Published:Updated:

ஜக்கியின் சிவதாண்டவம்!

கோவை

##~##
'தா
ம்ததிகிட  தாம்ததிகிட...’ - மெள்ளத் துவங்கி... மேலே மேலே மேலே உயர்ந்து உச்சஸ்தாயியில் ஒலிக்கும் அந்த இசையால் மழைத் தூறல் நனைத்த மண்டபத் தூண்கள் அதிர ஆரம்பிக்கின்றன. சத்குரு ஜக்கி வாசுதேவின் மகா சிவராத்திரி யக்ஷா இசை விழா அது. கோவையின் ஒரு வார பக்திக் கொண்டாட்டம்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அரங்கு நிறையக் கூட்டம் இருந்தாலும் சிறு சலசலப்புகூட இல்லை. திடுதிப் என நடன மேடையின் இருளைக் கலைக்கிறது ஓர் ஒளிவட்டம். கர்னாடக வாய்ப்பாட்டு, புல்லாங்குழல் இசை என்று தென்றலாகத் தவழ்ந்த இசை அனுபவத்துக்கு இடையில் ஒடிசி நடனக் கலைஞர் சோனல் மான்சிங்கின் மிடுக்கான நடனோற்சவம். பயம், ஹாஸ்யம், ரௌத்ரம் என்று விதவிதமான முக பாவங்களில் சோனல் மான்சிங்கின் அபிநயங்கள் அபாரம்!

ஜக்கியின் சிவதாண்டவம்!

நீராடச் செல்லும் பார்வதி, வெளியே காவலுக்காக ஒரு குழந்தையை உருவாக்கி வைத்துவிட்டுச் செல்கிறாள். அங்கே வரும் சிவபெருமானை குழந்தை தடுக்கிறது. சினம் கொண்ட சிவன், குழந்தையின் தலையை சீவுகிறார். தலை கொய்யப்பட்ட தன் குழந்தையின் உடலை நோக்கி பார்வதி அதிர்ந்து குலுங்கும் 'விநாயகர்’ கதையை சோனல் அரங்கேற்றியபோது கூட்டம் சிலிர்த்துப்போனது. விழாவின் க்ளைமாக்ஸ் மகா சிவராத்திரி அன்று நள்ளிரவு தொடங்கியது. சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக உடுக்கை ஒலிக்கு சத்குரு சிவதாண்டவம் ஆட... மொத்த பார்வையாளர்களும் தங்களை மறந்து ஆடி பக்திப் பரவசத்தின் உச்சம் சென்றார்கள்.   மறக்க முடியாத நிகழ்வு!                                                                                                    

- எஸ்.ஷக்தி,  படங்கள்: தி.விஜய்