Published:Updated:

காப்பீட்டு மசோதாவுக்கு பதிலாக அவசர சட்டம்: மத்திய அரசு ஒப்புதல்!

காப்பீட்டு மசோதாவுக்கு பதிலாக அவசர சட்டம்:  மத்திய அரசு ஒப்புதல்!
காப்பீட்டு மசோதாவுக்கு பதிலாக அவசர சட்டம்: மத்திய அரசு ஒப்புதல்!
காப்பீட்டு மசோதாவுக்கு பதிலாக அவசர சட்டம்:  மத்திய அரசு ஒப்புதல்!

புதுடெல்லி: காப்பீட்டுத் துறையில் நேரடி அன்னிய முதலீட்டை 49 சதவீதமாக உயர்த்தும் அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மத்தியில் அமைந்துள்ள பா.ஜனதா கூட்டணி அரசு, காப்பீட்டு துறையில் சீர்திருத்தங்கள் கொண்டு வர விரும்புகிறது. குறிப்பாக, இந்த துறையில் நேரடி அன்னிய முதலீட்டை தற்போதைய 26 சதவீதத்தில் இருந்து 49 சதவீதமாக உயர்த்த விரும்புகிறது.

இதற்காக ‘காப்பீட்டு சட்டங்கள் திருத்த மசோதா–2008’ என்ற பெயரில் மசோதா தயாரிக்கப்பட்டு, அதற்கு மத்திய அமைச்சரவையும், மாநிலங்களவை தேர்வு குழுவும் ஒப்புதல் வழங்கின. இந்த மசோதாவுக்கு எதிராக மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், இடதுசாரி கட்சிகளும் போர்க்கொடி உயர்த்தின.

மேலும், மதமாற்ற விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் நாடாளுமன்றத்தின் இரு சபைகளும் தொடர்ந்து அமளியால் முடக்கப்பட்டதால் இந்த மசோதாவை நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது. இரு அவைகளும் மறுதேதி குறிப்பிடப்படாமல் நேற்று ஒத்திவைக்கப்பட்டு விட்டன.

இந்நிலையில் காப்பீட்டு துறையில் நேரடி அன்னிய முதலீட்டை தற்போதைய 26 சதவீதத்தில் இருந்து 49 சதவீதமாக உயர்த்தும் அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது.