Published:Updated:

அறிவிழி

அண்டன் பிரகாஷ்

அறிவிழி

அண்டன் பிரகாஷ்

Published:Updated:
##~##

லகமயமாகிவிட்ட நமது சமூகத்தில், தாய்மொழியுடன் ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாக நன்றாகத் தெரிந்துகொள்வது மிக முக்கியம் என்பது, எனது உறுதியான எண்ணம். ஆனால், இந்தியாவில் ஆங்கிலேயர்களிடமிருந்து நேரடியாக ஆங்கிலம் கற்றுக்கொண்டவர்கள் ஆசிரியர்களாகி கற்றுக் கொடுத்த தரம், அடுத்த தலைமுறை ஆசிரியர்களிடம் இல்லை என்ற குறை, பொதுவாகவே சொல்லப்படுவது உண்டு. அவ்வளவு ஏன், ஆங்கிலத்தை முதன்மொழியாகக் கொண்டிருக்கும் அமெரிக்கா போன்ற நாடுகளிலேயே இலக்கணத்தை முறையாகக் கற்பிக்க மெனெக்கெட வேண்டியிருப்பதை பார்க்க முடிகிறது. இந்த நிலையில், இணையத்தில் ஆங்கிலத்தை எளிமையாகக் கற்றுக்கொள்ள உதவும் சில நடைமுறைகள் வைரலாகி வருகின்றன. அவற்றில் சில இங்கே...  

• ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த செபாஸ்டியன், பீட்டர் இருவரும் தாங்கள் தயாரித்த, 'செயற்கை நுண்ணறிவு - ஓர் அறிமுகம்’ என்ற பாடத்தை இலவசமாக இணையத்தில் பகிர்ந்துகொள்ள, சில வாரங்களிலேயே 190 நாடுகளில் இருந்து ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பதிவிறக்கம் செய்து படிக்க, 'உடாசிட்டி’ தளம் இரண்டு வருடங்களுக்கு முன்பு பிறந்தது. இன்று, அடிப்படை இயற்பியல், வேதியியலில் இருந்து முதிர்நிலை ரோபாட்டிக்ஸ் வரை பல்வேறு பிரிவுகளில் பாடத்திட்டங்கள் உடாசிட்டியில் இருக்கின்றன. உண்மையான திறந்தவெளி பல்கலைக்கழகமாக இருக்கும் உடாசிட்டியைப் பயன்படுத்துவது முழுக்க இலவசம். மாணவர் களை இணையம் மூலம் படிக்க வைத்து, அவர் களிடமிருந்து பெற்றுக்கொள்ளும் தகவல்கள் மூலம் வேலைவாய்ப்புச் செய்திகள் போன்றவற்றை வெளியிட்டு எதிர்காலத்தில் லாபம் சம்பாதிக்கலாம் என்பதால், முதலீட்டாளர்கள், வரிசையில் நின்று பணத்தைக் கொடுக்கிறார்கள். உடாசிட்டியின் உரலி  www.udacity.com

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

•  'கல்வி கற்பித்தல்’ என்பதை ஒழுங்குபடுத்த உதவும் வகையில் தயாரிக்கப்பட்ட 'Moodle’ என்ற மென்பொருள், உலகம் முழுவதும் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களில் பயன்படுத்தப்படுகிறது. இணைய தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்த மென்பொருள், இலவசமாக Open Source லைசன்ஸ் அமைப்பின் கீழ் வழங்கப்படுகிறது. நர்ஸரி பள்ளிகளில் இருந்து, கல்லூரிகள் வரை பயன்படுத்திக்கொள்ளும் இந்த மென்பொருளை ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஆசிரியர்கள் பயன்படுத்துகிறார்கள். மேல் விவரங்களுக்கு... http://en.wikipedia.org/wiki/Moodle

அறிவிழி

ப்பிள் ரசிக மகாஜனம் பல மாதங்களாகக் காத்திருந்த புதிய அறிவிப்பு வந்துகொண்டிருக்கும் வேளையில், இந்தப் பத்தியை எழுதுகிறேன். யூகிக்கப்பட்டபடியே இரண்டுவிதமான புதிய ஐபோன்களை வெளியிட்டிருக்கிறது ஆப்பிள். '5c’ என பெயரிடப்பட்டிருக்கும் ஐபோன், விலை பற்றிய அக்கறைகொள்ளும் இந்தியா போன்ற சந்தைகளுக்கானது என்றுதான் நினைத்தேன். ஆனால், ஜிகுஜிகு நிறங்களில் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த ஐபோனில் 'விலை 550 டாலர்கள்’ என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால், மேற்கண்ட சந்தைகளில் ஆப்பிள் வலுவாக தன்னை நிறுவிக்கொள்வது கடினம். சாம்ஸங் நிறுவனத்துக்கு தற்காலிக நிம்மதியை இந்தச் செய்தி கண்டிப்பாகக் கொடுத்திருக்கும். '5S’ என்று பெயரிடப்பட்டிருக்கும் மற்றொரு ஐபோனில், 'A7’ என்ற நுண்செயலியோடு 'M7’ எனப்படும் இயக்கங்களைக் கண்டறியும் நுண்செயலியும் இணைக்கப்பட்டுள்ளது. ஒரு நாளில் எவ்வளவு பரபரப்பாக இருக்கிறீர்கள் என்பதைக் கண்டறியும் Jaw-bone UP, Fitbit போன்ற சாதனங்கள் இந்தப் புதிய அறிவிப்பினால் பாதிக்கப்படும். பல்வேறு வகையான அலைமென்பொருள் ஐடியாக்கள் இதன்மேல் கட்டப்படும் என்பதிலும் சந்தேகமில்லை. இதெல்லாம் மதிக்கத்தக்க மேம்பாடுகளாக இருந்தாலும், புதுமையான தொழில்நுட்பம் எதையும் ஆப்பிள் வெளியிடவில்லை என்பதால், ஆப்பிளின் பங்கு விலை, புதிய போன்களுக்கான அறிவிப்பு நிகழ்வு முடிந்ததுமே சரிய ஆரம்பித்தது. நிகழ்ச்சி முடிந்த சில நிமிடங்களில் இந்த வரியை எழுதுகையில், ஆப்பிளின் பங்கு விலை 3 சதவிகித வீழ்ச்சி அடைந்திருப்பதை ஆப்பிள் மீது முதலீட்டாளர்களுக்கு இருக்கும் அதிருப்தியாகப் புரிந்துகொள்ளலாம். அவர்கள் ஸ்டீவ் ஜாப்ஸை மிஸ் செய்கிறார்கள்!

- விழிப்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism