Published:Updated:

இது எக்ஸ்க்ளூசிவ் தோசை!

சேலம்

சுவர் சித்திரங்கள்!

இது எக்ஸ்க்ளூசிவ் தோசை!

'வெற்றிகரமாக வாழ்ந்து காட்டு. வஞ்சம் தீர்க்க அதைவிட சிறந்த வழி வேறு எதுவும்  இல்லை’ - சேலத்து சுவர்களில் இப்படியான பொன்மொழிகளை அடிக்கடி பார்க்கலாம். பொன்மொழிக்கு கீழே எம்.எம்.எம். என்று எழுதப்பட்டு இருக்கும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சேலம் தாதகாப்பட்டியை சேர்ந்த பசுபதிதான் அந்த பொன்மொழி பார்ட்டி.

''மருதமலை முருகனின் சுருக்கம்தான் எம்.எம்.எம். சுவத்துல விளம்பரம் எழுதுறது எனக்குத் தொழில். ஏதாவது நல்லது செய்யலாம்னு 18 வருஷத்துக்கு முன்னாடி இப்படி பொன்மொழிகள் எழுத ஆரம்பிச்சேன். ஆரம்பத்துல மாசத்துக்கு ஒரு தடவை பொன்மொழியை மாத்துவேன். இப்ப எல்லாம் வாரம் ஒரு பொன்மொழி எழுதிட்டு வர்றேன். இதுக்காக நிறையப் புத்தகங்கள் படிக்கிறேன். கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி, 'ஒரு நொடி துணிச்சல் இருந்தால்... இறந்துவிடலாம். ஒவ்வொரு நொடியும் துணிச்சல் இருந்தால்... வாழ்க்கையில் ஜெயித்துவிடலாம்’னு எழுதியிருந்தேன். 'பூ’ படத்தோட இயக்குநர் சசி அதை படிச்சிருக்கார். அப்போ ஏதோ பிரச்னைகளால படம் பாதியிலேயே டிராப் ஆயிடுச்சாம். இந்த பொன்மொழியைப் படிச்சவருக்கு மனசுக்குள்ள உத்வேகம் வந்து படத்தை எடுத்து முடிச்சிருக்கார். இதை அவரோட பேட்டியில சொன்னப்ப, எனக்குப் பெருமையா இருந்தது. இப்படி நான் எழுதுற விஷயத்தால், நல்லது நடந்தாப் போதும். அதை விட சந்தோஷம் நமக்கு வேற என்ன இருக்க முடியும்...''  என்று கேட்டுக் கொண்டே பொன்மொழி எழுதத் துவங்குகிறார் பசுபதி!

- கே.ராஜாதிருவேங்கடம்,  படம்: எம்.விஜயகுமார்

இது எக்ஸ்க்ளூசிவ் தோசை! 

இது எக்ஸ்க்ளூசிவ் தோசை!

சன்ஸ் தோசை... சேலம், அம்மாபேட்டை யில் இருக்கும் என்.என்.ஆர்., என்.என்.கே. சகோதரர்கள் கடைகளின் ஸ்பெஷல் இது!

சிறிய ஹோட்டல்தான். சாதாரண மரப் பெஞ்ச். ஆனால், மாலை 5 மணியாகிவிட்டால் போதும்... படையெடுத்து வருகிறார்கள் தோசை ரசிகர்கள். கடைக்குள் இடம்பிடிக்க அப்படி ஒரு போட்டி. கடையின் உரிமையாளர்கள் ராமாச்சாரி, கிருஷ்ணமாச்சாரி, ''40 வருஷமாக் கடை நடத்துறோம். அப்ப இருந்தே எசன்ஸ் தோசை பிரபலம். வழக்கமான தோசைதான். ஆனா, தோசைக்கான எசன்ஸ் தயாரிப்புலதான் தோசையோட ருசி அடங்கி இருக்கு. இளசான ஆட்டுக் கறியை கொஞ்சமா எண்ணெய்விட்டு வதக்கணும். இஞ்சி, பூண்டு, பட்டை, லவங்கம், சீரகம், மிளகாய் வற்றல் சேர்த்து அரைச்சி வெச்சிருந்த மசாலாவை சேர்த்து வேகவைக்கணும். தண்ணீர் அதிகம் சேர்க்கக் கூடாது. அடிபிடிக்காத மாதிரி மிதமான சூட்டுலயே வேகவைக்கணும். கெட்டி சட்னி பதத்துல இறக்கிட்டு கறி துண்டுகளை மட்டும் எடுத்துட்டா எசன்ஸ் ரெடி. மட்டனோட முழு ருசியும் எசன்ஸுல இறங்கிடும். ஒரு தோசையோட விலை ஏழு ரூபாதான். பாண்டிச்சேரி, கடலூர், விழுப்புரம் பக்கம் இருந்து எல்லாம் வந்து சாப்பிட்டுப் போறாங்க...'' என்கிறார்கள்.

ஆஹா!

- கே.ராஜாதிருவேங்கடம், படம்: க.தனசேகரன்