Published:Updated:

என்ன பூ ஆப்பு!

என்ன பூ ஆப்பு!

##~##
''ஓ
காட்...  மூணு வேளையும் மூக்கு பிடிக்கத் தின்னுட்டு கிளாஸ்ல நிம்மதியாத் தூங்கி எழுந்துட்டு இருந்தவங்களை, திடீர்னு எக்ஸாம் ஹால்ல உட்காரவெச்சு பரீட்சை எழுதச் சொன்னா... நாங்க என்ன பண்றது?'' என நொந்துகிடந்த திருவண்ணாமலை கம்பன் கலை மற்றும் அறிவியல் கல்லூரிமாணவிகளிடம் கலகல அரட்டை!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''ஏய், மிரிண்டா, ரோஸ்மில்க், லிம்கா, சோடா, தம்ஸ் அப், ஃபான்ட்டா!'' என்று அழைத்தபடி ஓடினார் கனிமொழி. என்னங்க புரியலையா, இது எல்லாம் அவங்க கோட் வேர்ட்ஸாம். 'மிரிண்டா’ன்னா ஓவர் மேக்கப், 'ரோஸ் மில்க்’னா ஹோம்லி, 'லிம்கா’ன்னா டென்ஷன் பார்ட்டி, 'சோடா’ன்னா ஓவர் படிப்ஸ், 'ஃபான்ட்டா’ன்னா பாதி லூஸு என்று அர்த்தமாம். (இப்பவே கண்ணக் கட்டுதே தோழி!).    

கூட்டு சேர்ந்த எல்லாரும் ஒண்ணாக் கூடி எடுத்த முடிவு... ''ஆளாளுக்கு ஒவ்வொரு தத்துவம் சொல்லணும். நீங்க நினைக்கிற மாதிரி, இது டார்ச்சர் தத்துவம் இல்லே... டக்கர் தத்துவம்!'' என ஒரு தினுசாகத் தயாரானார்கள்.  

என்ன பூ ஆப்பு!

முதலில் அபர்ணா... இவர் ஒரு கவிதைப் பைத்தியமாம். என்ட்ரி ஆனதும் இன்ட்ரோ கொடுக்காமல் நேராகத் தத்துவ மழை பொழிய ஆரம்பித்துவிட்டார்.

''அருகில் இருந்தும் பேச முடிய வில்லை... உரிமை இருந்தும் கேட்க முடியவில்லை... என்ன கொடுமை இது? எக்ஸாம் எழுத வந்தது ஒரு குத்தமா?''

அடுத்த கவிதையையும் டெரராக ஆரம்பித்தார்.

''ராவாக் குடிச்சவனும்  

ராப் பகலாப் படிச்சவளும்  

நல்லா இருந்ததா சரித்திரமே இல்லே...''  

இந்தக் கவிதைக்கு விசில் பறக்க, அடுத்ததாக வந்தவர்கள் அருணாவும் சுவாதியும். (இவர்கள் இருவரும் செம தோஸ்த்தாம்... முஸ்தபீ... முஸ்தபீ!)    

''சுவாதி, உன் புன்னகை பத்தி ஒரு கவிதை சொல்லவா?'' என்று அருணா கேட்க, வெட்கத்துடன் சுவாதியும் தலை அசைக்க, அருணா இறக்கியது அணுகுண்டுக் கவிதை.  

''நீ சிரிக்கும் ஒவ்வொரு விநாடியும் உன்னை மரணம் விலகிச் செல்கிறது. ஆனால், மற்றவர்களுக்கு மரணம் நெருங்குகிறது. ஸோ, நல்லா பிரஷ் பண்ணிட்டு சிரி!''

சுவாதி 'சொர்ணாக்கா’ ஆக, ''சரி... சரி... நான் உன்னை ஓவராக் கலாய்ச்சிட்டேன் போல, இப்போ நீ கேளு!'' என எஸ்.எம்.எஸ் அருணாவுக்கு வாய்ப்பு கொடுத்தார். எந்த நேரமும் மெசேஜும் கையுமாகவே இருப்பதால், அருணா வுக்கு அந்தப் பெயர். இவருடைய பேச்சுகூட மெசேஜ் படிப்பதைப்போலவே இருக்கிறது.  

''என்ன தத்துவம் சொன்னாலும், நாம ஃபாலோ பண்ணப் போறதில்ல... ஃபார்வர்டுதான் பண்ணப் போறோம். நமக்கு எல்லாம் எதுக்குத் தத்துவம்? இதுதான் என்னோட தத்துவம்!''    

''தினம் ஒரு பூ கொடுத்தேன் அவளுக்கு... அவள் மொத்தமாகத் திருப்பி ஒரே ஒரு பூ கொடுத்தாள்... அதுதான் ஆப்பு!'' என்று, தான் படித்த மொக்கை எஸ்.எம்.எஸ் தத்துவங்களைக் கொட்ட ஆரம்பித்தார் எஸ்.எம்.எஸ் அருணா.

நமக்கு 'சிட்டி’ ரோபோ கணக்காகத் தலை சுற்ற ஆரம்பிக்க, ''என்னங்க... என்னை மட்டும் விட்டுட்டீங்க!'' என்றபடி மூச்சிரைக்க வந்தார் ஹசீனா. இவருக்கு ஸ்போர்ட்ஸ் என்றால் ரொம்ப ஆர்வமாம்.  

'' 'ரன்னிங் ரேஸ்ல நம்ம கால் எவ்வளவு வேகமா ஓடினா லும், பரிசு என்னவோ கைக்குத்தானே கிடைக்கப் போகுது’ - இது எப்படி?'' என்று வந்த வேகத்தில் ஹசீனா ஒரு மொக்கை பால் வீச, மொத்த கூட்டமும் க்ளீன் போல்டு!

''இரு... இரு... உன்னை இன்னிக்கு ஒரு கை பார்க்காம விடுறதில்லே!'' எனச் சபதம் எடுத்து ஹசீனாவை மொத்தக் கும்பலும் துரத்த, நாமும் அப்படியே அப்பீட்!

- யா.நபீசா, படங்கள்: பா.கந்தகுமார்