Published:Updated:

உயிர் மொழி!

உயிர் மொழி!


உயிர் மொழி
உயிர் மொழி!
உயிர் மொழி!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
உயிர் மொழி!
டாக்டர் ஷாலினி
உயிர் மொழி!

னிதப் பெண்கள் தமக்கு அதிக சுகம் தரும் ஆண்களை மட்டும் தேர்ந்தெடுக்க

ஆரம்பிக்க, ஆண்களுக்குள் எக்கச்சக்க போட்டி தலை தூக்கியது. 'அதிக சுகத்தைத் தர வல்லவன் நான்' என்பதை விளம்பரப்படுத்த வேண்டிய நிர்பந்தம் ஆண்களுக்கு ஏற்பட, அதற்கு உண்டான கருவியின் வளர்ச்சி விகிதத்தில் மாற்றம் ஏற்பட ஆரம்பித்தது.

நீளமான தந்தத்தைக்கொண்ட ஆண் யானையை மட்டுமே தேர்ந்தெடுத்து பெண் யானைகள் கூடும். இதனாலேயே ஆண் யானைகளுக்குள் தந்தத்தின் அளவைவைத்து ஒரு போட்டி நடைபெறுகிறது. அதேபோலத்தான் மயில். மிக நீளமான தோகைகொண்ட ஆண் மயிலோடுதான் பெண் மயில் சேர விரும்பும். இதனால் ஆண் மயில்களுக்குள் 'யாருக்கு நீண்ட தோகை?' என்பதில் போட்டி. இப்படி உலகின் எல்லா ஜீவராசிகளிலும் பெண்ணைக் கவர ஆண் சில பாகங்களையோ, திறமைகளையோ விளம்பரமாக வெளிப்படுத்துவதைப்

போலவே, மனித ஆண்களும் தங்கள் இனப்பெருக்க உறுப்பை ஒரு வீரிய விளம்பரமாக வெளிப்படுத்த ஆரம்பித்தார்கள்.

உயிர் மொழி!

இதனால், மனித ஆண் உறுப்பின் நீளம் அதிகரிக்க ஆரம்பித்தது. இன்றுள்ள வானர இனங்களிலேயே மனித ஆணின் உறுப்புதான் மிகவும் நீளமாக இருப்பதாகக் கணக்கிடப்பட்டு உள்ளது. இத்தனைக்கும் மனிதப் பெண்ணின் ஜனனக் குழாய் நீளம் என்னவோ எல்லோருக்கும் 10 செ.மீதான். இதனுள் சென்றடைய அதே 10 செ.மீ நீளம் உள்ள கருவி இருந்தாலே போதும். ஆனால், போட்டி என்று வந்துவிட்டால், வளர்ச்சி விகிதம் மாறித்தானே போகும்.

பெண்கள் இதை எல்லாம் சட்டை செய்கிறார்களோ, இல்லையோ... ஆனால், ஆண்கள் மத்தியில் யாரும் சொல்லித் தராமலேயே இந்த ஒப்பீடு ஆரம்ப காலம் துவங்கி இன்றுவரை நடந்துகொண்டேதான் இருக்கிறது. நீளத்தை நினைத்துக் கவலைப்படும் ஆண்கள் இன்றும் நிறையப் பேர் இருக்கிறார்கள். இதனால் தாழ்வு மனப்பான்மை வாட்டி, போலி வைத்தியர்களின் விளம்பரங்களில் சிக்கி, பணத்தையும் உடம்பையும் சீரழிப்பவர்கள் ஏராளமானோர்.

ஆடை இல்லாத அந்தக் காலத்தில், பெண்களும் அவர்களைவிட அதிக மும்முரமாக ஆண்களும் வெறும் பார்வையைவைத்தே எதிரில் இருக்கும் ஆணை மிகத் துல்லியமாக அளவிட முடிந்தது. அதனால், அதில் போலித்தனங்கள் இருந்திருக்க வாய்ப்பு இல்லை. ஆனால், ஆடை அணியும் கலாசார மாற்றம் ஏற்பட்ட உடனே, 'யாருக்குத் தெரியப்போகுது. பேராண்மை மிக்கவனாகத்தான் காட்டிக்கொள்வோமே!' என்ற போக்கு தலை தூக்க ஆரம்பித்தது. அவரவர் ஊரில் இவ்வடிவில் ஏதாவது வஸ்து தென்பட்டால், உடனே ஆண்கள் எல்லாம் அதைத் தேடிப் பிடித்து, எடுத்து வந்து இடுப்பில் சொருகிக்கொண்டார்கள். ஆரம்பத்தில் குச்சி, காய், கொம்பு, மரவுறி மாதிரியான phallic symbols-ஸை அணிய ஆரம்பித்த ஆண்கள், வேட்டையில் இன்னும் தேர்ச்சி பெற ஆரம்பித்ததும், பிற மிருகங்களின் பல், தந்தம், தோகை, நகம், உலர்ந்த உடல் பாகம் என்று பலவற்றையும் அணிய ஆரம்பித்தனர். உலோகம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு கத்தி, வாள், அரிவாள்... அப்புறம் துப்பாக்கி, ரைஃபில், பிஸ்டல் என்று இந்தச் சின்னங்களின் பட்டியல் மாறிக்கொண்டே இருந்தது.

உயிர் மொழி!

இந்தச் சின்னங்களை எல்லாம் கண்டு பெண்கள் உண்மையிலேயே மயங்கிப் போனார்களா என்பது கேள்விக்குறிதான். ஆனால், மிக வலிமையான சின்னங்களை அணிந்த ஆண்களைக் கண்டு பிற ஆண்கள் அடங்கிபோனது என்னவோ உண்மை. கலாசாரம் வளர வளர, இப்படிப் பகிரங்கமாக விளம்பரப்படுத்துவது அநாகரிகம் என்கிற கருத்து வலுப்பெற்றது. அதனால் நார்மலான ஆண்கள் இப்படி அப்பட்டமாக வெளிப்படுத்துவது இல்லை. ஆண்கள், மிக நாசூக்காகத் தங்கள் திறமைகளைக்கொண்டு தங்கள் பேராண்மையை வெளிப்படுத்த முயல்வதை மனித வரலாறு முழுக்கக் காணலாம். கற்களைச் செதுக்கும் ஆற்றலைப் பெற்றதுமே ஆண், மிகப் பெரிய ஆணின உறுப்பு வடிவங்களைச் செதுக்கிவைத்தான். இன்றும் இதுபோன்ற பல புராதன ஒபிலிஸ்க் சிற்பக் கற்களை எகிப்து, ரோமாபுரி, கிரேக்கம் மாதிரியான நாடுகளில் பார்க்கலாம்.

இதன் பிறகு, பெருமதங்கள் தோன்ற ஆரம்பித்தன. சமணத் துறவிகள், நிர்வாண கோலமாய் இருப்பதையே ஒரு மகத்தான ஆன்மிக முக்தி நிலை எனக் கருதினார்கள். அதனால், ஆணின் நிர்வாணம் மீண்டும் அவன் பேராற்றலைப் பறைசாற்றுவதாகக் கருதப்படலானது. கிட்டத்தட்ட 700 ஆண்டுகளுக்குப் பிறகு, உலகின் பல்வேறு மூலைகளில் கிறிஸ்துவப் பெருமதம் பரவ ஆரம்பித்தது. சமணம், நிர்வாணத்தை மேம்பட்ட ஒரு சாதனையாகக் கருதிய காலம்போய், ஆடை இல்லாத நிலையை 'மஹாபாவம்' என்று கருதும் மன நிலைக்கு மனிதர்கள் மாறி இருந்தார்கள். அதனால், கிறிஸ்துவ தேவாலயங்கள் நிர்வாணத்தைத் தடை செய்தன. ஆனாலும், மனித ஆணின் ஆரம்ப காலக் குணம் மாறவில்லை.

உயிர் மொழி!

அதற்குள் இந்தியாவிலும் சமய மாற்றம் ஏற்பட்டு இருந்தது. சமணம் தோற்று, சைவம் ஓங்க ஆரம்பித்தது. சமணத்தில் முழு ஆணின் நிர்வாணம் வணக்கத்துக்கு உரியதாகப் போற்றப்பட்டது. சைவத்திலோ இது இன்னும் நுணுக்கமாகி, ஆண் உடலில் மற்ற பாகங்களை நீக்கிவிட்டு, வெறும் அவனுடைய இனக் குறியை மட்டும் வழிபாட்டுக்கு உரியதாகக் கருதும் மனநிலை உருவானது. லிங்க வழிபாடு பிரபலமாகி அரசர்கள், மிகப் பெரிய அளவு ஆணினச் சின்ன லிங்கத்தை ஸ்தாபித்து, தங்கள் பேராண்மையை வெளிப்படுத்த முயன்றார்கள்.

இப்படி எல்லாம் ஆணினச் சின்னங்களை விஸ்தாரமாக விளம்பரப்படுத்தினால், மற்ற ஆண்கள் பயந்து போட்டியில் இருந்து விலகிக்கொள்வார்கள். பெண்கள் சுலபமாக மயங்கி மடியில் விழுவார்கள் என்று ஆண்கள் கணக்கிட... பெண்களோ இதற்கு ஒரு படி மேலே போய் யோசிக்க ஆரம்பித்தார்கள்!

உயிர் மொழி!
உயிர் மொழி!
(காத்திருங்கள்...)