Published:Updated:

அறிவிழி

அண்டன் பிரகாஷ்

அறிவிழி

அண்டன் பிரகாஷ்

Published:Updated:
அறிவிழி

 'அமேசான் பற்றி விரிவாக எழுத வேண்டும்’ என்று, பல தருணங் களில் சொல்லியிருக்கிறேன். அந்த வாரம் வந்தேவிட்டது. காரணம், ஜெஃப் பெசோஸ். தனியாளாக அமேசான் நிறுவ னத்தை 1994-ல் தொடங்கி, தொடர்ந்து அதை நடத்திவரும் பெசோஸ், யாரும் எதிர்பார்க்காத வகையில் பிரபலமான 'வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழை சென்ற வாரம் தனக்கு சொந்த மாக்கிக்கொள்ள, டெக் உலகம் பிரமிப்பும் மரியாதையும் கலந்து பார்க்கிறது.

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'புதிய ஊடகம்’, 'டிஜிட்டல் ஊடகம்’ என்றெல்லாம் அழைக்கப்படும் இணையம் சார்ந்த நிறுவனங்கள், டி.வி., ரேடியோ, அச்சு ஊடகங்களுடன் இணைந்துகொள்வது புதிதல்ல. 2000 ஆண்டுகளின் தொடக்கத்தில் Time Warner  நிறுவனமும் AOL நிறுவனமும் இணைந்தது இணைய வரலாற்றின் மைல்கல். வாஷிங்டன் போஸ்ட் நிறுவனத்தை பெசோஸ் வாங்கி இருப்பது, இன்னொரு மைல்கல்லாகக் கருதப்படும் என நினைக்கிறேன். காரணம், அமேசான் நிறுவனத்தை சத்தமே இல்லாமல் மிகப் பிரமாண்டமாகக் கட்டிய விதம். இந்த நிறுவனம் தனது வேர்களையும் கிளைகளையும்,  ஆழமாகவும் அகலமாகவும் விரித்துக் கொண்டே சென்றிருப்பதற்குப் பின்னால் இருக்கும் தொலைதூர பார்வை, படித்துத் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று.

அச்சு ஊடகங்கள் உலகெமெங்கிலும் டிஜிட்டல் உலகிற்கேற்ப வேகவேகமாக வணிக மாடலை மாற்ற, சில முயற்சிகள் வெற்றியும், சில  தோல்வியும் அடைவதைப் பார்க்கும்போது, டிஜிட்டல் உலகில் வெற்றிக்கான உறுதியான ஃபார்முலா இல்லை என்பதைப் புரிந்துகொள்ளலாம். பொதுவாக, டெக் நிறுவனங்கள் பெரிய அளவிலான லாப விகிதம் என்ற வணிக அடிப் படையை கண்டிப்பாகப் பின்பற்றுவது உண்டு. உதாரணமாக, ஆப்பிள், மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்களின் வருடாந்திர அறிக்கைகளைப் படித்தால், இந்த நிறுவனங்கள் 40 சதவிகிதத்துக்கும் மேல் லாப விகிதம் வைத்துச் செயல்படுவது தெரியும். மளிகை நிறுவனம் போன்ற நுகர்வோர் வணிக நிறுவ னங்களில் லாப விகிதம் மிகக் குறைவாக இருக்கும். உதாரணமாக, வால்மார்ட் நிறுவனத்தின் லாப விகிதம் மூன்று சதவிகிதம் மட்டுமே. ஆனால், நுகர்வோர் நிறுவனங்கள் அதிகமான அளவில் (Volume)  விற்பதன் மூலம் ஒட்டுமொத்த லாபத்தை அடைகின்றன.

அறிவிழி

அமேசான் டெக், நிறுவனமாக இருந்தாலும், அதன் வணிக அடிப்படையை குறைந்த லாப விகிதம் என்று ஆரம்பத்திலேயே அமைத்துக் கொண்டது. இணைய வணிகத்தின் முன்னோ டியான அமேசான், புத்தகங்களை வலைதளத் தில் விற்பதில் தொடங்கி, இன்று மேகக் கணி னிய உள்கட்டமைப்புகளை யார் வேண்டுமா னாலும் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் எளிதாக்கி கொடுப்பது வரை, தனது எல்லைகளை விரிவுபடுத்தியபடியே இருக்கிறது. ஆனால், எந்தத் துறையில் நுழைந்தாலும், நுழைந்த உடனே அதில் அதிக லாபம் ஈட்டக் கூடாது என்பதைக் கொள்கையாகவே வைத்திருக்கிறது.

தான் நுழையும் புதிய துறையில் லாபம் ஈட்ட வேண்டும் என்பதைவிட, அதில் தாம் செய்யும் செயல்பாடுகள் மற்றொரு பிரிவுக்கு அடித்தளமாக இருக்க வேண்டும் என்பதில் அதிகமாகவே மெனக்கெடும் அமேசான். உதாரணம், அவர்களது கிண்டில் டேப்ளட். தயாரிப்பு விலையையும்விட கிண்டில் குறைவாக விற்கப்பட்டபோது, அதை கிண்டல் செய்த வர்கள் அதிகம். ஆப்பிளின் ஐபேடுடன் ஒப்பிட்டு, ஆப்பிள் திரட்டிய அமோக லாபமும், அமேசான் அந்த வருடத்தில் காட்டிய நஷ்டமும் ஒப்பிடப்பட்டது.

இந்த அறிக்கைகள் வெளிவரும்போது அதன் பங்குச் சந்தை மதிப்பும் லேசாக குறைந்ததன் மூலம், முதலீட்டாளர்கள் சமூகம் அமேசானை அதிக லாபம் ஈட்டும்படி மறைமுகமாக மிரட்டினர். ஆனால், கிண்டிலை அப்படி விற்றதற்குக் காரணம் வேறு. அதிகமான பயனீட்டாளர்கள் கிண்டில் சாதனத்தை வைத்திருந்தால், அதன் மூலம் கிடைக்கும் சந்தையை வைத்து அதிக அளவில் மின் புத்தகங்களையும், டி.வி. ஷோக்களையும், திரைப்படங்களையும் விற்க முடியும். கிண்டிலை அதிக லாபத்தில் விற்க முற்பட்டு  இருந்தால் இது சாத்தியமாகியிருக்காது. ஒரு காலகட்டத்துக்குப் பின், டெக் உலகமும் முதலீட்டாளர் சமூகமும் இதைப் புரிந்து கொள்ள, அமேசானுக்கு தொடந்து ஏறுமுகம் தான்.

அமேசானின் மூன்று மாத நிதி அறிக்கை நஷ்டத்தில் இருப்பதாகக் காட்டினாலும், பங்கு மதிப்பு அதிகரிப்பது என்ற விநோதத்தை சாதித்துக் காட்டியது அமேசான். இதையெல் லாம் தூக்கி விழுங்குவதான வணிக அடிப்படை ஒன்று அமேசானிடம் இருக்கிறது. எந்தவித மான லாப விகிதமும் வைக்காமல், அமேசான் பொருட்களை வாங்கி விற்றாலும் அது லாபகரமான நிறுவனமாக இருக்கும். காரணம், பொருட்களைத் தயாரிப்பவர்கள் மற்ற நிறுவனங்களை காட்டிலும், 30 மடங்கு அதிக விருப்பத்துடன் அமேசானில் தங்கள் பொருட்களை விற்க விரும்புகிறார்கள். அமேசான், பொருட்களை வேகமாக விற்கிறது; தனது வாடிக்கையாளர்களைக் கருத்தாகப் பேணுகிறது எனப் பல காரணங்கள். கிடுகிடுவென விற்பனையை நடத்துவது டன், அமேசான் 90 நாட்களுக்குப் பின்னரே தயாரிப்பவர்களுக்கு விற்றதற்கான பணத்தைக் கொடுக்கிறது.

சில லட்சங்களில் வணிகம் நடந்தால், இதில் எந்தவொரு பயனும் இல்லை. மாறாக, அமேசான் பல நூறு பில்லியன்களில் வணிகம் செய்வதால், இந்தப் பணப் பரிவர்த்தனை நாட்கள் நீடித்திருப்பதன் மூலமாக லாபத்தை ஈட்ட முடிகிறது. அடிக்கோடிட்டு சொல்லவேண்டுமானால், அமேசான்...  இணைய உலகின் அற்புதம்!

2040-களில், பொக்கிஷம் பகுதிக்கு என்ன வேண்டும் எனத் தேடவிருக்கும் விகடன் உதவி ஆசிரியருக்கு இந்தச் செய்தி, '20 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆப்பிள் நிறுவனம் இருக்குமா என்பதை அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை. ஆனால், அமேசானில் நீங்களும் நானும் இன்னும் எதையேனும் வாங்கியபடிதான் இருப்போம்!’

- விழிப்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism