டோ எடுத்தேன். அப்படி ஆரம்பிச்சதுதான் போட்டோகிராஃபி. ஆனா, சினிமா கேமராவை கையில் எடுத்த பிறகு, ஸ்டில் போட்டோஸ் எடுக்கிறது குறைஞ்சு போயிருச்சு. சினிமோட்டோகிராஃபி பத்தி கேட்டீங்கன்னா, நாள் முழுக்கப் பேசுவேன். ஆனா ஸ்டில் போட்டோகிராஃபி பத்திக் கேட்டா... ஒண்ணும் சொல்லத் தெரியாது!''

சு.திருப்பதி, திருநெல்வேலி.

'' 'ஏன்தான் இந்தப் படத்துல வேலை பார்த்தோமோ’னு நீங்க ஃபீல் பண்ற படங்கள் இருக்கா?''

  ''நிறைய இருக்கு. ஆனா, சொல்ல விரும்பலை!''

- அடுத்த வாரம்...

விகடன் மேடை - பி.சி.ஸ்ரீராம் பதில்கள்

''ஹாலிவுட், ஈரான், கோலிவுட்... எங்கு தயாராகும் படங்கள் பெஸ்ட்?''

விகடன் மேடை - பி.சி.ஸ்ரீராம் பதில்கள்

''நீங்கள் வேலை பார்த்த இயக்குநர்களில் உங்களுக்கு மிகப் பிடித்த இயக்குநர் யார்?''

விகடன் மேடை - பி.சி.ஸ்ரீராம் பதில்கள்

''மணிரத்னத்தை எப்பவாச்சும் திட்டியிருக்கீங்களா... ஏன்?''

- லைட்ஸ் ஆஃப்

விகடன் மேடை - பி.சி.ஸ்ரீராம் பதில்கள்

அன்பு வாசகர்களே... எங்களுடன் தொடர்புகொள்ளும்போது உங்கள் செல்போன் எண்/இ-மெயில் முகவரி குறிப்பிட மறக்காதீர்கள். உங்கள் படைப்புகள் எதுவானாலும் ஒரு பிரதி எடுத்துவைத்துக்கொண்டு அனுப்புங்கள். தபால் தலை மற்றும் சுயவிலாசமிட்ட உறை இணைக்க வேண்டாம். படைப்பு தேர்வாகாத பட்சத்தில் திருப்பி அனுப்ப இயலாது. இரண்டு மாதங்களுக்குள் எங்களிடம் இருந்து தகவல் கிடைக்காவிட்டால், உங்கள் படைப்பு தேர்வு பெறவில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுகிறோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism