Published:Updated:

சதுர பூமி சாத்தியமா? - ஹாய் மதன்-கேள்வி பதில்

சதுர பூமி சாத்தியமா? - ஹாய் மதன்-கேள்வி பதில்


ஹாய் மதன் கேள்வி பதில்
சதுர பூமி சாத்தியமா? - ஹாய் மதன்-கேள்வி பதில்
சதுர பூமி சாத்தியமா? - ஹாய் மதன்-கேள்வி பதில்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சதுர பூமி சாத்தியமா?
சதுர பூமி சாத்தியமா? - ஹாய் மதன்-கேள்வி பதில்

எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

சதுர பூமி சாத்தியமா? - ஹாய் மதன்-கேள்வி பதில்

பிரபஞ்சத்தில் எவ்வளவோ மாற்றங்கள் ஏற்படுகின்றன. வட்டமான பூமி... சதுரமாகவோ, செவ்வகமாகவோ மாற வாய்ப்பு உண்டா?

பூமியை அப்படியே எடுத்து ஒரு ஆப்பிள் மாதிரி கையில் வைத்துக்கொள்ளக்கூடிய அளவுக்கு விசுவரூபம் எடுக்கும் சிற்பி, கையில் உளியோடு வந்தால் - முடியும்! தானாக நீங்கள் சொல்வதுபோல மாறும் சான்ஸ் இல்லை. உருண்டை என்பது இயற்கையின் அடிப்படை நியதி. (என்னைப்போல) கணக்கில் சைபர் வாங்கும் மாணவர்கள் நியாயமாக பெருமைப்பட்டுக்கொள்ள வேண்டும்!

'கண் இமைக்கும் நேரத்தில் வேலையை முடிச்சிடுவேன்' என்கிறார்களே... அந்த நேரத்தில் எந்த வேலையை முடிக்க முடியும்?

அதை 'ஒரு விநாடி' என்று எடுத்துக்கொள்வோம். அந்த நேரத்தில் ஒளி அலையால் 1 லட்சத்து 86 ஆயிரம் மைல் தூரம் பயணிக்க முடியும். அது தவிர, கண் இமைக்கும் நேரத்தில்... கண்ணடிக்க முடியும்! அதனுடைய விளைவுகள் 'Butterfly Effect' ஆக மாறி விபரீதமாகவோ, நல்லபடியாகவோ கொண்டுவிடலாம்' (கண் இமைக்கும் நேரத்தில் உடலுறவை முடித்துக்கொள்ளும் ஆண்களும் உண்டு!).

சி.பி.நாராயணசாமி, செக்கானூர்.

Juggermaut படை இந்தியாவிலும் உள்ளதா? அவர்களின் முக்கியப் பணிகள் என்ன?

அப்படி எல்லாம் படை எங்குமே கிடை யாது! 'ஜகர்நாட்' சம்ஸ்கிருதத்தில் இருந்து ஆங்கிலத்துக்குப் போன ஒரு வார்த்தை. அதாவது - ஜகன்நாத்! ஒரிஸ்ஸாவில், பூரி ஆலயத்தில் தரிசனம் தரும் மகாவிஷ்ணுவின் பெயர் ஜகன் நாதர். அங்கே ஆண்டுதோறும் தேர் உற்சவம் நடைபெறும். அதற்காகவே தயாரிக்கப்படும் பிரமாண்டமான தேர்! சொர்க்கத்துக்குப் போவதற்காக (வைகுண்ட பதவி!) அந்தத் தேரின் மிகப் பெரிய சக்கரங்கள் நகரும்போது, அதன் அடியில் பக்தர்கள் விழுந்து உயிர்த் தியாகம் செய்வார்கள் என்கிற (தப்பான!) தகவல், மேலை நாட்டவர்களிடம் பரவியது உண்டு! உடனே,ஆங்கிலத்தில் 'எந்தச் சக்தியாலும் தடுக்க முடியாத, எல்லாவற்றையும் நசுக்கிக்கொண்டு முன்னேறிச் செல்லும் பிரமாண்டமான படை'யை 'ஜகர்நாட்' என்று அழைக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு சமயத்தில், ஹிட்லரின் ராணுவம்கூட அப்படி அழைக்கப்பட்டது. எல்லா ஆங்கில அகராதிகளி லும் இந்த வார்த்தை உண்டு!

லீலா இராம், தக்கலை.

எதில் சமதர்மம் வாழ்கிறது?

அகண்ட வெளியில் கோடானு கோடி 'காலக்ஸி'களுக்கு நடுவே உள்ள வெற்றிடத்தில் மட்டுமே சமதர்மம் வாழ்கிறது. வேறு எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை!

விஜயலட்சுமி, பொழிச்சலூர்.

அரியணைக்கும் ஒரு சாதாரண நாற்காலிக்கும் என்ன வேறுபாடு?

அது யாருடையது என்பதுதான் வேறுபாடு. அரியணையால் பல நாற்காலிகளை வாங்கித் தர முடியும். நாற்காலியால் அரியணையை தொலைவில் இருந்துதான் பார்க்க முடியும்!

வே.முருகேசன், சென்னை-88.

நாட்டில் விலை ஏறாத பொருள் என்று பார்க்கும்போது 50 பைசா தபால் கார்டுதான் என நான் நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

அதனால்தான் உங்களுக்கு அதிக செலவு வைக்கக் கூடாது என்று, கார்டுகளில் கேள்வி எழுதி அனுப்பச் சொல்கிறோம். எனக்கு வரும் 80 சதவிகிதக் கேள்விகள் கிராமங்களில் இருந்துதான் வருகின்றன என்பது, தெரியுமா உங்களுக்கு? அங்கே இருந்துகொண்டு விஞ்ஞானம், மனோ தத்துவம், வரலாறு பற்றி எல்லாம் கேள்விகள் எழுதி அனுப்புகிறார்கள். இதுதான் மகிழ்ச்சி. ஆனால், தபால் கார்டு ஐந்து பைசாவுக்கு விற்ற காலமும் இருந்தது என்பதைக் குறிப்பிட வேண்டும்!

தேவசேனாதிபதி, வேலூர்.

பணம். இதுபற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

இல்லாதவர்கள் பணத்தைத் தேடுகிறார்கள். இருப்பவர்கள் பணத்தால் தர முடியாத நிம்மதியைத் தேடுகிறார்கள். பெரிய வேறுபாடு இதுதான்!

அல்லிராஜ், கோயம்புத்தூர்-15.

தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் 'கௌரவக் கொலைகள்' பற்றி உங்களின் கருத்து?

சதுர பூமி சாத்தியமா? - ஹாய் மதன்-கேள்வி பதில்

கௌரவத்துக்காகக் கொலை செய்துவிட்டு கொலைகாரர்களாவது கௌரவமா? கொடுமையாக இருக்கிறது! 'கௌரவ' என்பதை நாம் தப்பாகப் புரிந்துகொள்ளக் கூடாது. உண்மையில், கிருஷ்ண பரமாத்மாவையே கொல்வதற்காகப் பள்ளத்தின் மீது சிம்மாசனம் போட்ட கொடியவர்களை மகா பாரதக் 'கௌரவர்கள்' என்கிற அர்த்தத்தில் இதையும் நாம் எடுத்துக்கொள்வோம்!

கல்பனா, கோயம்புத்தூர்-15.

ஒரு மனிதனும், யானையும் சாகக் கிடக்கிறார்கள். ஒருவரை மட்டுமே காப்பாற்றலாம் என்றால் யாரைக் காப்பாற்றுவீர்கள்? (இரண்டுமே உயிர்தானே!)

மனிதனைத்தான் காப்பாற்றுவேன். பிறகு, அவனிடம் 'அந்த யானையைக் கொஞ்சம் காப்பாற்றுங்களேன்' என்பேன்!

சதுர பூமி சாத்தியமா? - ஹாய் மதன்-கேள்வி பதில்
சதுர பூமி சாத்தியமா? - ஹாய் மதன்-கேள்வி பதில்