Published:Updated:

பூமிக்கு வெளியே ஓர் இடம்! - ஹாய் மதன்-கேள்வி பதில்

பூமிக்கு வெளியே ஓர் இடம்! - ஹாய் மதன்-கேள்வி பதில்


ஹாய் மதன் கேள்வி-பதில்
பூமிக்கு வெளியே ஓர் இடம்! - ஹாய் மதன்-கேள்வி பதில்
பூமிக்கு வெளியே ஓர் இடம்! - ஹாய் மதன்-கேள்வி பதில்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பூமிக்கு வெளியே ஓர் இடம்! - ஹாய் மதன்-கேள்வி பதில்
பூமிக்கு வெளியே ஓர் இடம்! - ஹாய் மதன்-கேள்வி பதில்

ஜி.மாரியப்பன், சின்னமனூர்.

நாத்திகர்கள் எந்த மதத்தில், எந்த நாட்டில் அதிகம் உள்ளனர்?

நாத்திகர்கள் எப்படி ஒரு மதத்தில் இருக்க முடியும்? மதத்தை எல்லாம் புறக்கணித்து வெளியேறியவர்கள்தான் நாத்திகர்கள். எந்த மதமும் நாத்திகத்தை அனுமதிப்பதும் கிடையாது. ஆனால், இந்து மதத்தில் மட்டும் நாத்திகமும் ஒரு பிரிவாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. நாத்திக ரிஷிகள் இருந்திருக்கிறார்கள் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. ஓர் இந்து, தனிப்பட்ட வாழ்க்கையில் கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். இந்து மதம் பதிலுக்கு... அவரைக் கண்டுகொள்வது இல்லை!

கண்.சிவகுமார், திருமருகல்.

ரகசியம் என்பது என்ன நண்பா?

உங்களைப்பற்றி உங்களுக்கு மட்டுமே தெரிந்த ஒரு விஷயம்தான் நிஜ ரகசியம்! அது வெளியே ர'கசிய'க் கூடாத ஒன்றாக இருக்க வேண்டும். 'பின் எதற்காக எல்லோருக்கும் தெரிகிற ஒருவருக்கு 'ரகசியா' என்று பெயர் வைக்கலாம்?' என்று அடுத்த கேள்வி கேட்கக் கூடாது!

ச.ஆ.கேசவன், இனாம்மணியாச்சி.

தாயின் புத்திமதிக்கும் தந்தையின் அறிவுரைக் கும் வேறுபாடு என்ன?

முதலாவதில் இருப்பது சென்டிமென்ட். இரண்டாவதில் - அனுபவம்!

ராமாயண (புராண) அரக்கர்கள் எல்லாம் இப்போது எங்கே இருக்கிறார்கள்?

அநேகமாக 'ஒயிட் அண்ட் ஒயிட்'டில்!

பூமிக்கு வெளியே ஓர் இடம்! - ஹாய் மதன்-கேள்வி பதில்

என்.அத்வித், சென்னை-73.

கல்வி, சாதியை ஒழிக்கும் என்று உண்மையிலேயே நம்புகிறீர்களா?

ஒழிக்காது! ஆனால், சாதியைப் புரிந்துகொள்ளவைக்கும். எதையுமே தெளி வாகப் புரிந்துகொண்டால், பல பிரச்னைகள் ஏற்படாது என்பது என் நம்பிக்கை!

எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

சத்தியம் கடைசியில் ஜெயிக்கும் என்கிறார்கள். கடைசி என்பது எப்போது?

'மனித ஆயுளின் கடைசி' என்று அர்த்தம் அல்ல! மனிதன் இறந்த பிறகும், பல ஆண்டுகள் கழித்தும் சத்தியம் ஜெயிக்கும். இந்தியா சுதந்திரம் அடைந்ததை காந்திஜி பார்த்தார். அவருக்கு முன்பு சுதந்திரத்துக்காகப் போராடிய எத்தனையோ பேர் அதைப் பார்க்காமல் இறந்தார்களே!

தாமஸ் மனோகரன், புதுச்சேரி-4.

பூமிக்கு வெளியே ஓர் இடம்! - ஹாய் மதன்-கேள்வி பதில்

சத்தம் இல்லாத முத்தம் எப்படி இருக்கும்?

சத்தம் இல்லாமல் முத்தம் இல்லை. மனிதக் காதில் விழாத முத்தம் உண்டு! முத்தம் நிகழும் இடத்துக்கு அருகில் தேவையான ஆம்ப்ளிஃபையர் சவுண்ட் சிஸ்டம் ஏற்படுத்தித் தந்தால்... காதை செவிடாக ஆக்கும் அளவுக்கு அட்டகாசமாக முத்தத்தின் சத்தம் கேட்கும்!

லீலா இராம், தக்கலை.

தென் தமிழகத்தின் கடற்பரப்புகள் கடலுக்குள் மூழ்கும் அபாயம் உள்ளதாக விஞ்ஞானிகளிடம் இருந்து எச்சரிக்கை மணி புறப்பட்டு இருக்கிறதே?

பூமிக்கு வெளியே ஓர் இடம்! - ஹாய் மதன்-கேள்வி பதில்

தமிழகம் என்றில்லை. உலகில் வெப்பம் சில டிகிரிகள் உயர்ந்தால், ஆர்க்டிக், அன்டார்டிகா போன்ற 'ஐஸ் கண்டங்கள்' உருக ஆரம்பிக்கும். அதனால், கடல் மட்டம் நூற்றுக்கணக்கான அடிகள் உயரும். உலகம் முழுவதும் கடற்கரையோர நாடு கள் நீரில் மூழ்கும். இது 17 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது. அந்தக் காலத்தில் இன்றைய மெரினா சாலையில் இருந்து கடல் சுமார் 700 மைல் கிழக்கே இருந்தது. அப்போது சூழ்ந்த பிரள யத்தைத்தான் உலகின் எல்லாப் புராணங்களும் குறிப்பிடுகின்றன. எதிர்காலத்தில் மீண்டும் இது நிகழ லாம் (பிரளயம் நம்பர்-2). அது தவிர, திடீர் சுனாமி பற்றிச் சொல்லத் தேவை இல்லை. சுனாமியில் ஒரு நல்ல(!) விஷயம் - மீண்டும் நீர் கடலுக்குள் பழையபடி திரும்பிவிடுவதே!

பூமிக்கு வெளியே ஓர் இடம்! - ஹாய் மதன்-கேள்வி பதில்

மயில்வீரன், திருவண்ணாமலை.

உலகத்தையே நிமிர்த்தக்கூடிய சரியான நெம்புகோல் உங்களுக்குக் கிடைத்தால்..?

முதலில், உருண்டையான எந்தப் பொருளையும் நிமிர்த்த முடியாது. இரண்டாவதாக, அப்படியே நெம்பு கோல் கிடைத்தால், இத்தாலியில்கி.மு 287-ல் பிறந்த விஞ்ஞானி ஆர்க்கி மிடீஸ் கேட்டதையே நானும் கையில் நெம்புகோலோடு கேட்பேன். அதாவது - 'சரி, இப்போது பூமிக்கு வெளியே நிற்பதற்கு ஓர் இடம் கொடுங்கள்!'

பூமிக்கு வெளியே ஓர் இடம்! - ஹாய் மதன்-கேள்வி பதில்
பூமிக்கு வெளியே ஓர் இடம்! - ஹாய் மதன்-கேள்வி பதில்