Published:Updated:

அறிவிழி

அண்டன் பிரகாஷ்

அறிவிழி

அண்டன் பிரகாஷ்

Published:Updated:
அறிவிழி

புண்டு.

'ஆப்பிரிக்காவில் இருக்கும் நாடுபோலவே கடா முடாவா இருக்குதே அண்டன்’ என்று கேட்கத் தோன்றினால், தொடர்ந்து இந்தக் கட்டுரையை நிச்ச யம்  படியுங்கள். 'இது கணினி இயங்கு மென்பொருள்தானே?’ என்று கேட்ப வர்களுக்கும் ஒருவேளை இந்த வாரக் கட்டுரை பயன்படலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'உபுண்டு’-வுக்குள் நுழைவதற்கு முன்னால், இயங்கு மென்பொருள்களைப் பற்றி... எந்த ஒரு கணினி சாதனத்துக்கும் அதனை இயக்குவதற்கு உள்ளார்ந்த மென்பொருள் தேவை. IBM, SUN, Digital Equipment Corporation போன்ற நிறுவனங்கள், பெருங்கணினிகளைத் தயாரிப்பதிலும், ஆப்பிள், மைக்ரோசாஃப்ட் இரண்டும் பயனீட்டாளர் கணினி களைத் தயாரிப்பதிலும் ஜாம்பவான்கள்.

##~##

ஆப்பிள் நிறுவனம் தங்களுடைய கணினிகளை ஹார்டுவேரில் இருந்து முழுமையாகத் தயாரித்து, தங்களுடைய மென்பொருளையும் பதிவிட்டு பயனீட் டாளர்களுக்கு விற்க, மைக்ரோசாஃப்ட் வேறொரு முடிவை எடுத்தது. அதுவரை இந்தத் துறையில் பழக்கத்தில் இல்லாத வகையில், கணினிகளை இயக்கும் இயங்கு மென்பொருளைத் தயாரித்து அதைக் கணினிகளின் ஹார்டுவேரைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு லைசென்ஸ் முறையில் கொடுக்கும் பிசினஸ் மாட லைக் கொண்டுவந்து, மிகக் குறுகிய காலத்துக்குள் மிகப் பெரிய நிறுவனமாக வளர்ந்தது. 80-களின் கடைசியில் கணினித் தொழில்நுட்பம், மேற் கண்ட நிறுவனங்களின் விளை யாட்டு மைதானமாக இருந்து வந்ததை எதிர்த்து ‘Open Source Movement’  என்ற இயக்கம் பரவ லாகத் தொடங்கியது. மென் பொருள்களுக்குக் காப்புரிமை இருக்கக் கூடாது. 'காப்பிரைட்’ என்ற பெயரைத் திரித்து 'காப்பிலெஃப்ட்’ என்று இடதுசாரி மணம் வீசும் பதம் அறிமுகப்படுத்தப் பட்டது. இந்த இயக்கத்தில் ஈடுபட்டவர்களின் பொதுவானக் கருத்து, 'மென்பொருள் எழுதுபவர்கள் அதைத் தங்களுக்கு மட்டுமே என சொந்தம் கொண் டாடக் கூடாது; அதை மற்றவர்கள் பயன்படுத்தும் விதத்தில் Source Code-ஐ காப்பிலெஃப்ட் உரிமை யுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். இதன்படி, இந்த மென்பொருளைத் தரவிறக்கி, அதில் திருத்தங்களோ, முன்னேற்றங்களோ செய்தால்... அதுவும் காப்பி லெஃப்ட் முறையிலேயே செய்ய வேண்டும்.'It takes a village to raise a Child' என்று ஆங்கிலத்தில் பிரபல மான பழமொழி ஒன்று உண்டு. ஆப்பிரிக்கப் பழங் குடிகளிடம் இருந்து வந்ததாகச் சொல்லப்படும் இந்தப் பழமொழியின் அர்த்தம், குழந்தையின் பெற்றோர் மட்டுமல்ல; அதைச் சுற்றியிருக்கும் சமூகம் முழு  வதும் ஒரு குழந்தையின் வளர்ப்பில் முக்கியப் பங் காற்றும்  என்று பொருள்படும். இந்தப் பழமொழிக்கு நிகரான 'It takes a village to raise a Child' இயக்கத்தின் முக்கியமான நபராக லினஸ் ட்ராவாட்ஸை சொல்லலாம்.

அறிவிழி

பின்லாந்து நாட்டில் பிறந்து வளர்ந்த லினஸ், வணிக நிறுவனங்களில் இறுகிய பிடியில் இருந்த இயங்கு மென்பொருள் துறையை, தான் முதன்மையாக இருந்து தயாரித்த லினக்ஸ் மூலம் தளர்த்தினார். பல்வேறு கணினிகளில் லினக்ஸை இயங்கவைக்கும் முயற்சிகள் 90-களின் தொடக்கத்தில் எடுக்கப்பட் டன. லினக்ஸ் இயங்கு மென்பொருள் காப்பி லெஃப்ட் அடிப்படையில் அமைந்தது என்ப தால், யார் வேண்டுமானாலும் அதைப் பிரதி எடுத்து அதில் தங்களுடைய பிராண்டைப்பயன் படுத்திக்கொள்ளலாம். இந்த வசதி, Redhat  போன்ற நிறுவனங்கள் உருவாக உதவியது. நீள் கதையை சுருக்கமாகச் சொல்லிவிடுகிறேன்: கிடு கிடுவென பிரபலமாகத் தொடங்கிய லினக்ஸ் மென்பொருள்தான், இன்று உலகின் அதிகமான பெருங்கணினிகளை இயக்குகிறது. ஆனால், பயனீட்டாளர்கள் பயன்படுத்தும் மேசை, மடிக் கணினிகளில் லினக்ஸ் சமீப காலம் வரை அத்தனை பெரிதாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மைக்ரோசாப்ஃட்டின் விண்டோஸ், ஆப்பிளின் OS X மென்பொருள்களின் அளவுக்கு நளினமான பயனீட்டு அனுபவத்தைக் கொண்டுவர யாரும் முயற்சிக்காததுதான் இதற்கு முக்கியக் காரணம். கணினி பயன்பாடு குறைந்தது, மக்கள் மொபைல் சாதனங்களுக்குப் பின்னால் செல்ல ஆரம்பித்தது மற்றொரு காரணம். ஆனால், ஒரே ஒரு நிறுவனம் மட்டும் இந்தப் பிரிவில் தொடர்ந்து முயற்சி செய்தபடியே இருக்கிறது. அந்த முயற்சியும் விரைவில் திருவினையாகிவிடும் போலத் தெரிகி றது. அந்த நிறுவனத்தின் பெயர்,  நீங்கள் கணித் தது சரியே...  'உபுண்டு’.

உபுண்டு என்ற ஆப்பிரிக்க வார்த்தைக்கு 'அனைவருக்கும் மனிதம்’ என்று அர்த்தம். மார்க் ஷட்டில்வொர்த் என்பவரது தலைமையில் இயங்கும் மென்பொறியாளர்கள் இயக்கும் இந்த நிறுவனம், கணினியின் இயங்கு மென்பொருள் நவீனமாகவும் நளினமாகவும் இருக்கும்படி தயாரிப்பதுடன், அதை இலவசமாகக் கொடுத்தும் வருகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்னால், ‘UbuntuEdge’ என்ற பெயரில் புதிய, ஒன்றுபட்ட இயங்கு மென்பொருளைத் தயாரிக்கும் திட்டத்தை வெளியிட்டு அதை ‘Crowd funding’  முறையில் ஆதரிக்கும்படி கேட்டுக்கொண்டிருக்கிறது 'உபுண்டு’. இந்த இயங்கு மென்பொருள் பிரதானமாக அலைபேசி சாதனத்தில் இயங்கும்; ஆனால், இது சாதாரண இயங்கு மென்பொருள் அல்ல; உங்களுடைய அலைபேசியை HDMI  மானிட்டரில் இணைத்துவிட்டால்போதும்.  முழுமையான, வலுவாக இயங்கும் கணினி உங்களுக்கு ரெடி. 32 மில்லியன் டாலர்கள் தேவை என்று அறிவித்து, 'உபுண்டு’ ஆரம்பித்திருக்கும் இந்த முதலீடு திரட்டும் பணியில், அதற்குள் ஆறு... இல்லை இல்லை ஏழு மில்லியன் டாலர்களுக்கும்மேல் திரண்டுவிட்டது, இந்தக் கட்டுரை அச்சுக்குப் போகும்வரை. மேல்விவரங் களுக்கு, இந்த உரலி...

விழிப்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism