
'ஆப்பிள் நிறுவனத்திலிருந்து தொலைக்காட்சி, கைக்கடிகாரம் போன்றவை வரப்போகிறது’ என்ற வதந்திகள் தொடர்ந்தபடியே இருக்க, சத்தமே இல்லாமல் அட்டகாசமான சாதனம் ஒன்றை வெளியிட்டிருக்கிறது கூகுள். 'க்ரோம்காஸ்ட்’ எனப்படும் இந்தச் சாதனம், உங்கள் வீட்டு வரவேற்பறையில் இருக்கும் டி.வி. பெட்டியை இணைய வட்டத்துக்குள் இழுத்துவிட கூகுள் செய்யும் ஸ்மார்ட்டான முயற்சி. இதன்
##~## |
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
க்ரோம்காஸ்ட் வெளியிடப்பட்ட அன்றே ஆர்டர் செய்தேன். இரண்டு நாட்களில் வந்துவிடும் என்று சொன்ன கூகுள் வலைதளம், அதிகமான ஆர்டர்களால், இன்னும் பல நாட்கள் ஆகிவிடும் என்கிறது. இருக்கும் 24 மணி நேரத் தில் எந்தத் தகவல்களை நீங்கள் பார்க்க வேண் டும் என்ற போட்டி, மீடியா நிறுவனங்களிடம் இருந்து தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மாறிய படி இருக்கிறது. க்ரோம்காஸ்ட்டின் வலைதளம் www.google.com/chromecast

பொதுச் சந்தையில் இடைபடும் நிறுவனமாக மாறிய நாளில் இருந்து தொடர்ந்து சரிந்துவந்த ஃபேஸ்புக்கின் பங்கு மதிப்பு, சமீபத்தில் உயர ஆரம்பித்திருக்கிறது. மொபைல் சாதனங்களில் விளம்பரங்களைப் பயனீட்டாளர்களுக்கு திறம் பட காட்டி, அதன் மூலம் விளம்பர வரு வாயை பெருக்கிக்கொண்டிருப்பதே பங்கு மதிப்பு உயர முக்கியக் காரணம். இந்தக் கட் டுரை எழுதப்படும் நாளில் Embedded Posts என்ற வசதியை ஃபேஸ்புக் வெளியிட்டு இருப்பதை முக்கியமாக கவனிக்க வேண்டிய நிகழ்வாகக் கருதுகிறேன். காரணம்... ஃபேஸ் புக்கின் பெர்சனாலிட்டி.
விளக்குகிறேன்.
சில ஆண்டுகளுக்குள் கிடுகிடுவென வளர்ந்து 1.3 பில்லியன் மக்களை பயன்படுத்தும் வண்ணம், ஒரு மாபெரும் தொழில்நுட்ப அற்புதத்தை ஃபேஸ்புக் நிகழ்த்திக் காட்டியிருக் கிறது என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால், அதை நிகழ்த்த அவர்கள் எடுத்துக்கொண்ட/கொள்ளும் சிரத்தைகள் ஆழ்ந்து படிக்கப்பட வேண்டியவை. அதில் முக்கியமான ஒன்று, உயரக்கட்டிய சுவர்களுக்குள் இருக்கும் தோட்டமாக ஃபேஸ்புக்கை கட்டமைத்திருப்பது. இந்தச் சுவர்களுக்குள் சென்று, மற்றவர்களுடன் உரையாட லாம்; தகவல்களைத் தயாரிக்கலாம்; பகிர்ந்து கொள்ளலாம். ஆனால், வெளியே இருப்ப வர்களுக்கு உள்ளிருக்கும் எந்தத் தகவலும் சற்றும் தெரியாது. வெளியே இருக்கும் தகவல் களை, ஃபேஸ்புக்குக்குள் இருப்பவர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியும். உதாரணத்துக்கு, விகடன் டாட் காமின் பல பக்கங்களை நான் எனது ஃபேஸ்புக் பக்கத்தில் எனது நட்பு வட்டத்துக்குப் பகிர்ந்தபடி இருப்பது உண்டு. ஆனால், ஃபேஸ்புக்குக்குள்ளாக நான் எழுதும் நிலைத் தகவல்களையோ, நோட்ஸ் போன்ற நீண்ட தகவல்களையோ ஃபேஸ்புக்குக்கு வெளியே இருக்கும் உலகத்துடன் பகிர்ந்து கொள்வது மிகவும் கடினம். Plugins என்ற பெயரில் வலைதளங்கள், தங்களுடைய ஃபேஸ்புக் நடவடிக்கைகளைத் தங்கள் தளங்கள் மூலம் ஜன்னலில் இருந்து பார்ப்பது போல பார்த்துக் கொள்ளும் வசதியைக் கொடுக்க முடியும். ஆனால், தகவல் நிரம்பி வழியும் விதத்தில் எந்தக் கதவையும் ஃபேஸ்புக் திறந்துவைப்பதில்லை... இதுவரை.
'உள்ளாகப் பதிக்கப்பட்டப் பதிவுகள்’ என்ற பெயரில் ஃபேஸ்புக் வெளியிட்டிருக்கும் இந்த Embedded Posts வசதியின் மூலம், ஃபேஸ்புக்குக்குள் உருவாக்கப்படும் தகவல்களை பயனீட்டாளர் களும் நிறுவனங்களும் வெளியுலகத்துக்கு எளிதாகப் பகிர்ந்துகொள்ள முடியும். உதாரணத்துக்கு, ஆனந்த விகடனுக்கு ஃபேஸ்புக்பக்கம் இருக்கிறது. இதுவரை விகடன் டாட் காமில் வெளியிடப்படும் தகவல்களை அந்தப் பக்கத்தில் கொடுத்து, அதை அந்தப் பக்கத்தில் இணைந்திருப் போருக்கு விரைவாகக் கொண்டுசெல்ல மட்டுமே முடியும் என்றிருந்தது. இனி Embedded Posts வசதி மூலம், விகடன் டாட் காம் தளத்திலேயே ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதப்படும் தகவல்களைப் பகிர முடியும். அதைப் படிப்பவர்கள் அதனால்கவரப் பட்டு ஃபேஸ்புக்கில் சேருவதற்கான வாய்ப்பு ஏற்படலாம்.
தங்களது வெற்றியை நீண்ட காலம் தக்க வைத்துக்கொள்ள வேண்டுமானால், ஃபேஸ் புக்குக்குத் தேவை பயனீட்டாளர்களின் எண் ணிக்கை. இணையத்தில் இருக்கும் அனைவரையும் ஃபேஸ்புக் பயனீட்டாளர்களாக்கிவிட வேண்டும் என்ற உத்வேகம் இந்த நிறுவனத்துக்கு இருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. இதுவரை அவர் களது ஆள்சேர்ப்பு நடவடிக்கை, ஏற்கெனவே இருந்த பயனீட்டாளர்களை வைத்து புதிய பயனீட்டாளர்களைக் கொண்டுவருவது என்ப தாக மட்டுமே இருந்தது. இது தொய்வடைய ஆரம்பித்திருப்பதால், ஃபேஸ்புக்குக்குப் புதுப் புது டெக்னிக்குகள் தேவைப்படுகின்றன. Embedded Posts அந்த வகையறாவில் ஒன்று.
விழிப்போம்...