Published:Updated:

விசில் சுந்தரி!

விசில் சுந்தரி!

'தெக்கத்திப் பொண்ணு’ சீரியலில் நடிக்கும் சிட்டுக்கள் சில தேனியிலேயே டென்ட் அடித்து வாழ்கின்றன. அவற்றில் இரண்டு புதுமுகங்கள் இதோ...

 ##~##
'நா

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ன் தேனிக்காரப் பொண்ணு. சீவிடுவேன் சீவி... ஆமா' என்றுபார் வையாலே மிரட்டும் கனகா, உண் மையிலேயே தேனிப் பொண்ணு. 'சீரியலில் பவளக் கொடிங்கிற கேரக்டரில் நடிக்கிறேன். வருஷக் கணக்கா சீரியல் போறதால, சொந் தக்காரங்களைவிட ஆர்ட்டிஸ்ட் முகத்தில்தான் அடிக்கடி முழிக்க வேண்டியிருக்கு. அதனால, நாங்க ஒரு குடும்பமாவே ஆகிட்டோம். பெரும்பாலும் நான் வீட்டில் இருக்கிறதைவிட ஆர்ட்டிஸ்ட்களோடதான் அதிகமா இருப்பேன். எங்களுக்குள் நடக்கிற பாசப் போராட்டங்களை இன்னொரு சீரியலா எடுக்கலாம். ஒரு விஷயம் தெரியுமா? பாரதிராஜா சார் எனக்கு மாமா முறை. என்னை வாடி போடின்னு உரிமையா கூப்பிடுவார். எங்கம்மாவுக்கும், அவருக்கும் கருமாத்தூர் முனுசாமி தான் குலதெய்வம்'' - நிறுத்தாமல் பேசும் கனகா, யூனிட்டில் வாயாடி என்று பெயர் வாங்கிவைத்திருக்கிறார்!
விசில் சுந்தரி!

அர்ச்சனாவைப் பார்த்தாலே கேரளத்துப் பொண்ணு என்று புரிந்துவிடுகிறது. ''எனக்குச் சொந்த ஊரு ஆலப்புழா. எனக்கு நடனம் ரொம்பப் பிடிக்கும். அங்கே கலாதிலகம் நாட்டியப் பள்ளியில் படிச்சேன். சில மியூஸிக் ஆல்பங்களிலும் நடிச்சி இருக்கேன். அந்த ஆல்பம் பார்த்துட்டு பாரதிராஜா சார் என்னை செலெக்ட் பண்ணி னார். என் கேரக்டர் பேரு விசில் சுந்தரி. மொத்த யூனிட்டிலும் ஏரியாப் பசங்க அதிகமா சைட் அடிக்கிறது என்னைத்தான்' - என்கிறார் வெட்கத்துடன்!

- கே.கே.மகேஷ்
படங்கள்: ஜெ.தான்யராஜு

நெல்லை படிப்பு பார்ட்டி!

விசில் சுந்தரி!

நெல்லை சூரியன் எஃப்.எம்மில் தினம் காலையில் ஒலிபரப்பாகும் 'கிட்டு மாமா- சூசி மாமி’ நிகழ்ச்சியின் கிட்டு மாமா, எல்.சுப்பிர மணியன். இதோ அவரைப்பற்றிய சிறு குறிப்புகள்...

• அலுவலகத்தில் அனைவரும் இவரை 'எல்.எஸ்’ என்றுதான் கூப்பிடுகிறார்கள்!

• பாஸ்... படிப்பு பார்ட்டி. எம்.எஸ்.சி (கெமிஸ்ட்ரி), எம்.எட், எம்.ஏ. (தமிழ்), எம்.ஏ. (வரலாறு) படிப்பு முடித்திருப்பவர்... இப்போது இரண்டு  எம்.ஃபில் ஆய்வும் செய்துகொண்டு இருக்கிறார்!

• எல்.எஸ்-ஸின் அப்பா சப்-இன்ஸ்பெக்டர். அதனால், போலீஸைப் பார்த்தாலே... பார்ட்டி பம்மிவிடுவார்!

• தூத்துக்குடியில் ஆல் இண்டியா ரேடியோ துவக்கப்பட்டபோது முதல் ஆளாக அப்பாயின்மென்ட் ஆகி, முதல் நிகழ்ச்சியை நடத்தியது இவரே!

 '

• காருக்குறிச்சி’ துரைராஜ், 'அப்பர்குளம்’ கருப்பசாமி, 'காவூர்’ முருகன், 'வெங்கடேசபுரம்’ பாலகிருஷணன் இவர்கள் எல்லாருமே   எல்.எஸ்-ஸின் காலர் நண்பர்கள்!

•  நிகழ்ச்சி நடக்கும்போது பாடலை ஒலி பரப்பியதும் கடலை மிட்டாய் சாப்பிடுவது எல்.எஸ்-ஸின் பழக்கம்!

- இ.கார்த்திகேயன்,
வி.ஜெய்கிருஷ்ண கோகிலன்
படம்: எல்.ராஜேந்திரன்