Published:Updated:

ஆறாம் திணை - 50

மருத்துவர் கு.சிவராமன், படங்கள்: ஆ.முத்துக்குமார்

ஆறாம் திணை - 50

மருத்துவர் கு.சிவராமன், படங்கள்: ஆ.முத்துக்குமார்

Published:Updated:
##~##

'நான் நோயற்றேன்...
வலிமையுடையேன்....
என் உடம்பின் உறுப்புகள்
என் தெய்வ வலிமையைப்
பெற்றுக்கொண்டுவிட்டன.

அவை திறனுடையன...
இலாகவமுடையன...
இன்பந்தரித்தன...
மிக எளிதில் இயங்குவன;
மஹாசக்தியின் வீடுகளாயின.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என் உடம்பில் நோயின் வேகமே கிடையாது.
நான் நோய்களையெல்லாம்
புறத்தே வீசியெறிந்துவிட்டேன்’

ஆறாம் திணை - 50

- அதிகம் நாம் வாசித்திராத இந்த எழுச்சி வரிகள் தேசியக்கவி பாரதி உரைநடையாகச் சொன்ன கருத்து!

ஆன்ம பலத்துக்கு அடிப்படையே ஆரோக்கிய உடல்தான் என்று, தான் உணர்ந்த உண்மையை அவர் தன் எழுத்துக்களில் பதிவுசெய்திருந்தார். ஆனால், நோயில்லாத, வலுவான உடல் என்பது சமீபகாலமாக சாத்தியத்துக்கு அப்பாற்பட்டதாக மாறிவருகிறது. உறுதியான உடலை உடற்பயிற்சி கட்டமைக்கும் என்றாலும், அதற்கு உணவுதான் அடித்தளமிடும். 'ஐந்தில் வளையாதது ஐம்பதிலும் வளையாது’ என்பது பண்பில் மட்டுமல்ல; உண விலும்தான். குழந்தைப் பருவத்தில் இருந்தே உணவின் அக்கறையைத் தெரிந்திருக்க வேண்டும். அதற்கு அம்மாவின் மெனக்கெடலும் அப்பாவின் கரிசனமும் அவசியம்.

கடந்த வாரம் கொழுக்கட்டை செய்த பலரும், 'கொஞ்சம் வெச்சு சாப்பிடற மாதிரி ஏதாச்சும் சொல்லுங்க சார்!’ என்று கேட்டிருந்தனர். அவர் களுக்காக இந்த வாரம்....

தினை மாவில் அதிரசம் செய்யத் தெரியுமா?

அது ஒன்றும் 'நாசா’ ரகசியம் கிடையாது. அரிசி மாவுக்குப் பதில் தினை மாவு; நாட்டு வெல்லத்துக்குப் பதில் பனை வெல்லம். தினை அரிசியைக் கழுவி ஒரு மணி நேரம் ஊறவைத்து, பின் ஒரு வெள்ளைத் துணியில் உலர்த்தி பொ டித்துக்கொள்ளுங்கள். பனை வெல்லத்தை பாகு காய்ச்சி, பின் தினை அரிசி மாவில் கொஞ்சம் எள், ஏலக்காய் தூளைப் போட்டு அதில் இந்தப் பாகை ஊற்றி, மாவை மிருது வாகப் பிசைந்துவையுங்கள். ஒரு நாள் காத்திருங்கள். மறுநாள் அதில் சிறிது நெய் விட்டு சிறுசிறு உருண்டைகளாக உருட்டிச் சூடான எண்ணெயில் பொரித்தெடுங்கள். 'தினை அதிரசம்’ தயார். இது வளரும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு; பெரியோருக்கும்தான். பூசிய உடல்வாகைக் கொண்டவர்கள், 'இனிப்பான’வர்கள் மருத்துவரிடம் இருந்து விலகி இருப்பதற்கான வழியும்கூட. அரிசி வெல்ல அதிரசத்தைக் காட்டிலும், தினை அதிரசத்தில் சுவையும் அதிகம்; நலமும் ஏகம்.

ஆறாம் திணை - 50

புரதம், குழந்தையின் உடல்நலத்துக்கான ஊற்றுக்கண். வணிக உலகம், இந்த விஷயம் தெரிந்த நாளில் இருந்தே வகை வகையான புரத பானங்களை சந்தை முழுக்க நிரப்பியுள்ளது. 30 பில்லியன் டாலர்களைத் தாண்டி ஓடுகிறதாம் இந்த வணிகம். குறிப்பிட்ட பானத்தைக் குடித்தால் தான் சிக்ஸர் அடிக்க முடியும். அந்த பாட்டில் பவுடரைக் கலக்கிச் சாப்பிட்டால்தான் சிக்ஸ்பேக் கிடைக்கும் என்றில்லை.

'தோளோடு தோள் தொடர்ந்து நோக்க நாள் பல ஆயின்’ - கம்பனின் வர்ணனையில் கூடுதல் உவமை இருந்தாலும், அந்தக் காலத்தில் புரோட் டின் ட்ரிங் சாப்பிடாமல் பரந்த, திடமான நெஞ் சுறுதியுடன் நம்மவர் இருந்தனர் என்பதை அந்த வரிகளில் புரிந்துகொள்ள முடியாதா என்ன? புரதச் சத்து மிகுந்த தானியங்களில் அதை இப் போதும் பெற முடியும்.

ஆறாம் திணை - 50

'பாசிப்பருப்பு மா லாடு’ அப்படி ஓர் ஊட்டம் தரும் தின்பண்டம். பயறு/பருப்பு வகைகளில் பாசிப்பருப்பு (சிறு பருப்பு) அதிகப் புரதச் சத்து தரும் ஒன்று. அந்தப் பருப்பைக் கறுக்காமல் வாசம் வரும் வரை வாணலியில் வறுத்து, பொடி செய்துகொள்ளுங்கள். அந்த மாவில் கொஞ்சம் முந்திரி, உடைத்த பாதாம் போட்டுக்கொள்ளுங்கள். ஆர்கானிக் வெல்லத் தூளைப் பொடித்துச் சலித்து, இதில் கலந்துகொள்ளுங்கள். நெய்யைச் சூடாக்கி அந்த மாவுக் கலவையில் ஊற்றி, சூட்டுடன் லட்டு பிடித்துவைத்துக்கொள்ளுங்கள். குழந்தையோ, குமரியோ ஒல்லிபிச் சானாக இருக்கிறாரே என்ற கவலையில் உள்ளோருக்கு, இந்த உருண்டை மிகப் பெரிய  வரப்பிரசாதம். இது, புஜத்தையும் புஜபலத் தையும் உயர்த்தும்.

அடைப் பிரதமன், சுசியம், முந்திரிக் கொத்து சோமாஸ், கடலை மிட்டாய், சோள வெல்லப் பணியாரம், கம்பு உருண்டை என இவை எல்லாமே, புரதம், கனிமம், வைட்டமின்கள் உள்ள நம் பாரம்பரியத் தின்பண்டங் கள்தாம். கடையில் கிடைக்கும் புரதப் பானங் கள்போல இயந்திர உருளைகளில் சூடுபட்டுத் தயாரிக்கப்படுவது இல்லை. தானியங்களின் இயல்பு மாறாமல் செய்யப்படுவது. நேசமான கரங்களால் பிசைந்து, உருட்டி, சுழற்றி உருவாகும் இந்தப் பட்சணங்களின் சுவையில், ரசாயனக் கலப்பு இருக்காது. ஆனால், காதலும் பாசமும் கட்டாயம் கலந்திருக்கும்!

- பரிமாறுவேன்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism