Published:Updated:

வீரப்பன் கோயிலுக்கு மாலை!

தர்மபுரி

 ##~##
யப்பனுக்கு மாலை அணிந்து கோயிலுக்குச் செல்லும் பக்தர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால், தர்மபுரி அருகே வீரப்பன் கோயிலுக்கும் மாலை போட்டுக்கொண்டு செல்கிறார்கள். ஆச்சர்யம்... ஆனால், உண்மை!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தர்மபுரி அருகே நெருப்பூரில் முத்தையன் கோயில் உள்ளது. சந்தனக் கடத்தல் வீரப்பனின் ஃபேவரைட் கோயில் இது. வீரப் பன் எந்த முக்கியக் காரியம் செய்தாலும் முத் தையனிடம் வாக்குக் கேட்காமல் செய்ய மாட்டானாம். மலையூர் மம்பட்டியான், வீரப்பனுக்கு அறிமுகப்படுத்திய கோயில் இது என்றும் சொல்கிறார்கள்.

வீரப்பன் கோயிலுக்கு மாலை!

வீரப்பன் அடிக்கடி இங்கு வந்து சென்றதால் வீரப்பன் கோயில் என்றே பேச்சுவழக்கில் இந்தக் கோயிலை அழைக்கிறார்கள்.

இங்கு கல் இடுக்கில் வளர்ந்து இருக்கும் அரச மரத்தின் வேருக்கு அடிப் பகுதியில் சிறு குகை உள்ளது. குகையில் மூன்று அடி உயரம் கொண்ட  முத்தையன் சிலை வைக்கப்பட்டுள்ளது. அமாவாசை தினத்தில் ஆயிரக்கணக்கில் பக்தர் கள் இங்கு வந்து வழிபடுகிறார்கள். மார்கழி மாதம் வந்தால், தினமும் இங்கு திருவிழாதான். சுற்று வட்டாரத்தில் உள்ள நாகமரை, ஏரியூர், பெரும்பாலை, செல்லமுடி, ஒட்டனூர், பென்னாகரம் ஊர்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக் தர்கள் இந்தக் கோயிலுக்கு மாலை அணிந்து... பயபக்தியுடன் விரதம் இருந்து வருகிறார்கள். சுட்டெரிக்கும் கோடையில் இந்தப் பகுதி முழுவதும் பாளம் பாளமாகப் பிளந்துக்கிடக்கும். ஆனால், முத்தையன் சிலைக்கு அருகில் உள்ள நீரூற்று மட்டும் வற்றுவது கிடையாது. இது கடவுளின் வரம் என்கிறார்கள் மக்கள்!  

- எஸ்.ராஜாசெல்லம்