Published:Updated:

ஆறாம் திணை - 48

மருத்துவர் கு.சிவராமன்

ஆறாம் திணை - 48

மருத்துவர் கு.சிவராமன்

Published:Updated:
##~##

புளியின் பயன்குறித்த கடந்த வாரக் கட்டுரையை வாசித்து விட்டு, 'அதான் சார்... வத்தக் குழம்பை வளைச்சு அடிக்கி றோம்’ என்று  பு'ளி’ங்காகிதம் அடைந்தார்கள் பலர். அவர் களுக்கு ஒரு சின்னத் தகவல்...  புளி, மூட்டு வலிக்கும் தோல் வறட்சிக்கும் ஆகாது என சித்த மருத்துவமும் ஆயுர்வேதமும்  எச்சரிக் கிறது. எனவே.... கொஞ்சம் கவனம்!

'ரசத்துல கரைக்கிற புளி இவ்ளோ நல்லதா?’ என்று ஆச்சர்யப்படு கிறார்கள் பலர். இந்த அளவுக்குப் பயனளிப்பதில், புளிபோலவே, நம் பாரம்பரிய உணவில் சேர்க்கும் ஒவ் வோர் உணவுப் பொருளும் பயன் அளிப்பவைதான்.  மஞ்சளின் கர்க் யுமின் (curcumin)
புற்றுநோய்க்கும்,  மிளகின் பெப்பரின் (piperine)  ஆஸ்துமா முதல் பல அலர்ஜி நோய்களுக்கும், கறிவேப்பிலையின் கார்பஸோல் அல்கலாயிட்ஸ் (carbazole alkaloids) சர்க்கரை வியாதி, அதிக கொலஸ்ட்ராலுக்கும், சித்தரத்தையின்கெலன்கல் அசிட்டேட் (galangal acetate) மூட்டு வலிக்கும், கிராம்பின்  யுஜெனல் (eugenol)  வலி நிவாரணி யாகவும் இஞ்சியின் ஜிஞ்சரால் (gingerol)  மைக்ரேன் தலைவலி மற்றும் வாந்திக்கும், அன்னாசிப் பூவின் அனெதோல் (anethole) மாதவிடாய் வலிக்கும், வெந்தயத்தின் டையோஸ்ஜெனின் (diosgenin)  நீரிழிவு மற்றும் புற்றுநோய்க்கும் பயன் அளிக்கும் எனும் கிழக்கின் அனுபவங்களை, மேற்கு கொஞ்சம் உற்றுப்பார்த்தே உறுதிப்படுத்தியது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இப்படி அறியப்படாத பல அனுபவ உண் மைகள் நம் அடுப்பங்கறையின் அஞ்சறைப் பெட்டி களிலும், விளைநிலத்தின் களைச் செடிகளிலும், தஞ்சாவூர் சரஸ்வதி மகால் கண்ணாடிப் பெட்டிக்குள் அமைதியாக அமர்ந்திருக்கும் 22,000 ஓலைச்சுவடிகளுக்குள்ளும் இன்னும் ஏராளமாகப் புதைந்திருக்கின்றன. இந்திய அடுப்பங்கறை, சீன, கிரீஸ் நாட்டு உணவுப் பழக்கவழக்கங்கள் என உலகில் இன்றைக்கும் 80 சதவிகிதத்துக்கும் மேலாக, பயன்பாட்டில் இருக்கும் அந்தந்த நாட்டுப் பாரம்பரிய மருத்துவமுறைக்குள் பொதிந்திருக்கும் மருத்துவக் கூறுகளைத்தான், பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் போட்டிபோட்டுப் பிரித்து மேய்ந்து, புதுப் புது மூலக்கூறுகளைக் கண்டறிந்து காப்புரிமைக்குக் காத்து நிற்கின்றன.

பிரியாணியை மணமூட்டி அலங்கரிக்கும் அன்னாசிப் பூவில் இருந்து SAI அமிலத்தைப் பிரித்து, அதிலிருந்து 'டேமிஃப்ளூ’ எனும் நவீன மருந்தைத் தயாரித்த நிறுவனம், 10 ஆண்டுகளுக்கு முன் அருணாச்சலப் பிரதேசத்தில் களையாக நின்றிருந்த அன்னாசிப் பூவை டன் டன்னாக சேகரித்துச் சென்ற வரலாறும் உண்டு. அதே போல நித்யகல்யாணியில் இருந்து 'வின்கிரிஸ் டின்’ எனும் ரத்தப் புற்றுநோய்க்கான மருந்தும், இமாலயத்தின் 'யூ’ மரத்தில் இருந்து 'டாக்ஸால்’ எனும் மார்பகப் புற்றுநோய்க்கான மருந்தும் பாரம்பரிய அனுபவம் எனும் தொடக்கப் புள்ளியில் இருந்துதான் பிறந்தது.

இன்றைக்கு உலகம் முழுதும் சர்க்கரை நோய்க்கான முதல் மருந்தான 'மெட்ஃபார்மின்’,  மலேரியாவுக்கான 'அர்ட்டிமிசின்’ ஆகியவை சீன மருத்துவத் தாவரத்தில் இருந்து எடுக்கப்பட்டவையே. தேநீரில் இருந்து ஆஸ்துமாவுக்கான தியோஃபிலின்; ஆடாதொடையில் இருந்து சளியை உருக்கி வெளியேற்றும் பிராம்ஹெக்சின், கிரேக்கப் பாரம்பரியம் சொன்ன வில்லோ மரப் பட்டையில் இருந்து மாரடைப்பு வராமலும் இதய நாளத்துக்குள் ரத்தம் உறையாமல் இதயத்தைக் காக்கவும் ஆஸ்பிரின்... இப்படிப் பாரம்பரிய மருந்துகளில் இருந்தும், மருத்துவ உணவுகளில் இருந்தும் உருவான இப்போதும் புழக்கத்தில் உள்ள நவீன மருந்துகள் ஏராளம்.

ஆறாம் திணை - 48

அன்றைக்கு அடுப்பங்கறைக்கு வந்த செய்தி கள் எல்லாம், அடுத்த தலைமுறையை ஆரோக்கிய மாக செழிக்கச் செய்ய வேண்டுமென்ற அக்கறையில் வந்த, நமது அனுபவக் கோவைகளே. 'உணவுதான் மருந்து’ என்பதை உறுதிபட சித்த மருத்துவம், ஆயுர்வேதம் உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவமுறைகள் உணர்ந்திருந்தன. இந்தப் பாரம்பரியத்தை ஆய்வுக்கு உட்படுத்துவதில் தவறு இல்லை. பாரம்பரிய முகமூடிக்குள் சில சமூக அவலங்களால் பின்னப்பட்டிருக்கும் ஒருசில செய்திகளை ஆராய்ந்து தூர எறியவும் தயங்க வேண்டியதும் இல்லை. ஆனால், அப்படிச் செய்வதற்குமுன் அந்த ஆய்வுக்குப் பின்னணி யில் அறமும், தரமும், சமூக அக்கறையும் பொதிந்திருக்க வேண்டியது மிக மிக அவசியம். அதைவிடுத்து, அவசரகதியில் வணிக நிர்பந்தத் தில் பழசை எல்லாம் மடமை  எனப் பரணியில் ஏற்றுவதோ, 'பத்தாம்பசலித்தனம்’ எனப் புறந் தள்ளுவதோ, நவீனத்துக்குமுன் கூனிக் குறுக வைப்பதோ குற்றம்.

ஒவ்வொரு தாவரமும் தன்னையே மாய்த்துக் கொண்டு நமக்குப் பயன்படுவதைக் கொஞ்சம் கவனித்தால், பகுத்தறிவு இல்லாமலே அவை பல்லுயிர் பேணும் காட்சி நமது நெஞ்சை அள் ளும். சின்னக் கீரைச் செடி ஆகட்டும், நெடிய ஆலமரம் ஆகட்டும் விண்ணுக்குத் தன் வியர் வையால் நீர் அளிக்கிறது. மண்ணுக்குள் பூஞ் சைக்கும் உணவூட்டி, அதன் துணைகொண்டு உறிஞ்சிய  நீரையும் கனிமத்தையும் உணவாக்கு கிறது; மருந்தாக்குகிறது. அவற்றைத் தனக்கு மட்டுமல்லாது; தன்னையே உண்ணும் நமக்கும் அளிக்கிறது.

பல நேரங்களில் அருகில் வளரும் செடிகளுக் கும் பகிர்ந்து பரிமாறிச் சுற்றம் காக்கிறது. தன்னை உருக்கி, தன்னுள் அரிசியை உருவாக்கி, குறிஞ்சி நில மனிதனின் பஞ்ச காலத்துப் பசியைப் போக்கிய மூங்கிலரிசி, தன்னுள் அரிசி விளைந்ததும் உயிர்மாய்ந்துவிடும் என்கிறது தாவரவியல்.

பாரம்பரியம்... எட்டிப்பார்த்தால் வியப்பானது; உற்றுப்பார்த்தால் மெய்சிலிர்க்கவைப்பது; உணரத் தொடங்கிவிட்டால் போற்றுதலுக்கு உரியது.

போற்றுவோம்!

- பரிமாறுவேன்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism