Published:Updated:

இலக்கியம் கடத்துகிறேன்!

இலக்கியம் கடத்துகிறேன்!

இலக்கியம் கடத்துகிறேன்!

இலக்கியம் கடத்துகிறேன்!

Published:Updated:
இலக்கியம் கடத்துகிறேன்!

ளம் தமிழ் எழுத்தாளர்கள் சந்திக்கும் விமர்சனங்கள் இரண்டு வகை. 'சுஜாதா மாதிரியே எழுதறீங்க...’, 'சுஜாதா மாதிரி இல்லை’. விசேஷம் என்னவென்றால், இரண்டுக்குமே சம்பந்தப்பட்ட எழுத்தாளர்கள் சந்தோஷமாகப் புன்னகைத்து விடுவதுதான்!

''இவர் தமிழ் எழுத்தாளர்...''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''நல்லது... சாப்பாட்டுக்கு என்ன பண்றார்?'' என்பது போன்ற உரையாடலுக்கு வாய்ப்பில்லாத நிலையை உருவாக்கி, எழுத்தாள சாதிக்குச் சமூக அந்தஸ்து வாங்கிக்கொடுத்தவர், சுஜாதா. உள்ளூரில் இருந்தால் சொல் தொகுப்பில் (Word Processor) தன் படைப்புகளை அடித்து விடுகிறார். தூரதேசம் போனால் 'மோடம்’ உபயோகித்து அனுப்பிவிடுகிறார். 'கலைஞர்கள் அறிவியல் எதிரிகள்’ என்கிற வசையை ஒழித்தவர். அறிவியல் புனைகதைகளைத் தமிழில் பிரபலப்படுத்திய, புனைகதையல்லாத அறிவியல் கட்டுரைகளுக்கு மத்திய அரசு விருது வென்ற தமிழர். மனதைப் பாதிக்கும் எந்தச் சம்பவம் எப்போது நடந்தாலும், அதுபோல் ஒன்றைப் பற்றி சுஜாதா ஏற்கெனவே எழுதியிருப்பது நினைவுக்குவரும். முன்பு சென்னையிலும் போன வாரம் கல்கத்தாவிலும் புத்தகக் கண்காட்சியில் புத்தகங்கள் எரிந்துபோனபோது இவருடைய 'ஒரு லட்சம் புத்தகங்கள்’ ஞாபகம் வந்தது.

பிரபலமாகாத பிற இலக்கியவாதிகளைத் தன்னுடைய 'வாசக வங்கி’க்கு அறிமுகப்படுத்துவதை நியதியாகவே கடைப்பிடித்துவருபவர். 'தீவிர இலக்கியத்துக்கும் பொழுதுபோக்குப் பத்திரிகைகளுக்கும் இடையில் பாலம் போட்டு நல்ல இலக்கியத்தைக் கொஞ்சமாகக் கடத்துகிறேன்’ என்று இவர் சொல்வது வெறும் அவையடக்கம்தான். 'ரயில் பயணி ஒருவர் மாத நாவலைப் படித்துவிட்டு அதை வாழைப் பழத் தோல் போல ஜன்னலுக்கு வெளியே எறிவதைப் பார்த்த கையோடு, மாத நாவல் எழுதுவதை நிறுத்திக்கொண்டவர். பந்தயத்தில் கலந்து கொள்ளாமலேயே எப்போதும் முதல் இடம். 'திறமையான கதை சொல்லி’ என்றாலும், கட்டுரை வாசிப்பையும் சுவாரஸ்யப்படுத்தியவர், 'ரொம்ப நல்ல விஷயம் என்றால், அதிகபட்சம் மூன்று பக்கக் கட்டுரை எழுதலாம். குறைந்தபட்சம் என்று எதையும் சொல்லப்போவதில்லை’ என்கிறார்.

குறைந்தபட்சமாக மூன்று வாக்கியங்களில்கூட இவர் கணையாழியின் கடைசிப் பக்கங்களில் எழுதிய கட்டுரைகள் வாசகர்களின் ஞாபகத்தில் பதிந்திருக்கின்றன. அவ்வப்போது மனதில் தோன்றி மறைந்த யோசனைகள் என்பதால், கணையாழிக் கட்டுரைத் தொகுப்பு ஒன்றுக்கு 'நீர்க்குமிழிகள்’ என்று பெயர்வைத்தார். ஆனால், தீட்டிய எழுத்தால் அவை நிரந்தரம் பெற்று, அடுத்தடுத்த பதிப்புகளாக அச்சாகிக்கொண்டிருக்கின்றன.

இவருடைய மொத்தப் புத்தகங்களில் 'நல்ல’ புத்தகங்கள் என்று குறிப்பிடப்போனால், 'மணிமேகலைப் பிரசுரப் புத்தக விலைப் பட்டியல்’ மாதிரி ஆகிவிடும்.

இலக்கியம் கடத்துகிறேன்!

''இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?''

''பாலுமகேந்திரா, ஷங்கர் படங்களுக்கு வசனம் எழுதுதல், கல்லூரிகளுக்குப் போய் கம்ப்யூட்டர், இன்டர்நெட் பற்றி பிரசங்கம் செய்தல், சிங்கப்பூர் பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷனில் 'சின்னக் குயிலி’ என்கிற கதை தொடராகிறது. புறநானூறுக்கு 'புதுநானூறு’ என்கிற பெயரில் புதுக்கவிதை வடிவத்தில் உரையெழுதுகிறேன். அதற்கு விஸ்தாரமான ஒரு முன்னுரையும் யோசனையில் இருக்கிறது. விஜய் டி.வி-யில் 'ஏன், எதற்கு, எப்படி’ மாதிரி அறிவியல் கேள்விகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.''

''உங்கள் சமீப எழுத்துக்களில் ஒரு 'திடுதிப்’ மாற்றம் தெரிகிறது. நீதி, அநீதி போன்ற மதிப்பீடுகள் சார்ந்து எழுத ஆரம்பித்திருக்கிறீர்கள். இதை 'சுஜாதாவின் வயோதிகம்’ என்று வர்ணிக்கலாமா?''

''திரும்பத் திரும்ப மர்மக் கதைகள் எழுதிக் கொண்டிருக்க எனக்குச் சம்மதம் இல்லை. அறிவியல், சமூக நெறிகள் சார்ந்து யோசிக்கிறேன் என்பது உண்மைதான். 'என் கவலைகள் மாறுகின்றன’ என்பதைத்தான் இது குறிக்கிறது.''

இலக்கியம் கடத்துகிறேன்!

'கார் அடியில் படுத்திருந்து கறுப்பாய் எழுந்திருக்கும் சிறுவனை’ப் பார்த்து விசனப்படும்போது 'கவிஞர்’ சுஜாதா;

'தேசாயின் ஆட்சியிலே சந்தோஷம் - பேசாமல்
பாத்திரம் ஒன்றை எடுத்துக்    கொண்டெல்லோரும்
......................................... குடிக்க வாரும்’

என்று வெண்பாவில் விமர்சிக்கும்போது குறும்பர்;

'நைலான் கயிற்றி’ல் ஆரம்பித்து 'ரவுடியைச் சுட்ட குண்டுக்கு இலக்காகிச் செத்துப்போன இளைஞனின் அம்மாவைப் பேட்டி எடுக்கும் செயற்கைக்கோள் தொலைக்காட்சி செய்தியாளன்’ வரை நிகழ்காலச் சூட்டை இலக்கியத்தில் பதிவுசெய்யும் சமூகக் கதை எழுத்தாளர்.

'புரவி’களைத் தலையில் தட்டி 'குதிரை’களாக்கிய சரித்திரக் கதாசிரியர்; மேடை நாடகத்திலேயே ரசிகர்களை உணர்ச்சிவசப்படவைக்க முடிந்த நாடகக்காரர்; எஸ்.பி.முத்துராமனிலிருந்து பாரதிராஜா வழியாக மணிரத்னம் வரை வர முடிந்த ஒரே வசனகர்த்தா...

இவருடைய (கணேஷ்) வசந்த் பாணியில் பிரமித்துச் சொல்லப் போனால், 'என்ன மாதிரி ஆளுய்யா இவரு!’

- ரமேஷ் வைத்யா

குடும்ப உறுப்பினர்கள்

சுஜாதா: ஸ்ரீரங்கத்துக்காரர். அதனால் ரேஷன் கார்டில் உள்ள பெயர் - ரங்கராஜன். ஓய்வுபெற்ற பிறகும் ஓய்வில்லாமல் இருப்பவர். தற்சமயம் 'தமிழ்நாடு அரசு கணிப்பொறி கமிட்டி’யில் உறுப்பினர்.

சுஜாதா (மனைவி): எழுத்தாளக் கணவருக்குத் தன் பெயரைப் புனைப்பெயராகத் தந்தவர். சமூகவியலில் எம்.ஏ. தவிரவும் தனக்கெனத் தனி அடையாளங்கள் உள்ளவர். அந்த சுஜாதா எழுதிய 'கடவுள் வந்திருந்தார்’ நாடகத்தில் நடித்தவர்.

ரங்கபிரசாத் (மூத்த மகன்): படித்ததும் உத்தியோகமும் கணிப்பொறி. தற்சமயம் சிங்கப்பூரில் வேலை பார்க்கும் இவர், கலிபோர்னியாவுக்கு இடம் மாறும் காரியத்தில் இருக்கிறார்.

கேசவபிரசாத் (இளையவர்): அமெரிக்காவின் டல்லாஸ் மாகாணத்தில்... கணிப்பொறி வேலைதான். இவருடைய மனைவி ஜப்பானியப் பெண் கே. அவரும் கணிப்பொறி படித்தவர்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism