Published:Updated:

சாம்பியன் சுடலை!

தூத்துக்குடி, திருநெல்வேலி

சாம்பியன் சுடலை!

சாம்பியன் சுடலை!

தேசிய அளவில் ஊனமுற்றோருக்கான பளு தூக்கும் ஆணழகன் போட்டியில் தங்கம் வென்று, தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்து இருக்கிறார் தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சுடலை. ''எனக்கு அஞ்சு வயசா இருக்கும்போது போலியோ அட்டாக் வந்து கால் ரெண்டும் சூம்பிப்போச்சு. உட்காரணும்னா, தூணில் உடம்பைக் கட்டிதான் உட்காரணும். டாக்டர்களோட ஆலோசனைப்படி ஸ்டிக்வெச்சு நடக்க ஆரம்பிச்சேன். ஏதாவது சாதிக்கணும்னு முடிவு பண்ணி, கையை ஊன்றி மொத்த உடம்பையும் தூக்கப்  பயிற்சி எடுத்தேன். நிறைய தடவை தலைகீழா விழுந்து அடிபட்டாலும், கடைசியில் நின் னுட்டேன். போன வருஷம் கவுஹாத்தியில் நடந்த 'ஆல் இந்தியா சாம்பியன்ஷிப்’ போட்டியில் முதல் இடம் வாங்கினேன். அடுத்த வருஷம் நாசிக்கில் நடக்க இருக்கும் 'ஆல் இந்தியா சாம்பியன்ஷிப்’ போட்டியில் கலந்துக்க தேர்வு ஆகியிருக்கேன்.  இந்த முறையும் நிச்சயமாத் தங்கம் வாங்குவேன்'' நம்பிக்கையாகப் பேசுகிறார் சுடலை!  

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

- இ.கார்த்திகேயன் படம்: ஏ.சிதம்பரம்

ஏழைகளின் ஃப்ரிஜ்!

சாம்பியன் சுடலை!

திருநெல்வேலி மாவட்டம், காருக்குறிச்சி மண் பாண்டக் கூட்டுறவுக் குடிசைத் தொழில் சங்கத்தின் கூனியூர் உற்பத்திப் பிரிவில், ஸ்பெஷல்மண் பானைகள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றுக்கு மக்கள்வைத்து இருக்கும் செல்ல பெயர் 'ஏழைகளின் ஃப்ரிஜ்’. தொழிலாளர்கள் இதை 'ஜனதா ஃப்ரிஜ்’ என்கிறார்கள்.

ஒரு பெரிய மண் ஜாடிக்குள், சிறிய ஜாடியைவைத்து இரண்டு ஜாடிகளுக்கும் இடையே நீரை நிரப்பிவிடுகின்றனர். சிறிய ஜாடியில் பழங்கள், காய்கறிகள், பூக்கள், தோசை மாவு போன்றவற்றை வைத்துவிட்டு மூடி விட்டால் ஒரு வாரம் வரை அவை கெடாமல் இருக்குமாம். தினமும் இரண்டு ஜாடிகளுக்கும் இடையே உள்ள தண்ணீரை மட்டும் மாற்றினால் போதும். பெரிய ஜாடியின் மேல்புறம் தண்ணீரை நிரப்ப, புனல் போன்ற ஓர் அமைப்பும், கீழே நீரை வெளியேற்ற நல்லி ஒன்றும் உண்டு. இதனால் நீரை நிரப்புவதும் வெளியேற்றுவதும் சுலபம். இந்தத் தண்ணீரைக் குடிக்கவும் பயன்படுத்தலாம். ஒரு ஃப்ரிஜ் அளவைப் பொறுத்து      

சாம்பியன் சுடலை!

250-ல் இருந்து

சாம்பியன் சுடலை!

450  வரை விற்கிறார்கள்!  

வி.ஜெய்கிருஷ்ண கோகிலன்
படங்கள்: எல்.ராஜேந்திரன்