Published:Updated:

பாம்புகளை காதலிக்கிறேன்!

ஈரோடு

##~##
ம் வசிப்பிடங்களைத் தேடி வரும் பாம்புகளை அடித்துக் கொல்கிறோம். ''பாம்பைக் கொல்லக் கூடாது. அவற்றைக் காப்பது நம் கடமை...'' என்கிறார் ஈரோட்டை சேர்ந்த ராபின்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அதற்காக இவர் உருவாக்கிய அமைப்புதான் 'க்ரீன் கிராஸ் இந்தியா’. 'பாம்பு எங்கள் வீட்டில் இருக்கிறது’ என்று போன் போட்டால், பைக்குகளில் வந்து இறங்கி பாம்புகளை பக்குவமாகப் பிடித்து சத்தியமங்கலம் வனப் பகுதியில் விட்டுவிடுகிறார்கள்.

பாம்புகளை காதலிக்கிறேன்!

''நான் சின்னப் பையனாக இருந்தபோது தெரியாமல் ஒரு பாம்பைக் கொன்றுவிட்டேன். எனக்கு ரொம்பவும் கஷ்டமாகிவிட்டது. அப்போது பிடித்தது இந்தப் பாம்பு பைத்தியம். சொல்லப்போனால், பாம்புகளை நான் காதலிக்கிறேன். அழகான பெண்களைவிட என்னை அதிகம் ஈர்ப்பவை இந்தப் பாம்புகள்தான். என்னைப் போலவே சிந்தனைகொண்ட நண்பர்கள் 10 பேர் சேர... இந்த அமைப்பு உருவானது. கொடிய விஷம்கொண்ட நாகப் பாம்புகள், கண்ணாடி விரியன், கட்டு விரியன் என இதுவரை 6,000 பாம்புகளைப் பிடித்து இருக்கிறோம்.  

சில மாதங்களுக்கு முன்பு பாம்பு பிடித்தபோது ஒரு பாம்பு என்னைக் கடித்துவிட... மிகவும் கஷ்டப்பட்டேன். அப்போதுதான் கலிஃபோர்னியாவைத் சேர்ந்த விலங்குகள் பாதுகாப்பு தொடர்பானத் தன்னார்வ தொண்டு நிறுவனத்திடம் பாம்புகளை முறையாகப் பிடிப்பது குறித்து ஆன்-லைனிலேயே கற்றுக்கொண்டோம். ஆஸ்திரேலியாவை சேர்ந்த பாம்பு ஆராய்ச்சியாளர் பிரைன் ஹிரேவ் எங்கள் அமைப்பைப்பற்றி கேள்விப்பட்டு, பாம்பு பிடிக்க மூன்று லட்சம் மதிப்புள்ள கருவிகளை எங்களுக்குக் கொடுத்தார்...'' என்கிறார் ராபின்.

இந்த அமைப்பைச் சேர்ந்த முத்து, ''பாம்புகளைக் காப்பது மட்டுமல்ல... வாரந்தோறும் கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களிடம் உலகம் வெப்பம் அடைவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் எடுத்துச் சொல்கிறோம். மரங்கள், பறவைகள், வன விலங்குகளின் இருப்பு அவசியத்தையும் வலியுறுத்துகிறோம்...'' என்கிறார். இவர்களை 90036 33054 என்ற தொலைபேசி எண்ணில் அழைக்கலாம்!

- வீ.கே.ரமேஷ், படம்: க.தனசேகரன்