Published:Updated:

''எனக்காகத் துடிக்க இத்தனை பேரா?''

சிவகாசி

 ##~##
சி
வகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் பி.காம்., இரண்டாம் ஆண்டு படிக் கும் விஜய பாண்டியராஜன் என்கிற மாண வருக்கு சிறுநீரகக் கோளாறு. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் சொல்லிவிட, பிரின்ட்டிங் பிரஸ் ஒன்றில் வேலை பார்க்கும் அவரது தந்தை பாலமுருகன் தலையில் கை வைத்து உட்கார்ந்துவிட்டார். தன்னுடைய சிறு நீரகங்களில் ஒன்றை மகனுக்குத் தானமாகக் கொடுக்க பாலமுருகன் முடிவு செய்தாலும், ஆபரேஷனுக்குத் தேவையான பணம் இல்லை. அப்போது அவருக்குப் பணம் வசூல் செய்து உதவி செய்து இருப்பவர்கள் விஜய பாண்டியராஜனின் வகுப்பு நண்பர்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

 ஆபரேஷன் முடிந்து அப்பா-மகன் இரு வருமே பெட்டில் இருக்க, நெகிழ்ச்சியோடு பேசுகிறார் பாலமுருகன். ''எனக்கு இவன் ஒரே மகன். அதனால இவனைக் கண்ணுக்குக் கண்ணா வளர்த்தோம். ஒருநாள்கூட இவன் எங்களை விட்டு பிரிஞ்சதே இல்லை. சிவகாசிக்குப் பக்கத்தில் இருக்குற சித்துராஜபுரத்தில்  என்.எஸ்.எஸ் கேம்ப் போட்டிருந்தாங்க. அதுக்காக ஒரு வாரம் அந்த ஊருக்குப் போய்ட்டான். என்னால இவனைப் பார்க்காம இருக்க முடியலை. ரெண்டு வாட்டி  போய்ப் பார்த்துட்டு வந்தேன். இவனோட கிளாஸ்மேட் எல்லாரும் 'உங்க பையன் என்ன பச்சக் குழந்தையா?’னு சிரிச்சாங்க.

''எனக்காகத் துடிக்க இத்தனை பேரா?''

கேம்ப் முடிச்சு வந்தவனுக்கு மூச்சுத் திண றல் வந்திருச்சு. ரத்தம், நீர் எல்லாம் டெஸ்ட் பண்ணிட்டு, 'உங்க பையனுக்கு ஏற்கெனவே கிட்னி ஃபெயிலியராகி இருந்திருக்கு. இப்ப இன்னொரு கிட்னியும் செயல் இழக்க ஆரம்பிச்சிருச்சு. உடனே புதுசா கிட்னி பொருத்தணும். பையனை மீனாட்சி மிஷனுக்குக் கூட்டிட்டுப் போங்க’னு டாக்டர் சொல்லிட்டார்.

மதுரையில் இவனை அட்மிட் பண்ணிட்டு சிவகாசி காலேஜுக்குப் போய் லீவு சொன் னேன். இவனோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் தேடி வந்துட்டாங்க. 'இவ்வளவு நடந்தும் ஏம்ப்பா எங்ககிட்ட சொல்லலை?’ன்னு கோபப் பட்டாங்க. ராஜாங்கிற பையன் தினமும் ராத் திரி பஸ் ஏறி மதுரைக்கு வந்திடுவான். எனக்கு ஆறுதல் சொல்லிட்டு, என் பையன்கிட்டே ஜோக் அடிச்சு சிரிக்கவெச்சுகிட்டே இருப்பான்.

திடீர்னு ஒருநாள் அவனும், காலேஜ் நண் பர்களும் வந்து என்கிட்ட 20 ஆயிரம் ரூபா குடுத்தாங்க. நான் 'வேண்டாம்ப்பா’ன்னு சொன்னதும் கையைப் பிடிச்சு, 'எங்களையும் உங்க மகனா நினைச்சிக்கோங்க. இன்னும் கொஞ்சம் பணம் ரெடி பண்ணிட்டு வர்றோம்’னு சொன்னாங்க. அப்ப அவங்க கை துடிச்சது இப்பவும் எனக்கு ஞாபகத்துல இருக்கு. பெத்த அப்பன் நான் கிட்னி கொடுத்தது பெரிசு இல்லீங்க. யாரோ பெத்த பிள்ளைங்க என் மகனுக்காகத் துடிக்கிறாங்க பாருங்க... அதுதாங்க நிஜமான பாசம்'' என்கிறார் உடைந்த குரலில்.

''எனக்காகத் துடிக்க இத்தனை பேரா?''

படுக்கையிலேயே இருந்தாலும், விஜயபாண்டியராஜனின் முகத்தில் அப்படி ஒரு மலர்ச்சி. ''என் அப்பா அம்மாவுக்கு நான்தான் உலகம்கிறது சின்ன வயசுலயே தெரியும் சார். ஆனா, எனக்கு ஒண்ணுன்னா துடிக்கிறதுக்கு இத்தனை பேர் இருக்கிறாங்கன்னு இப்பதான் சார் புரிஞ்சிக்கிட்டேன். ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஆபரேஷன் செஞ்ச வலி எனக்குத் தெரியலை சார்.'' பேசி முடிக்கும்போது விஜய பாண்டியராஜனின் கண்களில் இருந்து கரகரவென வழிகிறது நீர்!  

- கே.கே.மகேஷ்,
படம்: சொ.பாலசுப்ரமணியன்

''எனக்காகத் துடிக்க இத்தனை பேரா?''