Published:Updated:

தாவணிப் பெண்ணே சுகம்தானா?

தாவணிப் பெண்ணே சுகம்தானா?

 ##~##
தா
வணிக் கனவுகள் இருக்கட்டும். இப்போதெல்லாம் தாவணியே கனவாகிவிட்டது. மிடி, மேக்ஸி, பாட்டியாலா, ஜீன்ஸ், சுடிதார் என்று பெண்கள் வேறு உடைகளுக்கு நகர்ந்துவிட்டார்கள். அதனால், ஆச்சர்யமாகத்தான் இருந்தது தாவணி கட்டிய வேலூர் தீபாவளிகளைப் பார்த்தபோது!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''என்னம்மா... பக்கத்துத் தெருவுல அம்மனுக்குக் கூழ் காய்ச்சி ஊத்துறாங்களா? தாவணியோட கூட்டம் கூட்டமா ஆரவாரமா வர்றீங்க?'' என்று கேட்டால், 'ஏன் திருவிழான்னாதான், தாவணி போடணுமா?'' என்று சாமியாடிவிட்டனர்.

''எவ்வளவோ வசதியான உடைகள் வந்திருக்கலாம். ஆனா, தாவணிக்குன்னு ஒரு தனி அழகு இருக்கு. ஒரு பொண்ணு சும்மா தாவணி கட்டி, தலையில பூ வெச்சாலே அவளைப் பேரழகியாக் காட்டும் தாவணி!'' என்றார் ஆர்த்தி.

தாவணிப் பெண்ணே சுகம்தானா?
தாவணிப் பெண்ணே சுகம்தானா?

''ஆங்... சுமார் சுசி, சூப்பர் சுசி ஆயிடுவானு சொல்றே!'' என்ற தாமரைச்செல்வியின் குரலில் நக்கல் நடனம் ஆடியது.  

''வெள்ளிக் கிழமை அதிகாலையில் குளிச்சுட்டு, ஈரத் தலைமுடியோடு தாவணி கட்டிட்டு தெருவில் நடந்து போகும்போது நமக்கே நம்மை அறியாமல் ஒரு பெருமிதம் வரும். தலையில ஒரே ஒரு ரோஜாப் பூதான் இருக்கும். ஆனா, ஒரு கிரீடமே இருக்கிற மாதிரி நெனைப்பு வந்துடும்!'' என்கிறார் சபீதா. ''அதாவது, இளவரசி அப்படிப் போனாத்தான், சுயம்வரம் வொர்க்-அவுட் ஆகும்னு சொல்லு'' என்று மறுபடியும் கலாய்த்தார் தாமரைச்செல்வி.

''பூனைக்கு யார் மணி கட்டுறதுங்கிற அரதப்பழசான ஆராய்ச்சியை விட்டுட்டு, மணியை நாமதான் கட்டணும், தாவணியும் நாமதான் கட்டணும்!'' என்று சீரியஸாக லெக்சர் அடித்தார் சபீதா.

''இங்கே பாருடி ரைமிங்கை, அட... ஒரு கவிதையே கவிதை சொல்லுதேனு ஆச்சர்யக்குறி போட்டுச் சொல்ல ஆசைதான். ஆனா, கவிதை... பாவம்!'' என்று இப்போது கலாய்த்தவரோ ஆர்த்தி.

''என்னதான் மாடர்னா சிட்டி காலேஜ் பொண்ணுங்க டிரெஸ் பண்ணினாலும் வாரத்துக்கு ஒரு தடவையோ, மாசத்துக்கு ஒரு தடவையோ அவங்களும் ஒரு குரூப்பா தாவணி, சேலைன்னு கலாசார காவலாளி வேஷம் போடத்தான் செய்யுறாங்க!'' என்று சமாதானம் சொன்னார் திவ்யா.

''ஆனா, ஒரு முக்கியமான விஷயம். பெண்கள் இந்த டிரெஸ்ஸைத்தான் போடணும்னு இப்போ யாரும் தீர்மானிக்க முடியாது. தாவணியோ, சுடிதாரோ, ஜீன்ஸோ... எது வசதி, எது அழகுங்கிறதும் அவங்கவங்கதான் முடிவு பண்ணணும். 'தாவணிதான் தமிழ் கலாசாரம்’னு ஆண்கள் அட்வைஸ்  பண்றதை நிறுத்தணும். ஏன்னா, அவங்க கல்யாணத்தன்னிக்கி பெல்ட் போட்டு வேட்டி கட்டுறதோட சரி!'' என்று ஒரு போடு போட்டார் கீதா.

அதானே!

- பு.கமலினி, படம்: ச.வெங்கடேசன்