Published:Updated:

டீன் கொஸ்டீன்: காமத்தைக் கட்டுப்படுத்தலாமா?

டீன் கொஸ்டீன்: காமத்தைக் கட்டுப்படுத்தலாமா?

டீன் கொஸ்டீன்: காமத்தைக் கட்டுப்படுத்தலாமா?
டீன் கொஸ்டீன்: காமத்தைக் கட்டுப்படுத்தலாமா?
டீன் கொஸ்டீன்: காமத்தைக் கட்டுப்படுத்தலாமா?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
காமத்தைக் கட்டுப்படுத்தலாமா?
டீன் கொஸ்டீன்: காமத்தைக் கட்டுப்படுத்தலாமா?

ரேவதிப்ரியன், ஈரோடு.

"என் குடும்பத்தில் என் அப்பாவின் பெயரில் கேஸ் இணைப்பு உள்ளது. நான் திருமணம் முடித்து தனிக் குடித்தனம் சென்றுவிட்டால், என் தந்தையின் பெயரில் இருக்கும் கேஸ் இணைப்பை என் பெயருக்கு மாற்றிக்கொள்ள முடியுமா? அப்படி மாற்ற டீலர்கள் அனுமதிப்பது இல்லை என்கிறான் என் நண்பன். தகுந்த விளக்கம் கூறவும்?"

சாமிவேலு, தலைவர், தமிழ்நாடு பாரத் கேஸ் விநியோகத்தினர் சங்கம்.

டீன் கொஸ்டீன்: காமத்தைக் கட்டுப்படுத்தலாமா?

"உங்களுக்கு கேஸ் இணைப்பு வழங்கும் நிறுவனத்தின் விநியோகஸ்தரிடம், 'ஏன், உங்கள் இணைப்பை மாற்றம் செய்ய விரும்புகிறீர்கள்?' என்பதற்கான உரிய காரணத்தை விளக்கி, விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்திசெய்து அளிக்க வேண்டும். தங்கள் பிள்ளைகள் பெயருக்கு மாற்றம் செய்ய விரும்பும் பெற்றோருக்கு, 'இன்னாரின் பெயரில் மாற்றிக்கொடுக்க விரும்புகிறேன்' என்று தடை இல்லா வாக்குமூலத்தைக் கடிதமாகத் தர வேண்டும். கேஸ் இணைப்புப் பெறும்போது, செலுத்திய டெபாசிட் தொகை மற்றும் இப்போது நடைமுறையில் இருக்கும் டெபாசிட் தொகை ஆகியவற்றுக்கு இடையிலான வித்தியாசத்தையும் செலுத்த வேண்டும்!"

எஸ்.கணேச மூர்த்தி, மதுரை-7.

"எனது தந்தை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்தார். 2007-ம் வருடம் பணியில் இருக்கும்போதே எனது தந்தை காலமானார். கருணை அடிப்படையில், வாரிசுகளுக்கு வேலை வழங்கும் நடைமுறைகளுக்குத் தேவையான விண்ணப்பங்கள் அனைத்தையும் சமர்ப்பித்துவிட்டேன். ஆனால், இன்னமும் எனக்குப் பணி வழங்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் விசாரித்தாலும், உரிய விளக்கங்கள் தருவது இல்லை. நான் மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும்?"

பக்கிரிசாமி, பொது மேலாளர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்.

"அரசுப் பணியாளர் ஒருவர் பணிக் காலத்தில் இறந்துபோனால், அவர் இறந்த மூன்று வருடங்களுக்குள் அவருடைய வாரிசுகள் பணி வேண்டி விண்ணப்பித்தால், கருணை அடிப்படையில் அவ் விண்ணப்பத்தைப் பரிசீலிப்போம். இதற்கு துறை வாரியான நடைமுறைகள் ஏகமாக இருப்பதால், கொஞ்சம் கால தாமதம் ஆகலாம். உங்கள் தந்தை நிரந்தரப் பணியாளராக நியமனம் செய்யப்பட்டு இருக்க வேண்டும். அவர் இறந்த தினத்தில் இருந்துதான் உங்களுக்கான சீனியாரிட்டி கணக்கிடப்படும். உங்கள் தகுதிக்கு ஏற்பக் காலி இடங்கள் இருந்தால் மட்டுமே வேலைக்கு எடுத்துக்கொள்வோம். சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் உங்களுக்கு உரிய பதில் கிடைக்கவில்லை என்றால், 'பொதுமேலாளர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், எண்.31, காமராஜர் சாலை, சேப்பாக்கம், சென்னை-5' என்ற முகவரிக்கு ஒரு கடிதம் எழுதுங்கள்!"

மா.ஹரிஹரன், சென்னை-4.

"1999 வருடம் நான் பழநியில் வசித்து வந்தபோது, திண்டுக்கல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நான் பதிவு செய்திருந்தேன். இந்த வருடம் வரை புதுப்பித்துவிட்டேன். தற்போது நான் சென்னையில் வசிக்கிறேன். நான் தபால் மூலமாகவோ அல்லது இணையம் மூலமாகவோ அதே சீனியாரிட்டியுடன் சென்னை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் எனது பதிவு எண்ணை மாற்றிக்கொள்ள முடியுமா?"

துணை இயக்குநரக அதிகாரி, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, சென்னை.

"தற்போது வசிக்கும் தாலுக்காவின் தாசில்தார் அலுவலகத்தில் 'குடிப்பெயர்ச்சி சான்றிதழ்' மற்றும் 'குடியிருப்புச் சான்றிதழ்' ஆகியவை பெற வேண்டும். இவற்றின் நகல்களோடு குடும்ப அட்டையின் இரண்டு நகல்களையும், தங்கள் கல்வி தொடர்பான ஆவணங்களின் இரண்டு நகல்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும். அதில் அத்தாட்சி (கெசடெட் அட்டஸ்டேஷன்) பெற வேண்டும். பின்பு, அவற்றை நீங்கள் முன்பு பதிவு செய்திருந்த வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும். அங்கு அந்தச் சான்றிதழ்களின் மெய்த்தன்மையைப் பரிசீலித்த பிறகு, நீங்கள் வசிக்கும் மாவட்டத்தின் வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு அவற்றை அனுப்பிவைப்பார்கள். அதன் பிறகு, உங்கள் பதிவு ஏற்றுக்கொள்ளப்படும். இணையம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்!"

பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகர்.

டீன் கொஸ்டீன்: காமத்தைக் கட்டுப்படுத்தலாமா?

"நான் 21 வயது இளைஞன். சில நாட்களாக என் மனம் அதீதமான இச்சைக்கு ஆளாகிறது. நண்பர்களிடம் ஆலோசித்தால், 'நீலப் படம் பார்' என்கிறார்கள். ஆனால், அப்படிச் செய்தால், அந்தப் பழக்கத்துக்கு அடிமையாகிவிடுவேனோ என்று பயமாக இருக்கிறது. எவ்வளவு கட்டுப்பாடாக இருந்தாலும், கனவுகளிலும் இதே நினைவுகள்தான் நிழலாடுகின்றன. இதில் இருந்து நான் எப்படி மீள்வது?"

பிரபாகரன், மனநல நிபுணர்.

டீன் கொஸ்டீன்: காமத்தைக் கட்டுப்படுத்தலாமா?

"இது போன்ற எண்ணங்கள், உங்கள் ஆரோக்கியமான மனநிலையைப் பிரதிபலிப்பதாகவே உள்ளன. இந்த வயதில் இது மாதிரியான எண்ணங்கள் மனதில் தோன்றாமல் இருந்தால்தான் தவறு. பாலியல் தொழிலாளிகளை நாடிச் செல்வது, பிற முறையற்ற உறவுகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க, நீலப் படங்கள் மூலம் தற்காலிக வடிகால் தேடிக்கொள்வதுகூட நல்லதுதான். அதற்காக, 'ஐயோ, நீலப் படம் பார்த்துவிட்டேனே' என்று குற்ற உணர்ச்சி கொள்ளாதீர்கள். ஆனால், அதற்காக எப்போதும் அதே எண்ணத்துடன் வளைய வராமல் நல்ல புத்தகங்கள், விளையாட்டு, சுவாரஸ்யமான பொழுதுபோக்கு என்று உங்கள் நேரத்தை மதிப்பு மிக்கதாக மாற்றுங்கள். முடிந்த வரை தனிமையைத் தவிருங்கள்!"

பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகர்.

"எனது மகன்கள் இருவரும் சி.பி.எஸ்.இ. பள்ளியில் படித்து வருகின்றனர். இந்த ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்புக்கு அரசின் பொதுத் தேர்வு கிடையாது என்பதால், அந்தப் பள்ளியில் ஆசிரியர்கள் சரியாகப் பாடம் நடத்துவது இல்லை. ஒரு வகுப்பில் ஆசிரியர்களின் பிள்ளைகள் மட்டும் இருக்கிறார்கள். அவர்களுக்கு மட்டும் சிறப்பு வகுப்புகள் நடைபெறுகிறது. இது பற்றி பெற்றோர்கள் பலர் தலைமை ஆசிரியரிடம் முறையிட்டும் பலன் இல்லை. மேற்கொண்டு யாரிடம் புகார் அளிப்பது?"

நாகராஜு, சி.பி.எஸ்.இ. மண்டல அலுவலர்.

"இது நிச்சயம் வேதனைக்கு உரிய ஒன்றுதான். அந்தப் பள்ளியின் பெற்றோர் |ஆசிரியர் கழகத்தினரிடம் தகவல் தெரிவித்தால், அவர்கள் நிச்சயம் தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள். அங்கு நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், மண்டல அலுவலர்களிடம் நேரடியாகச் சென்று முறையிடலாம். அல்லது பள்ளியின் பெயரைக் குறிப்பிட்டு மண்டல அலுவலகத்துக்கு கடிதம் எழுதலாம். தமிழகத்துக்கான மண்டல அலுவலகம் Central Board of Secondary Education, Plot No. 1630 A, 'J' Block, 16th Main Road, Anna Nagar West, Chennai-40 என்ற முகவரியில் இயங்குகிறது!"

டீன் கொஸ்டீன்: காமத்தைக் கட்டுப்படுத்தலாமா?
டீன் கொஸ்டீன்: காமத்தைக் கட்டுப்படுத்தலாமா?
டீன் கொஸ்டீன்: காமத்தைக் கட்டுப்படுத்தலாமா?