Published:Updated:

சுடிதார் நாட்டாமை

சுடிதார் நாட்டாமை

கோவை அலார பார்ட்டி

சுடிதார் நாட்டாமை

'ஹாய்ய்ய் கோயமுத்தூர்ர்ர்...’ என்று கோவைவாசிகளின் காதுகளில் காலைகளில்  குழாய் ஊதும் பார்ட்டி, கிருஷ்ணா. ரேடியோ மிர்ச்சியில் 'ஹாய் கோயமுத்தூர்’ பண்ணுகிறார். ஊருக்குள் யானை புகுந்ததில் ஆரம்பித்து லிபியா கலவரம் வரை அசை போட்டபடி, அசத்தலான பாடல்களைத் தட்டிவிடுவதுதான் பையனுக்கு அசைன்மென்ட். நிறையப் பெண்களுடன் பேசுவதால் கிருஷ்ணாவுக்கு கோவையில் ஏகப்பட்ட கோபியர் விசிறிகள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''கல்லூரிப் படிப்பை முடிச்சிட்டு, கோவையில நான் பார்க்காத வேலையே இல்லை. இதில் கடுப்பான எங்கப்பா, என்னை ஃப்ளைட்ல ஏத்தி, துபாய்க்கு அனுப்பிவெச்சிட்டாரு. கண்டம்விட்டு கண்டம்தாவு னாலும் நம்ம கட்டம் சரியா இருந்தாதானே, எல்லாம்வொர்க்-அவுட் ஆகும். மறுபடியும் கோவைக்கே வந்துட்டேன். ஒரு இனிய காலைப் பொழுதில் போனாப்போவுதுன்னு மிர்ச்சியில சேர்த்துக்கிட்டாங்க...'' என்று சொல்லும் கிருஷ்ணா, கல்லூரியில் புரொஃபசர்களிடம் திட்டு வாங்கி நொந்துபோயிருக்கும் இளசுகளுக்கு ஆறுதல் சொல்வதற்காகவே புதிய நிகழ்ச்சி ஒன்றைத் துவக்க இருக்கிறார்!

சுடிதார் நாட்டாமை

சுடிதார் நாட்டாமை

கோவை ஹலோ எஃப்.எம்-ல் 'சில்லுன்னு ஒரு காலை’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார் கௌசிகா. பார்ட்டி படிப்பிலும் செம கில்லி. எம்.பி.ஏ., படித்து வருபவர் பள்ளி நாட்களில் சில பாடங்களில் ஃபெயிலாகிப் போக, அம்மா தோசைக் கரண்டியால் வெளுத்துவிட்டாராம். ஆகவே, அம்மணிக்குப் படிப்பின் மீது பயபக்தி அதிகம்.

''பிறந்த நாள், கல்யாணம்னு சந்தோஷமான தருணங்களுக்கு வாழ்த்து சொல்ல எனக்கு போன் பண்ணினா... கோவையே கேட்கிற மாதிரி அந்த சேதியைக் கூவுறதுல உள்ள சுகமே தனிதான். காலேஜ் அசைன்மென்ட், சின்னச் சின்ன பிரச்னைன்னு சில நேரத்துல பரபரப்போட வந்து நிகழ்ச்சியில உட்காருவேன். ஆனா, அடுத்தடுத்து வர்ற அழைப்புகளுக்கு பேச ஆரம்பிச்சிட்டா, மனசு லேசாகிடும். சண்டை போட்டுக்கிட்ட மனைவிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லச் சொல்லி கேட்குற கணவர்கள், 'முதல்ல அவனை மரியாதையா மன்னிப்பு கேட்கச் சொல்லு’னு காதலனிடம் 'தூது போ செல்லக் கிளியே’னு சொல்றவங்கன்னு... இவருக்கு ரேடியாவைத் தாண்டியும் பெர்சனல் பஞ்சாயத்துக்கள் வருகிறதாம். அதனால், விடுமுறை நாட்களில் நாட்டாமை பண்ணுவதில் அம்மணி செம பிஸி. வெத்தலை பாக்கு... சொம்பு, ஆல மரத்தடி எல்லாம் உண்டா அம்மணி?

குட்டி குஷ்பு

சுடிதார் நாட்டாமை

கோவை, ரேடியோ மிர்ச்சியில் வலம் வரும் கொல்லத்து சேச்சி பெனி. கையில் எப்போதும் ஸ்நாக்ஸ் பாக்ஸ். ''என்னைப் பொறுத்தவரைக்கும் நல்லா சாப்பிடணும். சந்தோஷமா வாழணும்... இதைத்தான் நான் என் நேயர்களுக்கும் சொல்லுவேன். அறிவுரை சொல்கிற நான் அதுக்கேத்த மாதிரி நடந்துக்கணும் இல்லியா. அதனாலதான் கொஞ்சம் வெயிட் போட்டு இருக்கேன். காலை டிபனுக்கும் மதியம் சாப்பாட்டுக்கும் நடுவுல நிகழ்ச்சி செய்யறதால அப்பப்பப் பசிக்கும். அதனால் நாலு ஆப்பிள் சாப்பிடுவேன். அப்புறம் கொஞ்சமா ஸ்நாக்ஸ். அப்புறம்தான் சாப்பாடு. அவ்வளவுதான்...'' என்று சிரிக்காமல் பேசுகிறார் பெனி. மிர்ச்சியில் நான்கு வருடங்களாக 'ரீ-வைண்ட் ராகங்கள்’ நிகழ்ச்சியை நடத்திக்கொண்டு இருப்பவருக்கு, கோவையில் ரசிகர் பட்டாளம் அதிகம். சமீபத்தில் மிர்ச்சி நிறுவனம் இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனியுடன் இணைந்து கோவையில் 'நம்ம ஊரு பாட்டுக்காரன்’ விழா நடத்தியது. அதில் விஜய் ஆண்டனியுடன் அம்மணி போட்ட கெட்ட ஆட்டத்தைப் பார்த்த பிறகு, கோவை இளசுகள் பெனியை 'குட்டி குஷ்பு’ என்றே விளிக்கிறார்கள்!

படங்கள்: தி.விஜய்