Published:Updated:

கவிதை... காதல்... காம்பியர்ஸ்!

கவிதை... காதல்... காம்பியர்ஸ்!

 ##~##
வேலூர் மாவட்டத்தில் பிரபலமான ஜாக்ஜி டி.வி-யின் காம்பியர்கள் ஸ்வேதா, பிரியா பற்றி குட்டிக் குட்டித் தகவல்கள்...

•  ஸ்வேதாவின் பேச்சே மைக்கேல் ஜாக்சன் நடனம் போல படு ஸ்பீடாக இருக்கும் என்பது வேலூருக்கே தெரிந்த விஷயம்தான். தெரியாத விஷயம், ஸ்வேதா முறைப்படி பரதநாட்டியம் கற்றுக்கொண்டவர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கவிதை... காதல்... காம்பியர்ஸ்!

• ஸ்வேதா சொன்ன ஒரு ஜாலி சம்பவம் இது, ''ஆறு மாசத்துக்கு முன்னாடி நான் காட்பாடி ரயில்வே ஸ்டேஷனில் நின்னுட்டு இருந்தேன். அப்போ ஓர் அழகான பையன் வந்து 'உங்களை ஒரு போட்டோ எடுத்துக்கிறேன். தப்பா நினைக்காதீங்க’னு சொன்னான். 'நீங்க யாருன்னே தெரியாது... ஏன் என்னை போட்டோ எடுக்கிறீங்க?’னு கேட்டேன். அதுக்கு அவன், 'உங்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதனால், உங்களை லவ் பண்றேன்னு நினைக்காதீங்க. உங்களை மாதிரியே ஒரு பொண்ணை தேடிப் பிடிச்சு கல்யாணம் பண்ணிக்கப்போறேன். உங்க போட்டோவை எங்க அம்மாகிட்ட காட்டி, இந்த மாதிரி ஒரு பொண்ணு பாருங்கன்னு சொல்வேன். அதனாலதான் ப்ளீஸ்!’னான். பட், எனக்கு அந்த டீலிங் பிடிச்சிருந்தது!''

•  'ஸ்மைல் ப்ளீஸ்’, 'நேயர் விருப்பம்’ என்று நிகழ்ச்சிகளில் கலக்கும் பிரியா, ஒரு தனியார் பள்ளி ஆசிரியை. பார்ட் டைமாகத்தான் அம்மணி காம்பியரிங் செய்கிறார்.

• இன்னமும் பிரியாவுக்கு ஏராளமான போன் கால்களும் புரொபோஸல்களும் வந்தாலும், ஸாரி பாஸ்... பிரியாவுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே திருமணம் ஆகிவிட்டது. அதுவும் காதல் திருமணம்!

- கே.ஏ.சசிகுமார்,
படங்கள்: ச.வெங்கடேசன்

கவிதை... காதல்... காம்பியர்ஸ்!
கவிதை... காதல்... காம்பியர்ஸ்!