Published:Updated:

அறிவிழி

அண்டன் பிரகாஷ்

அறிவிழி

அண்டன் பிரகாஷ்

Published:Updated:
அறிவிழி

மைக்ரோசாஃப்ட்... 38 வயதாகும் இந்த நிறுவனத்துக்கு, இதுவரை இரண்டே செயல் தலைவர்கள்தான் இருந்திருக்கிறார்கள். முதலில், அதன் நிறுவனரான பில் கேட்ஸ் இருந்தார். அவருக்குப் பின்னர் அவருடன் பல வருடங்கள் இணைந்து பணிபுரிந்த ஸ்டீவ் பாமர் இருந்தார். பாமர், இன்னும் ஒரு வருடத்தில் பணி ஓய்வுபெறப்போவதாக அறிவித்திருக்கிறார். அறிவிப்பு

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வெளியானதும் பங்குச் சந்தையில் மைக்ரோசாஃப்ட்டின் பங்கு மதிப்பு சில சதவிகிதங்கள் உயர்ந்தது. முதலீட்டாளர்கள் மைக்ரோசாஃப்ட்டின் தலைமையில் மாற்றங்களை விரும்புகிறார்கள் என்பதையே இது வெளிப்படையாகக் காட்டுகிறது. 'மைக்ரோசாஃப்ட் இணையம் மற்றும் மேகக்கணினியத் தொழில்நுட்பங்களை தகுந்த அளவில் பயன்படுத்தவில்லை’ என்று தொடர்ந்து இருந்துவரும் குற்றச்சாட்டை புதிதாக வரப்போகும் செயல் தலைவர் நீக்குவாரா என்பதைக் காத்திருந்து பார்க்க வேண்டும்.

பொதுவாக, மைக்ரோசாஃப்ட் போன்ற மிகப் பெரிய 'டெக்’ நிறுவனங்களில் புதிய தலைமையைத் தேர்ந்தெடுப்பதில் Friend, Foe அல்லது  Family என இந்த மூன்று வழிகளில் ஒன்றைக் கடைப்பிடிப்பார்கள். தங்களுடன் நட்புறவு பாராட்டிவரும் நிறுவனத்தில் இருப்பவரையோ, தங்களுடன் கடுமையான போட்டியில் இருக்கும் நிறுவனத்தில் பணிபுரிபவரையோ அல்லது நிறுவனத்திலேயே பணிபுரிந்து கொண்டிருக்கும் ஒருவரையோ தேர்ந்தெடுக்க வேண்டும். அப்படித் தேர்ந்தெடுக்கப்படுபவரிடம் முழுமையாகப் பணியை ஒப்படைத்துவிட்டுச் சென்றுவிடு வதாகத் தெரிவித்திருக்கிறார் பாமர்.

ந்தக் கட்டுரை அச்சாகி வெளிவரும்போது, சாம்ஸங்கின் புதிய மொபைல் சாதனங்கள் வெளிவந்திருக்கும். செல்போன் பாதி; டேப்ளட் பாதியாகக் கலந்து வெளியிடப்படும் 'நோட்’ என்ற பெயர் கொண்ட இரண்டுகெட்டான் 'Phablet’ வகையறாவின் மூன்றாவது தலைமுறைச் சாதனத்தை வெளியிடுகிறது இந்த நிறுவனம். அதோடு, கையில் அணிந்துகொள்ளும் Galaxy Gear’ என்ற அலைபேசி வசதிகொண்ட கைக்கடிகாரமும் வெளியிடப்படும் என்று தெரிய வருகிறது. ஆப்பிள் நிறுவனத்துக்குப் பலத்த போட்டியாக, குறிப்பாக ஆசிய நாடுகளில் தொடர்ந்து வளர்ந்துவருகிறது சாம்ஸங். அதனாலேயே காப்புரிமை பெறப்பட்ட தங்களது அறிவுசார் சொத்துக்களை சாம்ஸங் அவர்களது சாதனங்களில் பயன்படுத்துவதாக, உலகின் பல நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்து அவர்களின் போட்டியை மட்டுப்படுத்த முனைந்துவருகிறது ஆப்பிள்.

அறிவிழி

ஆனால், இந்தியா போன்ற நாடுகளில் ஆப்பிளைவிட சாம்ஸங் அதிபிரபலமாக இருப்பதற்கு அதன் குறைந்த விலையே மிக முக்கியக் காரணம். இதனாலேயே இந்த மாதம் வெளியாகவிருக்கும் ஆப்பிளின் புதிய சாதன அறிவிப்பில், விலை குறைந்த ஐ-போன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாம்ஸங்கின் சந்தைப் பங்கு அதிகமாக இருக்கும் நாடுகளில் நுழைய வேண்டும் என்பதே இதன் நோக்கம். இதுமட்டுமல்லாமல், பயன்படுத்தப்பட்ட ஐ-போன்களை தங்களிடம் விற்றுக்கொள்ளலாம் என்ற திட்டத்தையும் சென்ற வாரத்தில் கொண்டுவந்திருக்கிறது ஆப்பிள். இந்த போன்களை புதுப்பித்து, குறைவான விலைக்கு விற்கவும் ஆப்பிள் முற்படலாம்!

ளைய வயதினர், 'டெக்’ ஐடியாக்களை செயலுக்குக் கொண்டுவந்து புதிய நிறுவனங்களைக் கட்டி அமைப்பதே டெக் உலகின் நியதியாக இருந்து வந்திருக்கிறது. வயதில் முதிர்ந்தவர்கள், டெக் உலகில் புதிய ஐடியாக்களை செயலுக்கு கொண்டுவந்து சந்தைக்குக் கொண்டுசெல்வது அரிது. அதை நிகழ்த்தியிருக்கிறார்கள் டென்வரில் இருக்கும் சார்லி-மரியா தம்பதியினர். ஆறு குழந்தைகளும் எட்டு பேரக்குழந்தைகளும் கொண்ட இந்தத் தாத்தா/பாட்டி தம்பதி, 'பல்வேறு நகரங்களில் வாழும் தம் குடும்பத்தினருடன் நெருங்கிய தொடர்பில் இருப்பது எப்படி?’ என்ற எண்ணத்தை அலை மென்பொருளாக வடிவமைத்து, அதை ஆப்பிள் ஐபேடில் இயங்கும் வகையில் ஆப் ஸ்டோரில் பதிவேற்றி வைத்திருக்கிறார்கள். இந்த மென்பொருளைப் பயன்படுத்தி கதைகள் சொல்வதில் இருந்து, படம் வரைவது என குடும்பத்தில் இருக்கும் அனைவரும் ஒரே நேரத்தில் பங்குகொள்ள முடியும். அவர்களது வலைத்தளத்தில் www.famzoom.com இருக்கும் வீடியோக்களைப் பார்த்தால் அவர்களது கனவும், அதை நனவாக்க எடுத்திருக்கும் முயற்சிகளும் தெரியவரும்!  

- விழிப்போம்...