Published:Updated:

அணில்கள், நாய்கள் எங்கள் சாதி!

திருவண்ணாமலை

##~##
லெ
ஸ்லி ராபின்சன்...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஆங்கிலேயர்கள் செல்லப்பிராணிகள் வளர்ப்பதில் ஆர்வம் உடையவர்கள்தான். ஆனால், இவர் கொஞ்சம் வித்தியாசம். நாய்கள், பசுக்கள், குரங்குகள், பாம்புகள், கழுகுகள், அணில்கள், கிளிகள், பறவைகள் என்று நீள்கின்றன இவரது பெட் லிஸ்ட்.

ஆன்மிக நாட்டத்தோடு திருவண்ணா மலை வந்த லெஸ்லி, ஆசிரமத்துக்குச் சென்ற நேரம் தவிர்த்து, மீதிப் பொழுதை விலங்குகளிடம் செலவழிக்க, இவருடன் பழகிய தெரு நாய்கள் முதல் காக்கா குருவிகள் வரை இவரைப் பிரிய முரண்டு பிடித்ததால், இங்கேயே தங்கிவிட்டாராம். அமெரிக்காவில் இருந்து அவருடைய குடும்பம் எவ்வளவோ அழைத்துப் பார்த்தும் இங்கிருந்து கிளம்ப மறுத்துவிட்டாராம். விலங்குகளின் மீது இருந்த பாசத்தால், 'அருணாச்சலா விலங்குகள் காப்பகம்’ ஒன்றை நிறுவினார்.

அணில்கள், நாய்கள் எங்கள் சாதி!

''இதை நிறுவியதற்கு முக்கியக் காரணம், இங்கிருந்த அரசு கால்நடை மருத்துவமனை கொடுத்த உத்வேகம்தான். சரி, நம்மால் முடிந்த அளவுக்கு நாமும் பொதுமக்களுக்கு உதவுவோம் என என்னுடைய காப்பகத்தை ஒரு சிறிய மருத்துவமனையாகவே மாற்றிவிட்டேன்!'' என்று சிரிக்கிறார் ராபின்சன்.

சுற்றுவட்டாரத்தில், எந்த இடத்தில் விலங்குகள் விபத்தில் சிக்கினாலோ, யாராவது விலங்குகளைக் கொடுமைப்படுத்துவது தெரிந்தாலோ இந்த மருத்துவமனைப் பணியாளர்கள் அந்த இடத்துக்கே சென்று விலங்குகளை மீட்டு வந்து காப்பகத்தில் வைத்துக்கொள்கின்றனர். இங்குள்ள மக்களிடம் எந்தப் பணமும் பெறாமல், தனது அமெரிக்க நண்பர்கள் கொடுக்கும் பணத்தையும், குடும்பம் கொடுக்கும் பணத்தையும் வைத்துதான் ராபின்சன் இந்தக் காப்பகத்தை நடத்தி வருகிறார்.  

இனி, எங்காவது தெருவோரத்தில் அடிபட்டு கால்களைத் தூக்கியபடி அவசரமாக ஓடும் நாயையோ பூனையையோ பார்த்தால், ராபின்சன் உங்கள் நினைவுக்கு வருவார்தானே!

- சந்திப்பு மற்றும் புகைப்படங்கள்: யா.நபீசா